என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் தாலுக்கா மகாராஜபுரம் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி அஜிதா (வயது 40). இவர் குரவப்புலத்தில் உள்ள ராமலிங்கம் என்பவர் வீட்டில் வேலை செய்து வருகிறார். ராமலிங்கத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆதிமாதவன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததால் அஜிதாவை அவர் வீட்டிற்கு வேலைக்கு செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் அஜிதா சம்பவத்தன்று ராமலிங்கம் வீட்டிற்கு வேலைக்கு சென்று விட்டு தென்னம்புலம் கலைஞர் சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது குரவப்புலத்தைச் சேர்ந்த ஆதிமாதவன் (33), குமார் (34) ஆகிய இருவரும் அஜிதாவை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி மானபங்கம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து அஜிதா கரியாப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவன், குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
சம்பவத்தன்று கள்ளிமேடு பகுதியில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரிக்காடு-உம்பளச்சேரி சாலையில் செல்லும்போது எதிரே திருவாரூர் மாவட்டம், குன்னூர், தோளாச்சேரி பகுதியிலிருந்து தன் தாயாருடன் மோட்டார் சைக்கிளில் வந்த விவசாயி சுபாஷ்(34) என்பவர் எதிரே வந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டது.
இதில் காளிமுத்து தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். இதில் சுபாசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி காளிமுத்து இறந்துவிட்டார். சுபாஷ் திருவாரூர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் இன்று சவார்க்கர் என கூறப்படும் கடலோர பாதுகாப்பு ஒத்திகையானது நடைபெற்றது.
கடல்வழியாக கள்ளத்தனமாக அந்நியர்கள் யாரேனும் உள்ளே நுழைகிறார்களா?, கடல் வழியாக தங்கம், கஞ்சா உள்ளிட்டவைகள் கடத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தனர். கடலோர காவல் படை டி.எஸ்.பி குமார், இன்ஸ்பெக்டர் முத்து ராமலிங்கம் மற்றும் போலீசார் நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து செருதலைக்காடு வரை கடலில் விசைப்படகு மூலம் சென்று ஆய்வு செய்தனர்.
அதேபோல் மீனவர்களிடம் அன்னியர்கள் யாரேனும் உள்ளே நுழைந்தாலா? அல்லது சந்தேகப்படும்படியான ஆட்கள் கப்பலில் வந்தலோ உடனடியாக கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி வலியுறுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்சலாம். என்ஜினீயரான இவர் அந்தப் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல அவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது திடீரென நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடி, வெளியே நிறுத்தி வைத்திருந்த கார், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
இதையறிந்த அப்துல் சலாம் வெளியே வராமல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்ததை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பின்னர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த காவல்துறையினர் மர்மநபர்கள் விட்டுச் சென்ற அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில் தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த ஹரி, வெங்கடேசன் ஆகிய இருவரை வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி கீழ மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 34). இவர் மயிலாடுதுறையில் டிராக்டர் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள் (26). இவர்களுக்கு திருமணமாகி 2 மாதம் ஆகிறது. தனிகுடித்தனம் நடத்தி வந்தனர்.சம்பவத்தன்று மாரியம்மாள் வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த சீர்காழி போலீசார் மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாரியம்மாளின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரில், எனது மகளின் சாவில் மர்மம் உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரியம்மாள் கழுத்து நெறிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பாலுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாலு மாரியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று நடந்த தராறில் பாலு ஆத்திரம் அடைந்து மாரியம்மாளின் கழுத்தை நெறித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்ததாக நாடமாடியது தெரியவந்தது.
இதையடுத்து மனைவியை கொலை செய்த பாலுவை போலீசார் கைது செய்தனர். மேலும் திருமணமாகி 2 மாதமே ஆவதால் மயிலாடுதுறை கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம். இவர் காய்கறி வியாபாரி. இவருடைய மகன் முகேஷ்கண்ணன்(வயது 20). இவர் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர்.
அந்த பெண்ணும், முகேஷ்கண்ணனும் தொழிற்பயிற்சி நிலையத்தில்(ஐ.டி.ஐ.) ஒன்றாக படித்தபோது காதல் மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் ஊருக்கு வந்திருந்தார். முகேஷ்கண்ணனும் ஊருக்கு வந்திருந்தார். மகனின் காதல் கருப்பு நித்யானந்தத்துக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. அவர், தனது மகனுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மகனின் காதலியை ரகசியமாக சந்தித்து பேசிய கருப்பு நித்யானந்தம், ‘முகேஷ்கண்ணனுக்கும், உனக்கும் திருமணம் செய்து வைக்கிறேன்’ என ஆசை வார்த்தை கூறி உள்ளார். அவருடைய ஆசை வார்த்தையால் கவரப்பட்ட அந்த பெண், கருப்பு நித்யானந்தத்தை நம்பி உடன் சென்றார்.
