என் மலர்
நாமக்கல்
- மாணவி கதறி அழுதபடி அவ்வழியாக வந்தவர்களிடம் உதவி கேட்டு, பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
- போலீசார் மணிகண்டனை பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
ராசிபுரம்:
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.
மாணவி, நேற்று மதியம் ஆண்டகளூர் கேட் பகுதியில் இருந்து, கல்லூரிக்கு செல்வதற்காக அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரிடம் லிப்ட் கேட்டார். அந்த வாலிபர், மாணவியை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
சிறிது தூரம் சென்றதும் அந்த வாலிபர், அணைப்பாளையம் புறவழிச்சாலை வழியாக சிங்களாந்தபுரம் கரட்டு பகுதிக்கு மாணவியை கூட்டிச் சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வாலிபரிடம் கேட்டபோது, மாணவியை மிரட்டி, அடர்ந்த முள்காடு பகுதியில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் மாணவியிடம் இது பற்றி வெளியே சொன்னால் தீர்த்துக்கட்டி விடுவேன் என மிரட்டி விட்டு, மாணவியிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பித்து சென்று விட்டான்.
இதையடுத்து மாணவி கதறி அழுதபடி அவ்வழியாக வந்தவர்களிடம் உதவி கேட்டு, பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார், முதலில் மாணவியை மீட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மாணவியை பலாத்காரம் செய்தது ராசிபுரம் அடுத்த தொப்பம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், மணிகண்டனை பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, டிப்ளமோ படித்துவிட்டு, இவர் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒன்பதாம் பாலிக்காடு பகுதியில் உள்ள கரும்பு அரவை ஆலையில் ஊழியராக வேலை செய்து வரும், பெண்களிடம் அத்துமீறி நடப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது இளம்பெண் கடத்தல், கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தல் என 366, 376, 394, 6-397 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து ஜெயிலில் அடைப்பதற்காக போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
தொடர்ந்து இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார், தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் புகார் பதிவு செய்த 6 மணி நேரத்தில் குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்ததை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
கைதான மணிகண்டன், கடந்த 2016-ம் ஆண்டு திருச்செங்கோடு அருகே உள்ள ராயர்பாளையம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த பாவாயி (70) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். மணிகண்டன் குடிபோதையில் அங்கு செல்வார். இதனால் பாவாயி, மது குடித்து விட்டு வரக்கூடாது என சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டனும், அவரது நண்பரும் அங்கு சென்று விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்த பாவாயியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
- ஆடி மாதம் எந்தவொரு சுப நிகழ்ச்சியும் நடைபெறாது. இதுபோல் வடமாநிலங்களிலும் சுப நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது.
- கடந்த சில மாதங்களாக விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துவிட்டது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஜவுளி உற்பத்தி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவற்றில் லுங்கி, கர்ச்சீப், துண்டு, வேட்டி என அனைத்துவித ஜவுளி ரகங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், ஆடி மாதத்தில் ஜவுளி உற்பத்திக்கு ஆர்டர் இல்லாதது, உற்பத்தி செய்த ஜவுளிகள் தேக்கம் காரணமாக இங்குள்ள விசைத்தறி கூடங்களுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கொங்கு பவர்லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறியுள்ளார்.
ஆடி மாதம் எந்தவொரு சுப நிகழ்ச்சியும் நடைபெறாது. இதுபோல் வடமாநிலங்களிலும் சுப நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது. எனவே இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களுக்கு ஆர்டர் கிடைக்காது.
இதையடுத்து ஒரு வாரம் ஜவுளி உற்பத்தியை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி நேற்று முதல் ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் உற்பத்தி செய்த ஜவுளி ரகங்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை இருந்து வந்தது. தற்போது ஆர்டரும் கிடைக்காத நிலை உள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், விடுமுறை மேலும் நீட்டிக்கப்படும்.
