என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • காய்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமை தாங்கினார்.

    திருச்செங்கோடு:

    காய்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வக்கீல் சந்திர சேகர், திருச்செங்கோடு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அணிமூர் மோகன், சந்திர சேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணை தலைவர் முருகேசன், திருச் செங்கோடு நகர செயலாளர் அங்கமுத்து மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்று தி.மு.க. அரசை கண்டித்து பல்ேவறு கோஷங்கள் எழுப்பினர்.

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முன்னிலை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் பல்வேறு பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து, திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பயோ மெட்ரிக் கருவிகள் வைப்பு அறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

    இந்த ஆய்வின்போது முகாமிற்கு தேவையான கருவிகள் உள்ளனவா என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவாக எடுத்துரைத்து நிவர்த்தி செய்ய வேண்டும் என கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    ஆய்வு

    மேலும், சட்டையம்புதூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு மாதிரி முகாம் நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டு முகாமில் அமைக்கப்பட்டுள்ள தன்னார்வலர் உதவி மையம், விண்ணப்ப பதிவு மையம், விண்ணப்ப பதிவு செய்யும் தன்னார்வலர்களின் பணிகள், விண்ணப்ப பதிவு நடைமுறைகள், பொதுமக்கள் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் ஆகியவைகள் குறித்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

    அடிப்படை வசதிகள்

    இந்த ஆய்வின் போது பொதுமக்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் போது அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    மேலும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளையும் உறுதி செய்து கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    பின்னர் திருச்செங்கோடு நகராட்சியில் சூரியம்பாளையம் நியாய விலை கடை, ராஜா கவுண்டம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஆண்டிப்பாளையம், அணிமூர் கிராம ஊராட்சி சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டார்கள்.

    மேலும் திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் இரண்டு இ - சேவை மையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மையத்தில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .சிவகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் .செல்வகுமரன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பிரியா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி, இ-சேவை மாவட்ட மேலாளர் சுந்தரராஜ், திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் .ஜெயராமராஜா, தாசில்தார் பச்சமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், .கஜேந்திரபூபதி, அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சித்திக் (33) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து மது விற்பனை செய்வதாக வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை வாழ்ராஜபாளையம் பகுதியில் சித்திக் (33) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து மது விற்பனை செய்வதாக வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 704 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சித்திக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர். மேலும் 704 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா குன்னத்தூர் ஊராட் சிக்கு உட்பட்ட எட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த குன்னத் தூர் மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
    • மகா மாரியம்மன் கோவிலில் மண்டலா பிஷேகம் தினந்தோறும் சிறப்பு பூஜைகளுடன் தொடர்ந்து நடந்து வந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து மகா மாரியம்மன் கோவிலில் மண்டலா பிஷேகம் தினந்தோறும் சிறப்பு பூஜைகளுடன் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் மண்டலாபி ஷேக 48 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க தீர்த்த குடங்களுடன் ஊர்வல மாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அக்கினி குண்டம் அமைக்கப்பட்டது. 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்கு களுக்கு புனித நீர் ஊற்றி மலர்கள் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்தனர்.மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. அபிஷேகத்தை முன்னிட்டு மகா மாரி யம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    • விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.
    • வெற்றிலை வரத்து அதிகரிப்பால் வெற்றிலை‌ விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான நன்செய் இடையாறு, குச்சிபாளையம் குப்புச்சிபாளையம், ஓலப்பாளையம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, அண்ணா நகர், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.

    வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர்.

    பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூர்-கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்து 500க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் வாங்கிச் சென்றனர்.

    நேற்று வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம் பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்து 500க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ஆயிரத்து 700க்கும் வாங்கிச் சென்றனர். வெற்றிலை வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • கோட்டையானது 16-ம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமசந்திரன் நாயக்கரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
    • கோட்டை மதில் சுவர் இடிந்து விழும் முன் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. ஒரே கல்லால் ஆன இந்த மலையின் உச்சியில் 246 அடி உயரத்தில் கோட்டை மதில்சுவர் உள்ளது.

    இக்கோட்டையானது 16-ம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமசந்திரன் நாயக்கரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

    ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடுவதற்காக திப்புசுல்தான் இம்மலைக் கோட்டையை பயன்படுத்தினார் என்ற வரலாற்று தகவல்களும் உண்டு.

