search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் பேரூராட்சி ஊழியர்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
    X

    வேலூர் பேரூராட்சி ஊழியர்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

    • வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
    • இதில் 140-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 140-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    தற்போது தூய்மை பணியாளர்கள் வேலை குறைபாடு காரணமாக, அதிருப்தியில் இருந்த பொதுமக்கள் செயல் அலுவலர் திருநாவுக்கரசிடம் புகார் அளித்தனர். பொதுமக்கள் புகாரின் பேரில் வேலூர் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வந்து உரிய வேலைகளை செய்ய வேண்டும் என எச்சரித்தார்.

    பேரூராட்சி ஊழியர்களை கண்காணித்த செயல் அலுவலர் திருநாவுக்கரசு, சரியான நேரத்துக்கு பணிக்கு வராததாலும் மேலும் கொடுத்த பணிகளை அலச்சியமாக செய்த காரணத்தினாலும், துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன், தாமரைச்செல்வி மற்றும் மின் பணியாளர் சீனிவாசன் ஆகியோருக்கு உரிய விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளார்.இது வேலூர் பேரூராட்சி ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் வேலூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து ஊழியர்களும் பஞ்சாயத்து நிர்வாகம் கொடுக்கும் பணிகளை உரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். வேலை செய்யாமல் ஏமாற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

    வேலூர் வேலூர் பேரூராட்சிக்கு செயல்அலுவலர் திருநாவுக்கரசு பொறுப்பேற்று ஒரு மாதமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×