என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச செல்போன் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
    X

    இலவச செல்போன் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

    • மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத் தின் கீழ் பயன்பெற, தகுதி உடைய மாற்றுத்திறனாளி கள் விண்ணப்பிக்கலாம்.
    • மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவல கத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், பார்வை குறைபாடு மற்றும் செவித்தி றன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத் தின் கீழ் பயன்பெற, தகுதி உடைய மாற்றுத்திறனாளி கள் விண்ணப்பிக்கலாம்.

    18 முதல் 70 வயது வரை உள்ள, பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடு உடையவர்கள், உயர்கல்வி பயில்பவர்கள், தனியார் நிறுவனங்களின் பணிபுரிபவர்கள், சுய தொழில் புரிபவர்கள் இதற் காக விண்ணப்பிக்கலாம்.

    தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், கல்வி பயில் வதற்கான சான்று, பணிச் சான்று, சுயதொழில் புரி வதற்கான சான்று, ரேசன் கார்டு, ஆதார் கார்டு நகல் மற்றும் 1 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நாமக்கல் மாவட்ட கலெக் டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவல கத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×