என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the commotion"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை பகுதியில் உள்ள ஓடை புறம்போக்கு பகுதியில் மரங்களை வெட்டுவது தொடர்கதையாக உள்ளது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள 6 தென்னை மரங்கள் மற்றும் அரச மரத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டியுள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை பகுதியில் உள்ள ஓடை புறம்போக்கு பகுதியில் மரங்களை வெட்டுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள 6 தென்னை மரங்கள் மற்றும் அரச மரத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டியுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல் வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது குறித்து வருவாய் துறை கிராம நிர்வாக அலுவ லர் ராஜாவிடம் கேட்டபோது, ஓடை புறம்போக்கு பகுதியில் இருந்து 6 தென்னை மரங்க ளைப் வெட்டியுள்ளதாக புகார் வந்துள்ளது. பரமத்தி வேலூர் சர்வேயரிடம் அப்பகுதி நிலத்தை அளந்து கொடுக்க கேட்டுள்ளோம். நிலம் அளந்த பிறகு எத்தனை தென்னை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது என கணக்கீடு செய்யப்படும்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று கூறினார். இது வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அப்ப குதி மக்கள் தெரிவித்தனர்.

    ×