எனவே ஜவுளி வியாபாரத்திற்கு ஆண்டு முழுவதும் ஆர்டர் கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் ஒரு வார கால விடுமுறையால் 5 ஆயிரம் விசைத்தறிக் கூடங்களில் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
பள்ளிபாளையம் வட்டார விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பி.எஸ்.கந்தசாமி கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துவிட்டது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே விசைத்தறி கூடங்கள் செயல்பட்டது. மற்ற 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனை ஆகாமல் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் பல விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் நிலை ஏற்பட்டது. இதே நிலை நீடித்தால், விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.
வழக்கமாக தீபாவளி, பொங்கல், ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பண்டிகை நேரங்களில் ஆர்டர், உற்பத்தி, விற்பனை சீராக இருக்கும். தற்போது ஆடி பிறந்த நிலையில் ஆர்டர்கள் இல்லாததால், விற்பனையும் இல்லை. இதனால் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இன்னும் 3 மாதங்களில் தீபாவளி வர உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக ஆடிபெருக்கு பண்டிகைக்கு ஆர்டர் வரும். தற்போது அதுவும் இல்லாத நிலையில், தீபாவளி ஆர்டர் கேள்விக்குறியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
- இதில் 140-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 140-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது தூய்மை பணியாளர்கள் வேலை குறைபாடு காரணமாக, அதிருப்தியில் இருந்த பொதுமக்கள் செயல் அலுவலர் திருநாவுக்கரசிடம் புகார் அளித்தனர். பொதுமக்கள் புகாரின் பேரில் வேலூர் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வந்து உரிய வேலைகளை செய்ய வேண்டும் என எச்சரித்தார்.
பேரூராட்சி ஊழியர்களை கண்காணித்த செயல் அலுவலர் திருநாவுக்கரசு, சரியான நேரத்துக்கு பணிக்கு வராததாலும் மேலும் கொடுத்த பணிகளை அலச்சியமாக செய்த காரணத்தினாலும், துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன், தாமரைச்செல்வி மற்றும் மின் பணியாளர் சீனிவாசன் ஆகியோருக்கு உரிய விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளார்.இது வேலூர் பேரூராட்சி ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வேலூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து ஊழியர்களும் பஞ்சாயத்து நிர்வாகம் கொடுக்கும் பணிகளை உரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். வேலை செய்யாமல் ஏமாற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
வேலூர் வேலூர் பேரூராட்சிக்கு செயல்அலுவலர் திருநாவுக்கரசு பொறுப்பேற்று ஒரு மாதமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- நலத்திட்ட உதவி மற்றும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்ட றிந்தார்.
கூட்ட த்தில் பொது மக்கள் முதியோர் உதவி த்தொகை, விதவை உதவி த்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை ப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 452 மனுக்களை வழங்கி னார்கள். அவற்றை பரி சீலனை செய்த கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில், ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6,000 வீதம் ரூ.18,000 மதிப்பில் 3 பயனாளிகளுக்கு இலவச தையல் மெஷின்கள், தாட்கோ சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ. 3,500 மதிப்பில் சலவைப்பெட்டி, ஒரு விவசாயிக்கு நிலம் வாங்கு வதற்காக, மானி யத்துடன் ரூ. 4,05,000 கடன் உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவி மற்றும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை யின் சார்பில் தலா ரூ.2,780 வீதம் ரூ.11,120 மதிப்பில் 4 மாற்றுத்தி றனாளிகளுக்கு காதொலி கருவிகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், மாவட்ட தாட்கோ மேலா ளர் ராமசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மட்டும் காவிரி ஆற்றில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.
- இது குறித்து அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீ சார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் குமார் (வயது 22) அவரது நண்பர்களான மனோஜ் (22), மணிகண்டன் (19), வெங்கடேஷ் (19), கண்ணன் (23) ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம் ஜேடர்பாளையம் பரிசல் துறை பகுதி காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மட்டும் காவிரி ஆற்றில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீ சார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் உதவி யுடன் காவிரி ஆற்றில் மூழ்கிய சதீஷ்குமாரை நேற்று மாலை வரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டாவது நாளாக ஜேடர்பாளையம் போலீசார் மீனவர்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் தேடி வந்தனர்.
