என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிப்பாளையம் அருகே வீடு வாடகைக்கு எடுத்து மது விற்பனை செய்த வாலிபர் கைது
    X

    பறிமுதல் செய்த மதுபாட்டில்களுடன் போலீசார்

    பள்ளிப்பாளையம் அருகே வீடு வாடகைக்கு எடுத்து மது விற்பனை செய்த வாலிபர் கைது

    • சித்திக் (33) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து மது விற்பனை செய்வதாக வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை வாழ்ராஜபாளையம் பகுதியில் சித்திக் (33) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து மது விற்பனை செய்வதாக வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 704 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சித்திக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர். மேலும் 704 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×