என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • நாகப்பட்டினம் நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேராக மேலப்பிடாகை கடைத்தெரு அருகே மோதிக் கொண்டது.
    • படுகாயமடைந்த 4 பேரை மீட்டு நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டியை அடுத்த மேலப்பிடாகை கடைத்தெரு அருகே திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி அரசு பஸ் சென்றது.

    அப்போது எதிர் திசையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேராக மேலப்பிடாகை கடைத்தெரு அருகே மோதி கொண்டது.

    இந்த விபத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர மரத்தின் மீது மோதி நொறுங்கியது.

    இதில் அரசு பஸ் ஓட்டுநர் பரமேஸ்வரன், பயணிகள் அமீர், சுப்பையன் மற்றும் தனியார் பஸ்சின் ஓட்டுனர் கலையரசன் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

    அவர்களை மீட்டு நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர்.

    இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆவணி மாத பவுர்ணமியில் சித்தர் பீடங்களில் வழிபாடு செய்வதனால் மாங்கல்ய பாக்கியம் அருளும் என்னும் நம்பிக்கை நிலவிவருகிறது.
    • மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த ஜீவ பீடத்தை புனரமைப்பு செய்து பூஜைகள் செய்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் ஆவணி மாத பவுர்ணமி வழிபாடு நடந்தது.

    ஆவணி மாத பவுர்ணமியில் சித்தர் பீடங்களில் வழிபாடு செய்வதனால் மாங்கல்ய பாக்கியமும் (திருமணம்), குடும்பத்தினருக்கு ஆன்ம பலத்தை அருளும் என்னும் நம்பிக்கை நிலவி வருகிறது.

    நாகை அருகே நாகூரில் குயவர் மேட்டு தெருவில் 400 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து இங்கே ஜீவ சமாதி நிலையை அடைந்த ஸ்ரீ காங்கேய சித்தர் மடம் உள்ளது.

    மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த இந்த ஜீவ பீடத்தை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் புனரமைப்பு செய்து தின, வார, மாதாந்திர பூஜையினை செய்து வருகின்றனர்.

    ஆவணி மாத பவுர்ணமி தினத்தன்று சித்தருக்கு தமிழ் முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடி வேள்வி செய்து அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.

    உபயத்தினை சிவா குடும்பத்தினர் செய்தனர்.

    இந்த வேள்வியில் நாகை சத்ரு சம்ஹார மூர்த்தி ஆலய நிர்வாகி சிங்காரவேலு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வேள்வியினை காங்கேய மடத்தின் பூஜகர் வெங்கட்ராமன் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த ரமேஷ் சிவாச்சாரியார் செய்தனர்.

    நிகழ்ச்சியை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்தனர்.

    • சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
    • அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஜெயக்கொடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கலை அடுத்த சங்கமங்கலம் ஊராட்சி குற்றம் பொருத்தான் இருப்பு கிராம த்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஜெயக்கொடி (57) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுபற்றி சிறுமியின் தாய் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஜெயக்கொடியை போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

    • குறுகிய கால படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வு பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்பட்டு வருகிறது.
    • முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்கள் தங்களது சிறார்களை ராணுவ பணிகளில் சேர்ந்திட ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்திலிருந்து ராணுவப் பணியில் சேர்ந்து பயிற்சி பெறும் முன்னாள்படைவீரர்களின் வாரிசுகளை ஊக்குவிக்கும் வகையில் தொகுப்பு நிதியிலிருந்து தொகுப்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன்படி, முப்படையில் நிரந்திர படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப்பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், குறுகிய கால படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.50000மும் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர பதவிகளின் பணிக்காக தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.25000மும் வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீர ர்கள்மற்றும் கைம்பெண்கள் தங்களது சிறார்களை இந்திய இராணுவ பணிகளில்சேர்ந்திட ஊக்குவிக்குமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறீர்கள்.

    மேலும் விவரங்கள் அறிய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகதரைத்தளத்தில் அறை எண். 10 மற்றும் 11-ல் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசிமூலமாகவோ (04365-299765) தொடர்பு கொள்ளலாம் எனதெரிவித்துள்ளார்.

    • பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது.
    • பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பெருமைக்கு உரியது.

    இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி நடைபெற்றது

    தொடர்ந்து நேற்று புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேராலய கீழ் கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது ஆலயத்திற்கு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது

    தொடர்ந்து பேராலய நிர்வாகம் சார்பில் காவல்து றை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் நன்றி தெரிவி க்கப்பட்டது.

    விழாவில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிகாரி இருதயராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், நாகை சுகாதாரப் பணிகள் உதவி இயக்குனர்விஜய குமார் ஆகியோர் வழிகாட்டு தலின்படி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • புகையிலை ஒழிப்பு தொடர்பான மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 70 மாணவ- மாணவிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றிய அளவிலான நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஜூனியர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி) ஒரு நாள் பயிற்சி முகாம் திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

    முகாமிற்கு திருமருகல் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் வேம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜே.ஆர்.சி யின் ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் வடிவேல் வரவேற்றார்.

