என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் ஜே.ஆர்.சி பயிற்சி முகாம்
    X

    பயிற்சி முகாம் நடந்தது.

    அரசு பள்ளியில் ஜே.ஆர்.சி பயிற்சி முகாம்

    • புகையிலை ஒழிப்பு தொடர்பான மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 70 மாணவ- மாணவிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றிய அளவிலான நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஜூனியர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி) ஒரு நாள் பயிற்சி முகாம் திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

    முகாமிற்கு திருமருகல் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் வேம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜே.ஆர்.சி யின் ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் வடிவேல் வரவேற்றார்.

    ஜே.ஆர்.சி-யின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் நிகழ்ச்சி யினை தொகுத்து வழங்கினார்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி கருத்தாளராக செயல்பட்டு சேவைப் பணி மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியினை வழங்கினார்.

    முன்னதாக புகையிலை ஒழிப்பு தொடர்பான மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    திருமருகல் ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 70 மாணவ, மாணவிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

    நடுநிலைப்பள்ளிகளின் ஜே.ஆர்.சி ஒருங்கிணைப்பா ளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

    ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் முடிவில் நன்றி கூறினார்.

    Next Story
    ×