என் மலர்
நீங்கள் தேடியது "ராஜகணபதி கோவில்"
- ராஜ கணபதிக்கு சந்தனம், தேன், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் ராஜகணபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பல்லடம் :
பல்லடம் வடுகபாளை யம் டி.எம்.எஸ். நகரில் ராஜ கணபதி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு, மகாயாகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராஜ கணபதிக்கு சந்தனம், பால், தேன், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ராஜகணபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- சாக்கடை அமைக்கும் பணிக்காக, ராஜகணபதி கோவிலை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
- பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் சிலையை சேதம் இன்றி எடுத்து அதிகாரிகள் வேறு இடத்தில் வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்-ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பொத்தனூரில் நெடுஞ்சாலை அருகே பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இங்குள்ள விநாயகருக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
இந்த நிலையில் இப்பகுதியில் சாலையோரம் சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாக்கடை அமைக்கும் பணிக்காக, ராஜகணபதி கோவிலை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த இந்த கோவிலை நெடுஞ்சாலைத்துறையினர், பொக்லைன் எந்திரத்தின் மூலம் முற்றிலுமாக அகற்றினர். இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் சிலையை சேதம் இன்றி எடுத்து அதிகாரிகள் வேறு இடத்தில் வைத்தனர்.
தொடர்ந்து பரமத்திவேலூர் 4 ரோடு சாலைகளில் இருந்து பொத்தனூர் எம்.ஜி.ஆர் சிலை வரையிலும் சாக்கடை அமைக்கும் பணி நடப்பதால் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக இக்கோவிலில் வழிபட்டு வருகிறோம். அதிகாரிகள் திடீரென கோவிலை இடித்தது மன வேதனையாக உள்ளது. சாக்கடை கால்வாயை அதிகாரிகள் மாற்றி அமைத்திருக்கலாம் . ஆனால் அதிகாரிகள் இவ்வாறு செய்யவில்லை என்றனர்.






