search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yellow auction"

    • கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 1800 மூட்டைகள் ரூ.1கோடியே 50லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10622 முதல்ரூ.17042 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10558 முதல் ரூ.15212 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.12199 முதல் ரூ 15022 வரையிலும் விலை போனது.மொத்தம் 1800 மூட்டைகள் ரூ.1கோடியே 50லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது.
    • அரியாக்கவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

    நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் அரியாக்கவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர். அதேபோல் ஒடுவன்குறிச்சி, ஈரோடு, சேலம்,ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மஞ்சளை ஏலம் எடுப்பதற்காக வந்திருந்தனர். இதில் விரலி ரகம் 550 மூட்டைகளும், உருண்டை ரகம் 250 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன. விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 42 முதல் அதிகப்பட்சமாக ரூ.17 ஆயிரத்து 899-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 512-க்கும், அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 602-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 602-க்கும், அதிகப்பட்சமாக ரூ.17 ஆயிரத்து 12-க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 820 மஞ்சள் மூட்டைகள் ரூ. 70 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரத்தை விட நேற்று நடந்த மஞ்சள் ஏலத்தில் அதிக விலைக்கு மஞ்சள் விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
    • 1500 மூட்டைகள் தொகை ரூ.75 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.9,938 முதல் ரூ.12,669 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.8,591 முதல் ரூ.10,449 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.11,001 முதல் ரூ.13,699 வரையிலும் விலை போனது. 1திருச்செங்கோட்டில் மஞ்சள் ஏலம்500 மூட்டைகள் தொகை ரூ.75 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • இதில் விரலி ரகம் 350 மூட்டைகளும், உருண்டைய ரகம் 150 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டு இருந்தன.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரகம் 350 மூட்டைகளும், உருண்டைய ரகம் 150 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டு இருந்தன.

    விரலி ரகம் ஒரு குவிண் டால் குறைந்தபட்சமாக ரூ.5,852-க்கும், அதிகப்பட்சமாக ரூ.10,199-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சமாக ரூ.5,302-க்கும், அதிகபட்சமாக ரூ.7,779-க்கும், பனங்காலிநாமகிரிப்பேட்டையில்

    ரூ.25 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் ரகம் குறைந்தபட்சமாக ரூ.2,769-க்கும், அதிகப்பட்சமாக ரூ.15,066-க்கும் ஏலம் போனது. இதன்படி, மொத்தம் 520 மஞ்சள் மூட்டைகள், ரூ. 25 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
    • இந்த ஏலத்தில் மொத்தம் மூட்டைகள் 2500 தொகை ரூ. 1 கோடியே 25 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. அதில், விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6599 முதல் ரூ.9299 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.6339 முதல் ரூ.7702 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரூ. 10009 முதல் ரூ. 14202 வரையிலும் விலை போனது. இந்த ஏலத்தில் மொத்தம் மூட்டைகள் 2500 தொகை ரூ. 1 கோடியே 25 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள்‌ கூட்டுறவு விற்பனைச்‌ சங்கத்தில்‌ பிரதிவாரம்‌ சனிக்கிழமை மஞ்சள்‌ ஏலம்‌ நடைபெற்று வருகிறது.
    • மஞ்சள்‌ ஏலம்‌ போதிய கிடங்கு வசதி இல்லாத காரணத்தால்‌ ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்‌.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பிரதிவாரம் சனிக்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இன்று(சனிக்கிழமை) நடைபெற இருந்த மஞ்சள் ஏலம் போதிய கிடங்கு வசதி இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு புது மஞ்சள் ஏலம் ஆரம்பித்த நாள் முதலே போதிய இடவசதி இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஏலம் நடைபெறுமா? இல்லையா? என போன் மூலம் கேட்டுக் தெரிந்த பிறகே மஞ்சள் கொண்டு வரவேண்டி உள்ளது. இந்த ஆண்டு மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் விற்பனை செய்வதும் கடினமாக உள்ளது. இந்த ஆண்டு திருச்செங்கோடு நகரின் பல பகுதிகளில் வாடகை கிடங்குகளிலேயே ஏலம் நடைபெறுகிறது.

    அதனால் கிடங்குகள் உள்ள இடங்களை கண்டு பிடிக்க முடியாமல் சிரமப்படுகிறோம். இதனால் லாரி வாடகை உள்ளிட்ட கூடுதல் செலவினங்கள் ஏற்படுகிறது. வாடகை கிடங்கு உள்ள இடங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் இல்லை. இந்த சங்கத்திற்காக 2000-ம் ஆண்டு அரசால் சுமார் 5 ஏக்கர் நிலம் கைலாசம்பாளை யத்தில் வழங்கப்பட்டு இதுவரை அந்த இடத்தில் கிடங்குகளோ, களமோ கட்ட சங்கத்தால் எவ்வித நடவடிக் கையும் மேற்கொள்ளப் படவில்லை.

    அங்கு கிடங்கு கட்டினால் வாடகை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏதும் இருக்காது. இதற்கு கூட்டுறவு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய கிடங்குகள் கட்ட வேண்டும்.

    விவசாயிகளின் நியாய மான கோரிக்கைகளை சங்கம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் கலந்து பேசி மாவட்ட கலெக்டரிடம் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக் கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் 2000 மஞ்சள் மூட்டைகள் ரூ.80 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் விரலி ரகம் 1450 மூட்டைகளும், உருண்டை ரகம் 500 மூட்டைகளும், பணங்காலி ரகம் 50 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5402 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7075-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.5069-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6019-க்கும், பணங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.2860-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11602-க்கும் ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவில் மஞ்சள் மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

    • ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் 2700 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் போனது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக் கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் 2700 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் போனது.

    விரலி ரகம் 1850 மூட்டைகளும், உருண்டை ரகம் 800 மூட்டைகளும், பணங்காலி ரகம் 50 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.4969 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7403-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.4802-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6100-க்கும், பணங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.8999-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.13000-க்கும் ஏலம் விடப்பட்டது.

    கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் மஞ்சள் மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக் கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

    ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர்.

    மொத்தம் 2,150 மஞ்சள் மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில விரலி ரகம் 1570 மூட்டைகளும், உருண்டை ரகம் 500 மூட்டைகளும், பணங்காலி ரகம் 80 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன.

    இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6406-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7373-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.5777-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6269-க்கும், பணங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 134-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 599-க்கும் ஏலம் விடப்பட்டது.

    கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் மஞ்சள் மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இங்கு 2,150 மஞ்சள் மூட்டைகள் மொத்தம் ரூ.75 லட்சத்திற்கு ஏலம்போனது.

    • ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • ஏலத்தில் விரலி ரகம் 50 மூட்டைகளும், உருண்டை ரகம் 23 மூட்டைகளும், பணங்காளி ரகம் 2 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.

    இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக்க வுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்–குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். நேற்று நடந்த ஏலத்தில் 75 மஞ்சள் மூட்டைகள் மஞ்சள் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் போனது.

    இந்த ஏலத்தில் விரலி ரகம் 50 மூட்டைகளும், உருண்டை ரகம் 23 மூட்டைகளும், பணங்காளி ரகம் 2 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன.

    இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5722 முதல் அதிகபட்சமாக ரூ.7332-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.5555-க்கும், அதிகப்பட்சமாக ரூ.6402-க்கும், பணங்காளி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.11032-க்கும், அதிகப்பட்சமாக ரூ.11635-க்கும் ஏலம் விடப்பட்டது.

    சீசன் முடிவடைவதால் ஏலத்திற்கு குறைந்த அளவே மஞ்சள் கொண்டு வரப்பட்டு இருந்தது.  

    ×