ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு

காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மட்டும் காவிரி ஆற்றில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீ சார்‌ மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு
Published on

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் குமார் (வயது 22) அவரது நண்பர்களான மனோஜ் (22), மணிகண்டன் (19), வெங்கடேஷ் (19), கண்ணன் (23) ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம் ஜேடர்பாளையம் பரிசல் துறை பகுதி காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மட்டும் காவிரி ஆற்றில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீ சார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் உதவி யுடன் காவிரி ஆற்றில் மூழ்கிய சதீஷ்குமாரை நேற்று மாலை வரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டாவது நாளாக ஜேடர்பாளையம் போலீசார் மீனவர்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் தேடி வந்தனர்.

தீவிர தேடுதலுக்கு பிறகு நேற்று மாலை ஜேடர்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் காவிரி ஆற்றின் எதிர்கரை யான ஈரோடு மாவட்டம், காசிபாளையம் பகுதி காவிரி ஆற்றின் ஓரத்தில் சதீஷ்குமார் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com