search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shore"

    • 2006-2007-ம் நிதி ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் செலவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளம் அமைக்கப்பட்டது.
    • பாகம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓடை வழியாக சென்று இந்த குளத்தில் கலக்கிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஆனங்கூர் ஊராட்சி. ஆனங்கூரிலிருந்து பாகம்பாளையம் செல்லும் தார்சாலை அருகே கடந்த 2006-2007-ம் நிதி ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் செலவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளம் அமைக்கப்பட்டது.

    பாகம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓடை வழியாக சென்று இந்த குளத்தில் கலக்கிறது. இந்நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக இந்த குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.

    குளம் நிரம்பி இருப்பதன் காரணமாக, அந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள கிணறுகளில் ஊற்று ஏற்பட்டு எப்போதும் தண்ணீர் இருப்பதால் விவ சாயிகள் முப்போக விவ சாயம் செய்து வருகின்றனர்.

    அதேபோல் நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய சகாயம், இந்த குளத்தை பயிற்சி நீச்சல் குளமாக அறிவித்து இந்த குளத்தில் நீச்சல் பயிற்சி கொடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த குளத்திற்கு பக்கத்து தோட்டக்காரரான அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார சுப்பிரமணியன் (வயது 40) என்பவர், ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து, குளம் கட்டுப்பட்டுள்ள இடது கரையை சேதப்படுத்தி உள்ளார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், இது குறித்து ஊராட்சி தலைவர் மோகன்ராஜூக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், குளத்தின் இடது கரையை உடைத்துக் கொண்டிருந்த பொக்லைன் எந்திர ஓட்டுனரை எச்சரித்து தடுத்து நிறுத்தினார்.

    பின்னர் இது குறித்து ஊராட்சி தலைவர் மோகன்ராஜ் ஜேடர்பாளை யம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காற்றின் காரணமாக கடலில் உள் பகுதியில் கடும் சீற்றமாக காணப்படுகிறது.
    • பைபர் படகுகளில்மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த 2 நாட்களாக காற்று பலமாக வீசி வருகிறது.

    பலத்த காற்றின் காரணமாக கடலில் உள் பகுதியில் கடும் சீற்றமாக காணப்படுகிறது.

    கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் 2 நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை .

    ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

    நேற்று அதிகாலை ஆறுகாட்டுதுறையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில்மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.

    மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டன. 

    புயல் எச்சரிக்கை காரணமாக இன்று காலை வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பியுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    நாகர்கோவில்:

    தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சில நாட்களில் வலுவடைந்து. புயலாக மாறும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் காரணமாக குமரி கடல் மற்றும் கேரள கடல் பகுதியில் அதிவேகத்தில் காற்று வீசும் எனவும், மிக பலத்த மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. அப்போது கடல் சீற்றமாக இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. 7-ந்தேதி தமிழகம் முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

    புயல் காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

    இதுதொடர்பாக மீனவ பிரதிநிதிகள் மூலம் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டனர். குமரி மேற்கு மாவட்ட பகுதியான பூத்துறை, தூத்தூர், வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிப்பவர்கள். இதனால் அவர்கள் பக்கத்தில் உள்ள துறைமுகத்தில் கரை ஒதுங்குமாறும் எச்சரிக்கப்பட்டனர்.

    கன்னியாகுமரி சின்னமுட்டம், குளச்சல், முட்டம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று முதலே கரை திரும்பி வருகிறார்கள். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கர்நாடகா, குஜராத், கொச்சி, மும்பை துறைமுகங்களில் கரையே தொடங்கி உள்ளனர்.

    இன்று காலை வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பியுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிமாநில துறைமுகங்களில் தஞ்சம் அடையும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு இங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைமுக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திலும், மீன் வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

    வானிலை எச்சரிக்கை தகவல்களை கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04652-231077, மீன் துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 04652-227460 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

    பூத்துறை, தூத்தூர், இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி மீனவ கிராமங்களில் ஊர் வாரியாக தனித்தனியாக வாட்ஸ்-அப் குழுக்கள் தொடங்கப்பட்டு அதன் மூலம் உடனுக்குடன் தகவல்கள் அளிக்கப்படுகிறது.

    எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதுகுறித்து நெய்தல் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் பெர்லின் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் 80 சதவீதம் பேர் இன்று காலை வரை கரை திரும்பியுள்ளனர். மற்ற மீனவர்களும் கரை திரும்பி வருகிறார்கள். இன்று மதியத்துக்குள் அனைவரும் கரை திரும்பி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    கரை திரும்பிய மீனவர்கள் நடுக்கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். எனவே கரையோர பகுதியில் உள்ள மீனவர்கள் தங்கள் வள்ளம், படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×