என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் அருகே விபத்தில் மாமியார், மருமகன் பலி
- ஜஹாங்கீர்காசி, (30). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஜவுளி தயாரிப்பு ஆலையில், குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்தார்.
- குமாரபாளையம் அருகே நேரு நகர் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினி சரக்குவேன் ஜஹாங்கீர்காசி மொபட் மீது மோதியது.
குமாரபாளையம்:
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜஹாங்கீர்காசி, (30). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஜவுளி தயாரிப்பு ஆலையில், குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்தார்.
இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தன் உறவினரை பார்த்து விட்டு, மனைவி பாத்திமா(25), மாமியார் தாராகாசி (50) ஆகியோருடன், தனது மொபட்டில் நேற்று காலை பெருந்துறை நோக்கி, சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நேரு நகர் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினி சரக்குவேன் ஜஹாங்கீர்காசி மொபட் மீது மோதியது. இதில் 3 பேரும் கீழே விழுந்து படுகாய மடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குமாரபாளையம் போலீசார் 3 பேரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியிலேயே, ஜஹாங்கீர்காசி மற்றும் அவரது மாமியார் தாராகாசி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாத்திமா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து குமாரபாளை யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






