என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
    X
    நாகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

    நாகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

    திருமாவளவன் பற்றி விமர்சித்த காயத்ரி ரகுராமை கண்டித்து நாகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    திருமாவளவன் பற்றி விமர்சித்த பாரதீய ஜனதா கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து நாகை வண்டிப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×