என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது
    X

    மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது

    • பொத்தனூர் பேரூராட்சி பகுதியில் மின் மோட்டார் வயர்களை திருடிய மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக வேலூர் போலீஸ் நிலையத்தில் பொத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் புகார் செய்தார்.
    • பொத்தனூர் சிவன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட காக்கா தோப்பில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம், எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள ஆண்கள் சுகாதார வளாகம் மற்றும் காவிரி ஆற்றில் உள்ள நீரேற்று நிலையம் ஆகிய இடங்களில் உள்ள மின் மோட்டார் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக வேலூர் போலீஸ் நிலையத்தில் பொத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் மின் மோட்டார் வயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் இந்திராணி பொத்தனூர் சிவன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பொத்தனூர் பொத்தக்காரன் தோட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன்கள் ராமன் (19), லட்சுமணன் (19)மற்றும் வேலூர், திருவள்ளூர் சாலையை சேர்ந்த முத்துசாமி மகன் கோகுல் (19) ஆகியோர் என்பது தெரியவந்ததது. இதனையடுத்து அந்த 3 பேர்களையும் வேலூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 400 அடி நீளமுள்ள மின் மோட்டார் வயர்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×