    ஜே.ஆர்.சி-யின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் நிகழ்ச்சி யினை தொகுத்து வழங்கினார்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி கருத்தாளராக செயல்பட்டு சேவைப் பணி மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியினை வழங்கினார்.

    முன்னதாக புகையிலை ஒழிப்பு தொடர்பான மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    திருமருகல் ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 70 மாணவ, மாணவிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

    நடுநிலைப்பள்ளிகளின் ஜே.ஆர்.சி ஒருங்கிணைப்பா ளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

    ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் முடிவில் நன்றி கூறினார்.

    • புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கலசங்களில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினத்தில் புகழ்பெற்ற பழமைவாய்ந்த சந்தனமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்ேகாவில் புதுப்பிக்க ப்பட்டு யாகசாலை பூஜை அமைத்துகடங்கள் பூஜிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    கடந்த 5-ந்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து 7-ம் தேதி காலை யாகசாலைபூஜைகள் நிறைவடைந்து புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊர்வ லமாக எடுத்து வரப்பட்டு கலசங்களில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக பரிவார தெய்வங்களின் கோவிலுக்கும் கும்பா பிஷேகம் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    பின்னர், இரவு அம்பாள் வீதியுலா நடந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், ஆய்வாளா், பொறுப்பாளா்கள், கிராம நாட்டாண்மைகள், உபயதாரா்கள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கரியாப்பட்டினம் போலீசார் செய்திருந்தனர்.

    • நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு டாலர்களை கொள்ளையடித்தனர்.
    • போலீசார் இருவரையும் கைது செய்து கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை சிவன் வடக்கு வீதியை சேர்ந்த சாகுல் அமீது, ஜின்னா, தேத்தாகுடி பகுதியை சேர்ந்த முருகானந்தம், நீர் மூளையை சேர்ந்த கலைமணி ஆகியோரின் நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்நிலையில், தோப்புத்துறை சோதனை ச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது, அந்த காரில் 20 பவுன் நகை மற்றும் 2 ஆயிரத்து 700 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த காரில் இருந்த திருவண்ணாமலையை சேர்ந்த ராமஜெயம் மற்றும் திருவாரூரை சேர்ந்த குரு சக்தி ஆகியோரிடம் விசாரித்ததில் கடந்த ஓராண்டாக வேதாரண்யம் பகுதியில் நடந்த திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

    பின்னர், போலீசார் இருவரையும் கைது செய்து கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்.

    • முடிகொண்டான் ஆற்றில் புனித நீர் எடுத்தல், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, அங்குநார்ப்பணம், ரக்ஷாபந்தனம் நடந்தது.
    • வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கலில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேம் நடந்தது.

    இதையொட்டி முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன.

    மேலும் கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமங்கள், கோ பூஜை, தன பூஜை முடிகொண்டான் ஆற்றில் புனித நீர் எடுத்தல், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, அங்குநார்ப்பணம், ரக்ஷாபந்தனம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. பின்னர் மகா பூர்ணாஹதி, கடம் புறப்பாடு நடந்தது.

    இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.

    பின்னர் மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து கோபுர கலசத்திற்குவஸ்திரம் சாத்தப்பட்டு சிவாச்சாரியா ர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    இதையடுத்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திருமருகல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்தனர்.

    • விவசாயிகளை பெருமளவில் திரட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றம்.
    • 610 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பிற்குரிய தொகையை வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் சிபிசிஎல் கையகப்படுத்தும் நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

    முட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.

    இதில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மாநில தலைவர் ஆனந்தகுமார், போராட்டக் குழு தலைவர் விஜயராஜ் ஆகியோர் பேசினார்.

    கூட்டத்தில் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்தும் 610 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பிற்குரிய தொகையை வழங்க வேண்டும், சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகளை பெருமளவில் திரட்டி பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் இயற்கை வேளாண் விவசாயி பாரம்பரிய விதை நெல் பாதுகாப்பாளர் பார்த்தசாரதி மற்றும் சங்க நிர்வாகிகள், நில உரிமையாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

    • முக்கியஸ்தர்கள் தலைமையில் ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    • பின்னிரவில் அம்பாள் வீதியுலாவில் அக்னி கப்பரை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதார ண்யம் அடுத்த தேத்தாகுடி குளுந்தாளம்மன் முனீஸ்வரர் கோவிலில் 65-வது ஆண்டு தேர் திருவிழா நடந்தது. கிராம முக்கியஸ்தர்கள் தலைமையில் ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    முன்னதாக, காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் திருவிழா தொடங்கி அன்று பகல் முழுவதும் பல்வேறு இறை வழிபாடுகளுக்கு பின் குளுந்தாளம்மன் தேர் திருவிழாவும் விடிய விடிய பலகலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    தொடர்ந்து, பின்னிரவில் அம்பாள் வீதியுலாவில் அக்னி கப்பரை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை மறலாளிகள், நிர்வாக குழுவினர்கள் உள்பட தேத்தாகுடி கிராமமக்கள் செய்திருந்தனர்.

    விழாவில், கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது.

    ×