search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
    X
    தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    நாகையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அரசு போக்குவரத்து கழக நாகை மண்டல அலுவலகம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாக பணியாளர் மத்திய சங்க தலைவர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். மத்திய சங்க துணைத்தலைவர் இடும்பன்சாமி முன்னிலை வகித்தார். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். 240 நாட்கள் பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். பஸ்களின் எண்ணிக்கையை குறைத்து பணி வழங்க மறுக்கும் போக்கை கைவிட வேண்டும். 2003-ம் ஆண்டிற்கு பின் பணியில் சேர்ந்தவர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கிளை செயலாளர் முரளி, பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகை மண்டல அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சீனிமணி கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.
    Next Story
    ×