search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Physical Recovery"

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
    • போலீசார் விரைந்து வந்து பலராமனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன்(வயது48). கூலித்தொழிலாளி. இவரது முதல் மனைவி ஏற்கனவே பிரிந்து சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து பலராமன் பள்ளாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்தி என்பவரை 2-வதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

    பலராமனுக்கு மது பழக்கம் உள்ளது. அடிக்கடி அவர் மதுகுடித்து வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த ஆனந்தி கணவரை பிரிந்து தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பலராமன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து வந்து வீட்டில் படுத்தார். பின்னர் அவர் வெளியே செல்லவில்லை.

    இந்நிலையில் பலராமன் வீடு பூட்டியே கிடந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் பலராமன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கூடுதல் மதுபோதையில் அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து திருத்தணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலராமனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மட்டும் காவிரி ஆற்றில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.
    • இது குறித்து அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீ சார்‌ மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் குமார் (வயது 22) அவரது நண்பர்களான மனோஜ் (22), மணிகண்டன் (19), வெங்கடேஷ் (19), கண்ணன் (23) ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம் ஜேடர்பாளையம் பரிசல் துறை பகுதி காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மட்டும் காவிரி ஆற்றில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீ சார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் உதவி யுடன் காவிரி ஆற்றில் மூழ்கிய சதீஷ்குமாரை நேற்று மாலை வரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டாவது நாளாக ஜேடர்பாளையம் போலீசார் மீனவர்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் தேடி வந்தனர்.

    தீவிர தேடுதலுக்கு பிறகு நேற்று மாலை ஜேடர்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் காவிரி ஆற்றின் எதிர்கரை யான ஈரோடு மாவட்டம், காசிபாளையம் பகுதி காவிரி ஆற்றின் ஓரத்தில் சதீஷ்குமார் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுதாகர் தனது நண்பர்கள் 6 பேருடன் விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணைக்கு இன்ப சுற்றுலா சென்றார்.
    • பொதுமக்களின் உதவியுடன் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் திருபுவனை புதுக்காலனியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணைக்கு இன்ப சுற்றுலா சென்றார். அங்கு வீடூர் அணையின் கரையில் அமர்ந்து அனைவரும் மது அருந்தினர். பின்னர் அணையின் கரையில் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுதாகர் நீரில் மூழ்கினார். அவரது நண்பர்கள் அவரை நீரில் மூழ்கி நீச்சல் அடித்து தேடினர். இதில் சுதாகரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதை யடுத்து அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காத்தமுத்து, பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து விக்கிரவாண்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஷ்வரன் தலைமையிலான வீரர்கள் வீடூர் அணைக்கு வந்து இரவு 8 மணிவரை மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வீடூர் அணைக்கு மீண்டும் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அவர் குளித்த இடத்தின் அருகிலேயே சேற்றில் சிக்கி மூச்சித் திணறி இறந்து கிடந்தார். உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் வீடூர் அணையின் கரையில் வைத்தனர். விக்கிரவாண்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத ப ரிசோதைனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×