சுற்றுலா தொடர்பான தொழில் செய்வோர் ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு

கேரவேன் பார்க் இயக்கு பவர்கள் உள்ளிட்ட சுற்றுலா சம்மந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ள வர்கள் அனைவரும், https//www.tntourismtorscom என்ற சுற்றுலாத்துறை வெப்சைட்டில் தங்களின் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்யாமல் இயங்கும் தொழில் நிறு வனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சுற்றுலா தொடர்பான தொழில் செய்வோர் ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டத்தி லுள்ள உணவு மற்றும் உறைவிட சுற்றுலாத்திட்டம் , சாகச சுற்றுலா இயக்கு பவர்கள், கூடார சுற்றுலா இயக்குபவர்கள் , கேரவேன் சுற்றுலா இயக்குபவர்கள், கேரவேன் பார்க் இயக்கு பவர்கள் உள்ளிட்ட சுற்றுலா சம்மந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ள வர்கள் அனைவரும், https//www.tntourismtorscom என்ற சுற்றுலாத்துறை வெப்சைட்டில் தங்களின் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யாமல் இயங்கும் தொழில் நிறு வனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பதிவு செய்வது மற்றும் வழிமுறைகள் குறித்த அரசாணைகள் மேற்குறிப்பிட்ட வெப்சைட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடு தல் கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com