search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "break and damage"

    • 2006-2007-ம் நிதி ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் செலவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளம் அமைக்கப்பட்டது.
    • பாகம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓடை வழியாக சென்று இந்த குளத்தில் கலக்கிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஆனங்கூர் ஊராட்சி. ஆனங்கூரிலிருந்து பாகம்பாளையம் செல்லும் தார்சாலை அருகே கடந்த 2006-2007-ம் நிதி ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் செலவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளம் அமைக்கப்பட்டது.

    பாகம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓடை வழியாக சென்று இந்த குளத்தில் கலக்கிறது. இந்நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக இந்த குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.

    குளம் நிரம்பி இருப்பதன் காரணமாக, அந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள கிணறுகளில் ஊற்று ஏற்பட்டு எப்போதும் தண்ணீர் இருப்பதால் விவ சாயிகள் முப்போக விவ சாயம் செய்து வருகின்றனர்.

    அதேபோல் நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய சகாயம், இந்த குளத்தை பயிற்சி நீச்சல் குளமாக அறிவித்து இந்த குளத்தில் நீச்சல் பயிற்சி கொடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த குளத்திற்கு பக்கத்து தோட்டக்காரரான அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார சுப்பிரமணியன் (வயது 40) என்பவர், ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து, குளம் கட்டுப்பட்டுள்ள இடது கரையை சேதப்படுத்தி உள்ளார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், இது குறித்து ஊராட்சி தலைவர் மோகன்ராஜூக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், குளத்தின் இடது கரையை உடைத்துக் கொண்டிருந்த பொக்லைன் எந்திர ஓட்டுனரை எச்சரித்து தடுத்து நிறுத்தினார்.

    பின்னர் இது குறித்து ஊராட்சி தலைவர் மோகன்ராஜ் ஜேடர்பாளை யம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×