என் மலர்
செய்திகள்

கைது
மயிலாடுதுறை அருகே சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் கொத்தனார் கைது
மயிலாடுதுறையில் 9 வயது சிறுமியிடம் கொத்தனார் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே கோமல் கொழையூர் காலனி தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சுரேஷ்மேனன் (வயது21). இவர் கொத்தனார்.
நேற்று முன்தினம் அதே பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் வந்த 4-ம்வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியிடம் நைசாக பேசி அழைத்துசென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் சம்பவத்தை கூறியுள்ளார்.
இது குறித்து மயிலாடு துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர் கோப் பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை செய்து சுரேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவலில் அடைத்தனர்.
Next Story