கடல் சீற்றத்தால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

பலத்த காற்றின் காரணமாக கடலில் உள் பகுதியில் கடும் சீற்றமாக காணப்படுகிறது.பைபர் படகுகளில்மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.
ஆறுகாட்டுதுறையில பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
ஆறுகாட்டுதுறையில பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த 2 நாட்களாக காற்று பலமாக வீசி வருகிறது.

பலத்த காற்றின் காரணமாக கடலில் உள் பகுதியில் கடும் சீற்றமாக காணப்படுகிறது.

கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் 2 நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை .

ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை ஆறுகாட்டுதுறையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில்மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டன. 

X

Maalai Malar
www.maalaimalar.com