தீவிர தேடுதலுக்கு பிறகு நேற்று மாலை ஜேடர்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் காவிரி ஆற்றின் எதிர்கரை யான ஈரோடு மாவட்டம், காசிபாளையம் பகுதி காவிரி ஆற்றின் ஓரத்தில் சதீஷ்குமார் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜஹாங்கீர்காசி, (30). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஜவுளி தயாரிப்பு ஆலையில், குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்தார்.
- குமாரபாளையம் அருகே நேரு நகர் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினி சரக்குவேன் ஜஹாங்கீர்காசி மொபட் மீது மோதியது.
குமாரபாளையம்:
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜஹாங்கீர்காசி, (30). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஜவுளி தயாரிப்பு ஆலையில், குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்தார்.
இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தன் உறவினரை பார்த்து விட்டு, மனைவி பாத்திமா(25), மாமியார் தாராகாசி (50) ஆகியோருடன், தனது மொபட்டில் நேற்று காலை பெருந்துறை நோக்கி, சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நேரு நகர் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினி சரக்குவேன் ஜஹாங்கீர்காசி மொபட் மீது மோதியது. இதில் 3 பேரும் கீழே விழுந்து படுகாய மடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குமாரபாளையம் போலீசார் 3 பேரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியிலேயே, ஜஹாங்கீர்காசி மற்றும் அவரது மாமியார் தாராகாசி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாத்திமா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து குமாரபாளை யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ .14.52 லட்சத்துக்கு ஏலம் போனது.
- இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ .14.52 லட்சத்துக்கு ஏலம் போனது.
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை
விற்பனை கூடம் செயல் பட்டு வருகிறது. இங்கு
வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய்
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 57.11 குவிண்டால் எடை கொண்ட 16 ஆயிரத்து 549 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.76-க்கும், சராசரி விலையாக ரூ.21.65-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து12ஆயிரத்து 228-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 190.52 1/2 குவிண்டால் எடை கொண்ட 398-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.46-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.69-க்கும், சராசரி விலையாக ரூ.75.89-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.73,89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.56.35-க்கும், சராசரி விலையாக ரூ.70.45-க்கும் என மொத்தம் ரூ.13லட்சத்து46ஆயிரத்து 248-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 13 லட்சத்து 58 ஆயிரத்து 476-க்கு விற்பனையானது.
- ஆடி பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வேக வைத்த தேங்காயை கொண்டு சென்று அங்கு தேங்காயை உடைத்து வைத்து வழிபட்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர் ,பாண்டமங்கலம், பாலப்பட்டி, மோக னூர், வெங்கரை, ஜேடர்பா ளையம், ஆனங்கூர் பிலிக்கல் பாளையம் , கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், கூடசேரி உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் ஆடி பண்டி கையை முன்னிட்டு நேற்று மாலை தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இளைஞர்கள், குழந்தைகள் அவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் ஒன்று திரண்டு தேங்காய்களை எடுத்து தேங்காயில் துவாரம் போட்டு தேங்காய்க்குள் இருக்கும் தண்ணீருக்குள் வருத்த கடலை, பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, எள் , பாசிப்பருப்பு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை பொடியாக்கி உள்ளே போட்டனர். பின்னர் தேங்கா யில் உள்ள துவா ரத்தில் அழிஞ்சி குச்சியின் ஒரு முனையை வைத்து அடைத்து மறுமுனையின் குச்சியை கையில் பிடித்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள பொது இடத்தில் தீ மூட்டி அந்த தீயில் நன்றாக தேங்காயை வேக வைத்தனர்.
பின்னர் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வேக வைத்த தேங்காயை கொண்டு சென்று அங்கு தேங்காயை உடைத்து வைத்தனர்.
பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விநாயகப் பெருமானை வழிபட்டு தேங்காயிலிருந்த கலவைகளை எடுத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தனர்.
- நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
- வேலூர் பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலர் சுகந்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனி ஒருவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரமத்தி வேலூர்:
வேலூர் பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலர் சுகந்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனி ஒருவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 17- வது வார்டு கவுன்சிலராக பா.ம.க.,வை சேர்ந்த சுகந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று மதியம் பேரூராட்சி அலுவலகத்திற்கு தனியாக வந்த கவுன்சிலர் சுகந்தி, பேரூராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு நின்று கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கவுன்சிலர் சுகந்தி கூறியதாவது:-எனது வார்டில் 450 வீடுகளில் 3000 பேர் வசித்து வருகின்றனர்.
6 மாதங்களாக பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், எனது வார்டுக்கு சரிவர வருவதில்லை. பலமுறை பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளேன் .ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் எனது வார்டில் சாக்கடை தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இங்குள்ள குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் தொட்டி உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனது வார்டில் கொசு மருந்து அடித்து பல மாதங்கள் ஆகின்றது. ஒவ்வொரு முறையும் வந்து கூறும் போது செயல் அலுவலர் செய்து தருவதாக உத்தரவாதம் அளிக்கின்றார் .ஆனால் எந்த பணியும் நடக்கவில்லை. இதேபோல் தொடர்ந்தால் எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் சுகந்தி யிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து பணிகளையும் செய்து தருவதாக பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- நாமக்கல்லில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
- இன்று காலை முதல் காவிரி ஆற்றில் மூழ்கிய சதீஷ்குமாரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் மாரப்பன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 22).
இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு பிரியா (22) என்ற மனைவி உள்ளார்.
சதீஷ்குமார், அவரது நண்பர்களான மனோஜ் (22), மணிகண்டன் (19), வெங்கடேஷ் (19), கண்ணன் (23) ஆகியோருடன் நேற்று மதியம் ஜேடர்பாளையத்தில் உள்ள பரிசல் துறை பகுதியில், காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்கு சதீஷ்குமார் சென்றுள்ளார். இதில், எதிர்பாராதவிதமாக சதீஷ்குமார் காவிரி ஆற்றில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர், மீனவர்கள் உதவியுடன் படகு மூலம் காவிரி ஆற்றில் மூழ்கிய சதீஷ்குமாரை நேற்று தேடினர்.
இரவு வரை தேடியும் சதீஷ்குமார் கிடைக்காததால், தீயணைப்பு துறையினர் தற்காலிகமாக தேடும் பணி நிறுத்தி விட்டனர். மீண்டும் 2-வது நாளாக இன்று காலை முதல் காவிரி ஆற்றில் மூழ்கிய சதீஷ்குமாரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 5-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
- முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் துணைத் தலைவர் அன்பரசன், செயல் அலுவலர் ரவிசங்கர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 5-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் துணைத் தலைவர் அன்பரசன், செயல் அலுவலர் ரவிசங்கர், வார்டு உறுப்பினர்கள். இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வை யாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியா ளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 9-வது வார்டு பகுதிகளில் உள்ள செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின் விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பரா மரிப்பு செய்தல் போன்ற பொதுமக்களின் அத்தியா வசிய தேவைகள் அனைத்தும் மேற்கொண்டனர்.
- சேகர் (வயது 50) இவர் தோட்டத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அதிகமாக இருந்தது.
- சுத்தம் செய்வதற்காக வளையப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள சித்ர மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50).
இவர் தோட்டத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அதிகமாக இருந்தது. அதை சுத்தம் செய்வதற்காக வளையப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்தார்.
பொக்லைன் எந்திரத்தை டிரைவர் சஞ்சீவி என்பவர் இயக்கி, கிணற்றை சுற்றியிருந்த மரங்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றிக் ெகாண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பொக்லைன் எந்திரம் விழுந்தது.
அப்போது, டிரைவர் சஞ்சீவி மரக்கிளையை தாவி பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து, நாமக்கல்லில் இருந்து ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் சுமார் 7 மணி நேரம் போராடி, கிணற்றில் விழுந்த பொக்லைன் எந்திரம் மீட்கப்பட்டது.