ஆனால் கருப்பு முருகானந்தம் அந்த பெண்ணை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணை ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி வெர்ஜினியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கருப்பு நித்யானந்தம், தனது மகனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பு நித்யானந்தம் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல், அவரது மனைவி பவுன்ராஜவள்ளி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அந்த பெண்ணை முகேஷ்கண்ணன் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், தந்தையால் அந்த பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அவரை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. ஆனாலும் அவர், தனது காதலியை கைவிடவில்லை. அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணை முகேஷ்கண்ணன் கரம்பிடித்தார். இவர்களுடைய திருமணம் பெண்ணின் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் ஊர்மக்கள் முன்னிலையில் நடந்தது. புதுமண தம்பதிக்கு ஊர் மக்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த திருமணம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே கருப்பு நித்யானந்தம் அந்த பெண்ணை கடத்துவதற்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே கோமல் கொழையூர் காலனி தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சுரேஷ்மேனன் (வயது21). இவர் கொத்தனார்.
நேற்று முன்தினம் அதே பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் வந்த 4-ம்வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியிடம் நைசாக பேசி அழைத்துசென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் சம்பவத்தை கூறியுள்ளார்.
இது குறித்து மயிலாடு துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர் கோப் பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை செய்து சுரேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவலில் அடைத்தனர்.
வேதாரண்யம்:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலுக்கு நேற்று பேராவூரணியை சேர்ந்த கோபால் என்பவர் 6 பேருடன் காரில் சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு இரவு மீண்டும் நாகை-திருத்துறைப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் பேராவூரணிக்கு வந்து கொண்டிருந்தனர்.அப்போது தலைஞாயிறு அருகே ஓடச்சேரி என்ற இடத்தில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்புக்கட்டையில் மோதியது. இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் கோபால் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.காயமடைந்த 5 பேரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ்சந்திரபோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு காவல் சரகம் வாய்மேடு உடைய தேவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் தங்கராசு (வயது 38). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர் வாய்மேடு திருத்துறைப்பூண்டி சாலையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் பின்னால் வந்த லோடு ஆட்டோ மோதியதில் தங்கராசு படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவிக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்து பின்பு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராசு இறந்தார்.
இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை தாலுகா வாய்மேடு அடுத்த தாணிக்கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்வர் சுப்பிரமணியன் (வயது 48). விவசாய கூலிதொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் வீட்டிலிருந்த விஷ மருந்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் இறந்துவிட்டார்.
இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் திராவிட கழகம் சார்பாக நீட்தேர்வு எதிர்ப்பு பரப்புரை தமிழகம் முழுவதும் நடத்துகின்றனர். நேற்று மாலை நகராட்சி முன்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட கழகம் தலைவர் கி.வீரமணி அவர்கள் நீட் தேர்வு எதிர்த்து சிறப்புரையாற்றினார்.
100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு குலக்கல்வி முறையை திரும்பவும் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயபடுத்தியுள்ளது. நுழைவு தேர்வுகளை அந்தந்த பல்கலைகழகம் மாநில அரசின் கட்டுபாட்டில் நடைபெறுவது வழக்கம். இதை மாற்றி பழைய முறையில் சிபிஎஸ்சி முறையில் பயின்றவர்களுக்கு எளிதாகவும் மாநில மொழியாகிய தமிழில் பயிலும் மாணவர்கள மருத்துவ தேர்வு நீட்தேர்வில் தோல்விஅடைகின்றனர். இதில் தமிழக மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் மருத்துவ கல்லூரியில் வெளிமாநிலத்தவர் பயில்வது கண்டிக்கத்தக்கது.
பழைய முறையை கொண்டு வருவதற்காக இம்முறையை கொண்டு வந்துள்ளனர். இதில் நம்பிள்ளைகள் மருத்துவராக வருவது சாத்தியமில்லை .
அதே போல் தற்பொழுது அறிவித்துள்ள ஒரே நாடு,ஒரே மொழி, என்று அறிவிப்பது நம்தமிழர்களின் உரிமையை முழுவதும் தங்கள் கையக படுத்துவது 5-ம் வகுப்புக்கும் 8-ம் வகுப்புக்கும் பொதுதேர்வு என்பது ஏற்கனவே பள்ளிக்கு ஏழை பிள்ளைகளை பள்ளிகூடங்களில் படிக்க வைப்பது எத்துனை கடினம் என ஆசிரியர்களுக்கு தெரியும்.
இந்நிலையில் 5 வகுப்பு பொதுதேர்வு என்றால் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வரமாட்டார்கள். இதன் முன்னோட்டமாக நீட்தேர்வு அறிவித்துள்ளனர். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வு அறிவித்த போது தமிழகத்திற்கு தேவையில்லை என்றார். அதனால் ஒருவருடம் நீட் தேர்வு இல்லாமல் இருந்தது. அவர் மறைவுக்கு பின் நீட்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே விரைவில் தமிழகம் முழுவதும் நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவை இல்லை என போராட்டங்கள் பெருமளவில் நடத்தபடும்.
இவ்வாறு அவர் பேசினார்.