    இத்தகைய சிறப்பு மிக்க மலைக்கோட்டையின் மேல் வரதராஜ பொருமாள் கோவிலும், மசூதியும் உள்ளன. இவை தவிர மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள குடைவறைக் கோவில்களான நரசிம்மர், அரங்கநாதர் கோவில்களும், மலையை ஒட்டி கமலாலயக் குளம் ஆகியவையும் உள்ளன.

    நாமக்கல் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோட்டையை சுற்றி பார்த்து செல்வர்.

    இந்நிலையில் மலைக்கோட்டையின் மதில்சுவரானது ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. மேலும் மழை பெய்யும்போது மதில் சுவரின் அடிப்பாகத்தில் இருந்து தண்ணீர் அருவி போல் வெளியேறுகிறது.

    இதனால் சுவரின் உறுதி தன்மை பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

    இதனால் கோட்டை மதில் சுவர் இடிந்து விழும் முன் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதால் மத்திய தொல்லியல் துறையினர் நாமக்கல் மலைக் கோட்டையை நேரடியாக ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து சேலம் மண்டல மத்திய தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீதர் கூறியதாவது:

    நாமக்கல் மலைக் கோட்டை மதில்சுவர் ஆங்காங்கே இடிந்தும், விரிசல் அடைந்தும் உள்ளது. இதனை சீரமைக்க விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    மேலும் காலை, இரவு நேரங்களில் மலைக்கோட்டையை ஆக்கிரமத்துக் கொள்ளும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்த நுழைவு வாயில் பகுதியில் இரும்பு வேலி அமைக்கவும், நரசிம்மர் கோவில் கொடிமர மண்டபத்தில் உள்ள விரிசலை புனரமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி தொல்லியல் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

    அனுமதி கிடைத்ததும் மலைக்கோட்டை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலை நான்கு ரோட்டில் தேவி பேக்கரி கடை உள்ளது. அ
    • அருகில் இருந்த கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 7 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலை நான்கு ரோட்டில் தேவி பேக்கரி கடை உள்ளது. அதன் உரிமையாளர் வழக்கம்போல் இரவு கடையை 10 மணிக்கு மூடிவிட்டு சென்றுள்ளார்.அதிகாலை 2 மணிக்கு மோட்டார் சைக்கில் வந்த 2 மர்மநபர்கள் கடையின் முன்பு நோட்டமிட்டு, சட்டரை உடைத்து உள்ளே இருந்த 12 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். அதேபோல் அருகில் இருந்த கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 7 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர். திருவள்ளுவர் சிலை அருகே உள்ள மளிகை கடையில் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். முடியாமல் போனதால், பைபாஸ் சாலையில் உள்ள பர்னிச்சர் கடையில் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர். மேலும் அங்கு பதிவாகியிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை வைத்து மர்ம நபர்களை பரமத்திவேலூர் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரே இரவில் நடந்துள்ளது. அதிகாலையில் குறி வைத்து மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடும் சம்பவத்தால் வியாபாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே ரோந்து பணியை போலீசார் தீவிர படுத்த வேண்டும் என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • சுகாதார பணியில் 25 தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வேலைக்கு வராத நாட்களில், போலியாக கையொப்பமிட்டு பணம் மோசடி நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம்பாளையம் பேரூராட்சி 10.50 சதுர கிலோமீட்டர் பரபரப்பளவு கொண்டது.

    மோசடி

    இங்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். சுகாதார பணியில் 25 தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வேலைக்கு வராத நாட்களில், போலியாக கையொப்பமிட்டு பணம் மோசடி நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.

    மேலும் பேரூராட்சி அலுவலர்கள் போலி பில் மூலம் பணம் மோசடி செய்துள்ளதாகவும், கட்டடம் கட்டுவதற்கான புளுபிரிண்ட் அனுமதி பெறுவதிலும், பேரூராட்சி அலுவலர்கள் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

    விசாரணை

    இதன்பேரில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார், கடந்த 13-ந் தேதி முதல் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக கடந்த 6 நாட்களாக பேரூராட்சி அலுவலர்களை நேரில் அழைத்து விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.

    தொடர்ச்சியாக நேற்று பேரூராட்சி டைபிஸ்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் துப்புரவு மேஸ்திரி ஆகியோரிடமும் விசாரணை செய்தனர். மேலும் இதுதொடர்பாக நிறைய போலி பில்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், பேரூராட்சி அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் இறுதியில் தான் புகார் குறித்த உண்மை நிலை தெரியவரும் என்றனர்.

    • பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
    • இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    மரவள்ளி கிழங்கு

    இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்பொழுது ரூ.14ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கடந்த வாரம் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    மரவள்ளி கிழங்கு விலை உயந்துள்ளதால் மரவள்ளிகிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மகிழ்ச்சி

    இது குறித்து மரவள்ளி கிழங்கு வியாபாரி கூறு கையில், கடந்த வருடம் மரவள்ளி கிழங்கு பயிர்கள் நோய் தாக்குதலால் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால் நடப்பாண்டு குறைந்த அளவே மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது விளைச்சலில் உள்ள மரவள்ளிக்கிழங்கு அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. மேலும் ஜவ்வரிசி விலை உயர்ந்து கொண்டே வருவதால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும் என கூறினார்.

    • மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் உரிமம் பெறாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
    • உரிமம் பெறாமல், மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் உரிமம் பெறாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அவ்வாறு முறையான உரிமம் பெறாமல், மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பிடிபட்டால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படுவதோடு, நிறுவனத்தின் மீது வழக்கும் பதிவு செய்யப்படும்.

    அதனால், வணிகர்கள், உரிமம் பெறாமல் மருந்து பொருட்களைவிற்பனை செய்ய வேண்டாம். அதேபோல், எலிகளை கொல்லும் எலி கேக், எலி பேஸ்ட் போன்ற அனைத்து எலி மருந்துகளும், கடைகளில் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றை மளிகை கடை உள்ளிட்ட எந்த ஒரு கடைகளிலும் விற்பனை செய்ய வேண்டாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொத்தனூர் பேரூராட்சி பகுதியில் மின் மோட்டார் வயர்களை திருடிய மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக வேலூர் போலீஸ் நிலையத்தில் பொத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் புகார் செய்தார்.
    • பொத்தனூர் சிவன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட காக்கா தோப்பில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம், எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள ஆண்கள் சுகாதார வளாகம் மற்றும் காவிரி ஆற்றில் உள்ள நீரேற்று நிலையம் ஆகிய இடங்களில் உள்ள மின் மோட்டார் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக வேலூர் போலீஸ் நிலையத்தில் பொத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் மின் மோட்டார் வயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் இந்திராணி பொத்தனூர் சிவன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பொத்தனூர் பொத்தக்காரன் தோட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன்கள் ராமன் (19), லட்சுமணன் (19)மற்றும் வேலூர், திருவள்ளூர் சாலையை சேர்ந்த முத்துசாமி மகன் கோகுல் (19) ஆகியோர் என்பது தெரியவந்ததது. இதனையடுத்து அந்த 3 பேர்களையும் வேலூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 400 அடி நீளமுள்ள மின் மோட்டார் வயர்களை பறிமுதல் செய்தனர். 

    • இரவு வீட்டின் போர்டிகோவில் சரண்யா செல்போன் பேசிக்கொண்டு இருந்தார்.
    • வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு முதுகில் குத்திவிட்டு ஓடிவிட்டார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி செரமிட்டாம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விசைத்தறி அதிபர். இவரது மனைவி சரண்யா (வயது 36).

    கடந்த 14-ந் தேதி இரவு வீட்டின் போர்டிகோவில் சரண்யா செல்போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த மகன் ஷர்ஷித் (12) சத்தம் போட்டு உள்ளான்.

    முகமூடி கொள்ளையன்

    சத்தம் கேட்டு வீட்டிற்குள் சென்ற சரண்யாவை முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு முதுகில் குத்திவிட்டு ஓடிவிட்டார். இதையடுத்து காயம் அடைந்த சரண்யாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து சரண்யா, திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பிடிபட்டார்

    இந்தநிலையில் திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குமாரமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில், நாமக்கல் மேட்டுப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த பாண்டி என்கிற ராஜன் (வயது 38) என்பதும் செரமிட்டாம் பாளையம்புதூர் பகுதியில் சரண்யாவிடம் 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    25-க்கும் மேற்பட்ட வழக்குகள்

    தொடர்ந்து அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. பாண்டி மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்துமே அடிதடி, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் ஆகும்.

    இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    ×