என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானி தெருவில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சீர்காழி போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், போலீசார் ஸ்டாலின், தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சீர்காழி ஈசானி தெருவை சேர்ந்த காளிதாஸ் மனைவி அமுதா (வயது37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 419 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்தனர். .பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
திருக்குவளையில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் திருக்குவளை போலீஸ் சரகம் வாழக்கரை மேல கட்டளை பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேல். இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். சிங்காரவேல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயில் கருகி படுகாயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் புவனேஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் நாகை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
பொங்கல் பண்டிகை நாளில் வீட்டுக்கு மனைவி வராத சோகத்தில் அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு வீரப்பபிள்ளை தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது45). இவர் பொறையாறில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சித்ரா.
இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனிடம் கோபித்துக்கொண்டு நாகூர் அருகே தென் கரையில் உள்ள தாய் வீட்டுக்கு சித்ரா சென்று விட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகை நாளில் மாதவன், சித்ராவை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை என தெரிகிறது. இதனால் சோகத்தில் இருந்த மாதவன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் அங்கு சென்று மாதவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொங்கல் பண்டிகை நாளில் மனைவி வீட்டுக்கு வராத சோகத்தில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி, சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் போலீசார் வேதாரண்யம் பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் 25 கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருக்கடையூர் அருகே கனமழையால் சாலையில் உடைப்பு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக திருக்கடையூர் அருகே ஓடக்கரை சாம்பக்குளம் பகுதி வழியாக செம்பனார்கோவில் செல்லும் சாலையில் உடைப்பு ஏற்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அங்கு சாவைலயின் நடுவே பெரும் பள்ளம் காணப்படுகிறது. இந்த சாலையை திருக்கடையூர், காடுவெட்டி, நடுவலூர், நட்சத்திரமாலை, ரமணியன் கோட்டகம், கண்ணங்குடி, கிள்ளியூர், வெள்ளத்திடல், ராமன்கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை இந்த சாலை வழியாக விற்பனைக்கு எடுத்துச்சென்று வருகிறார்கள். இந்தநிலையில் சாலையில் உடைப்பு ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்னர். மேலும் இந்த சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மயிலாடுதுறையில் நகையை திருப்பி தர தாமதமானதால் அடகு கடை உரிமையாளரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மகாதான தெருவை சேர்ந்த கைலாஷ்சந்த் ஜெயின் மகன் சஞ்சய்குமார் (வயது42). இவர் மயிலாடுதுறை திருவிழுந்தூர் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரிடம் மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை சிவன்கோவில் தெற்குவீதியை சேர்ந்த ராமையன் மகன் சதீஷ் (36) என்பவர் 2 பவுன் நகையை அடமானம் வைத்து ரூ. 21 ஆயிரம் பெற்றுள்ளார்.
இவர் சம்பவத்தன்று வட்டியுடன் அடமான தொகை ரூ.30 ஆயிரத்தை அடகு கடைக்கு சென்று சஞ்சய்குமாரிடம் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட சஞ்சய்குமார் நகை வங்கியில் உள்ளது, மறுநாள் வந்து பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்தார்.
அதன்படி மறுநாள் சதீஷ் அடகு கடைக்கு சென்று நகையை கேட்டுள்ளார். அப்போது அடமானம் வைத்த நகையை திருப்பி தர தாமதமானதால் ஆத்திரம் அடைந்த சதீஷ் தனது நண்பர்களை வரவழைத்து, அவர்களுடன் சேர்ந்து சஞ்சய்குமாரை தாக்கினார்.
இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய்குமார் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் வழக்கு தொடர்பாக சதீஷ், இவரது நண்பர்கள் மயிலாடுதுறை தோப்பு தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் தினகரன் (29) , மயிலாடுதுறை மாயூரநாதர் கீழவீதியை சேர்ந்த குணசேகரன் மகன் சதீஷ்குமார் (32) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

நாகூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகூர்:
நாகூரை அடுத்த நரிமணம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் சத்யா (வயது 21). இவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியி்ல் படித்து வந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் சத்யா வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் பட்டதாரி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
கோவை மாவட்டம் பீளமேடு காந்தி நகரை சேர்ந்த பட்டதாரி பெண் அனுசுயா. இவர் தனது பெற்றோருடன் நேற்று மதியம் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடி கொண்டிருந்த அரசு அதிகாரிகள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை கலெக்டரின் கார் டிரைவர் செந்தில் என்பவர் பிடுங்கினார். இதை தொடர்ந்து அங்கு வந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் உள்பட அதிகாரிகள் அனுசுயாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கும், விருதுநகர் மாவட்டம் பிச்சப்பத்தி மாங்குளம, வடக்கு வீதியை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவருக்கும் முகநூல் மூலம் காதல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தின்போது ரூ.3 லட்சமும், புல்லட் வாகனமும், 5 பவுன் நகையும் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்தோம்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், எனது கணவர் மாரிச்செல்வத்துக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணை எனது கணவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து 2-வது திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மாரிச்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், வரதட்சணையாக கொடுத்த பணம், நகைகளை மீட்டுத்தரக்கோரியும் நேற்று முன்தினம் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தேன். இந்த புகாரின் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் எனது பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றேன், எனது கணவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களிடம் இருந்து வாங்கிய நகை மற்றும் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அனுசுயாவிடம், அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த சம்பவத்தால் நாகை கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பொறையாறு அருகே விஷம் குடித்து அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறையாறு:
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி மேடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது40). இவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி வெண்மதி. இவர்களுக்கு 2 குழந்தைகள். இந்த நிலையில் லட்சுமணன் நேற்று மாலை பொறையாறு ராஜீவ் புரம் வள்ளுவன் சுடுகாடு அருகே பிணமாக கிடந்தார். அவருடைய உடல் அருகே பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) பாட்டில் கிடந்தது. இதை அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக மனவேதனை அடைந்த லட்சுமணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
நாகை அருகே சிக்கல் மேலவீதியை சேர்ந்த விஜயகுமார் மனைவி கமலா (வயது50). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மகளுடன் சொந்த ஊரான செம்பியன்மகாதேவிக்கு வீட்டை பூட்டி விட்டு சென்று உள்ளார். பின்னர் நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்த போது பிரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து திருட்டு நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அது மேலவீதி, அய்யனார் குளம், யாதவர் தெரு வழியாக சிக்கல் ரெயில்வே கேட் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுதொடர்பான புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமாவளவன் பற்றி விமர்சித்த காயத்ரி ரகுராமை கண்டித்து நாகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
திருமாவளவன் பற்றி விமர்சித்த பாரதீய ஜனதா கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து நாகை வண்டிப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகையில், கரும்பு, மண்பானைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம்:
தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகையன்று மக்கள், புத்தாடை அணிந்து புது அரிசியில் பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இதில் கரும்பு, மஞ்சள்கொத்து உள்ளிட்டவைகளும் இடம்பெறும். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு, பெண் வீட்டு சார்பில் பொங்கல் சீர்வரிசை கொடுப்பார்கள். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், நாகை கடை தெரு, நிலா தெற்கு வீதி, நாலுகால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாகை கடைத்தெருவில் கரும்பு மற்றும்மண்பானை, வாழைத்தார் உள்ளிட்ட பொருட்களை கடந்த சில நாட்களாக பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக ஏராளமானவர்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். கார்களிலும், வேன்களிலும் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதனால் கரும்பு, மண்பானை விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் வந்ததால் கடைவீதியில் கூட்டம் அலைமோதியது.
இதுகுறித்து கரும்பு வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

மன்னார்குடி, திருக்காட்டுப்பள்ளி மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொங்கல் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக நாகைக்கு கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.13-க்கு கொள்முதல் செய்தோம். இந்த ஆண்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புக்காக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்புகளை ரூ.15-க்கு மொத்தமாக கொள்முதல் செய்துள்ளது. இதனால் தற்போது ஒரு கரும்பு ரூ.15 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்கிறோம். இது போக ஆட்கள் கூலி, போக்குவரத்து செலவும் கூடுதலாக செய்கிறோம். இதனால் இந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.25-க்கு விற்பனை செய்கிறோம்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் அதிக அளவில் கரும்பை வாங்க விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும் தமிழக அரசு விவசாயிகளிடம் நேரடியாக கரும்பை கொள்முதல் செய்ததால், சிறு வியாபாரிகள் அதிக விலை கொடுத்து கரும்பை கொள்முதல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அதேபோல இஞ்சி, மஞ்சள் கொத்து கும்பகோணம் மார்க்கெட்டிலிருந்து விற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம். மஞ்சள், இஞ்சி கொத்து ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரி கூறுகையில், புயல் கனமழை காரணமாக மண்பாண்ட தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்கள் மண்பானை மற்றும் அடுப்பு, சட்டி உள்ளிட்டவற்றை தயாரிக்கவில்லை. இதனால் ரூ. 100, ரூ.150, ரூ.250 என அளவுக்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்படட மண்பானைகள் தற்போது ரூ.200, ரூ.300 என அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது என்றார்.