என் மலர்
நாகப்பட்டினம்
- நிகழ்ச்சியில் அன்பு கோர் அண்ணாச்சி நூல் ஆசிரியர் வீரையன், பதிப்பாளர் குருமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது.
- அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் உட்பட பிரமுகர்களும் பள்ளி ஆசிரியர்களும்,மாணவிகளும் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் குருகுலம் அறக்கட்டளை நிறுவனர் மறைந்த அப்பாக்குட்டி பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பள்ளியின் பி.டி.ஏ தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் புகழேந்தி, வர்த்தக சங்க மாநிலத்துணை தலைவர் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ் துறை தலைவர் டாக்டர் சேதுபதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் தருமையாதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த சுவாமிகள், முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன், நாகை எம்பி செல்வராஜ், முன்னாள் எம்பி பிவி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கிரிதரன்,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், நாகை மாவட்ட வர்த்தக சங்க தலைவர் வேதநாயகம், இலக்கிய பெருமன்ற நாகை மாவட்ட தலைவர் புயல் குமார், செங்கல்பட்டு தொழில் உரிமையாளர்தியாகராஜன், வக்கீல்கள் பாலச்சந்தி ரன்,நமசிவாயம், ஓய்வு பெற்ற பிடிஓ ராஜரத்தினம், அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் உட்பட பிரமுகர்களும் பள்ளி ஆசிரியர்களும்,மாணவிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அன்பு கோர் அண்ணாச்சி நூல் ஆசிரியர் வீரையன், பதிப்பாளர் குருமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது. கோயமுத்தூர் தியாகு குழுவினரின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், வேதாரண்யம் கோயில் ஆதின வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி் நடந்தது.
குருகுலம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கயிலை மணி வேதரத்னம் வரவேற்றார். அலுவலர் ஸ்ரீதர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை குருகுலம் கல்வியியல் கல்லூரி நிர்வாகி கேடிலியப்பன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
- இறுதிப் போட்டிக்கு தேர்வான 4 அணிகளுக்கு நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது.
- போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடியில் ஊராட்சி மற்றும் விழுவை நண்பர்கள் இணைந்து மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தினர். கிரிக்கெட் போட்டியில் புதுக்கோட்டை, பழனி, திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர் மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், இறுதிப் போட்டிக்கு தேர்வா ன 4 அணிகளுக்கு நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் தோப்புத்து றை கியூஎம்சிசி கிரிக்கெட் கிளப் அணியினர் முதல் பரிசுத் தொகையான ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2வது பரிசு 40 ஆயிரம் மற்றும் கோப்பையை விழுந்தமாவடி விஎம்டபுள்யுசிசி அணியி னரும்,
3வது பரிசினை 30 ஆயிரம் மற்றும் கோப்பையை நாகூர் ஆர்கே என் எப்சிசிஅணியினரும் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம், துணைத் தலைவர் அகிலா வெங்கடேஷ், கிராம நாட்டாண்மை பூமாலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை விழுவை கோவிந்த் தொகு த்து வழங்கினார்.
- பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் எட்டு வீடுகளை காண்ட்ராக்ட் எடுத்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
- குப்பை மணலை கொட்டி கட்டுவதால் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கொட்டியும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சியில் 1000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இதில் கீழத்தெரு பகுதி யில் ஆற்றுக்கரை ஓரங்களில் வசித்து வந்த 8 குடும்பங்களுக்கு பாதுகா ப்பற்ற மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் குளம் அருகே பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் எட்டு வீடுகளை காண்ட்ராக்ட் எடுத்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
வீட்டின் உள்ளே நிரப்பபடும் மணல், பழைய துணி, பிளாஸ்டிக் குப்பை உள்ளிட்ட அடங்கிய குப்பை மணலை கொட்டி கட்டுவதால் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கொட்டியும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாகவும் எனவே பணியை நிறுத்தி தரமான வீடுகளை கட்டித் தர வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அருண் தம்புராஜியிடம் மனு அளித்துள்ளனர்.
- கூட்டத்திற்கு வட்டார தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார்.
- மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு வட்டார தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார் . கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்கூட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில்வருகிற 20ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் கலந்து கொள்வது
நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை. உடன் வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பொருளாளர் வீரசேகரன் நன்றி கூறினார்.
- வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில், சுமார் 1 1/2 அடி உயரமுள்ள சுருங்கல்லால் ஆன முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது.
- கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது சிறிது உடைந்திருந்ததால் சிலையை கடலில் விட்டு சென்றர்களா.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு, வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில், சுமார் 1 1/2 அடி உயரமுள்ள சுருங்கல்லால் ஆன முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது.
இதை பார்த்த வடக்குசல்லிக்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், வேட்டைக்காரனிருப்பு கிராம உதவியாளர்ரவி, முருகன் சிலையை கைப்பற்றி வேட்டைக்காரனிருப்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று வைத்து தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த சிலையை யாராவது விட்டு சென்றர்களா? இல்லை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது சிறிது உடைந்திருந்ததால் சிலையை கடலில் விட்டு சென்றர்களா? என விசாரித்து வருகின்றனர்.
- எந்திரங்களை கொண்டு அறுவடை செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
- விவசாயிகள் மின்கம்பிகளை கடந்து செல்ல கீழே தவழ்ந்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி மேலக்கரையிருப்பு பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 20 ஏக்கர் அளவிற்கு அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 30 ஏக்கர் விளை நிலங்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில்திரும ருகல் துணை மின் நிலைய த்திலிருந்து வயல்வெளி வழியாக கட்டலாடி, கீழப்பூதனூர் பகுதிகளுக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பங்கள் சேதமடைந்து மின்கம்பிகள் நெற்பயிர்களை உரசி செல்கிறது.
இதனால் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் உள்ள னர்.
மேலும் விவசாயிகள் மின் கம்பிகளை கடந்து செல்ல கீழே தவழ்ந்த படி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து சம்பந்த ப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பிகளை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாபு ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து திருப்பயத்தங்குடி வடிகால் வாய்க்காலில் விழுந்தார்.
- நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் சுரேஷ் பாபு (வயது 43) விவசாய கூலித்தொழிலாளி.
இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருப்பயத்தங்குடியில் இருந்து சோழங்கநல்லூர் சென்றுள்ளார்.
அப்போது சுரேஷ் பாபு ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் திருப்பயத்தங்குடி வடிகால் வாய்க்காலில் விழுந்தார்.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சுரேஷ்பாபுவை மீட்டு திருப்பயத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு சுரேஷ்பாபுவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் சுரேஷ் பாபுவின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சுரேஷ்பாபுவின் மனைவி மீனா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 5 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டு தற்பொழுது 50 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் மட்டுமே உள்ளது.
- தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப கமிஷன் உயர்த்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏஐ) எல்ஐசி முகவர்களின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை அளித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முகவர்க ளின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை கைவிட கோரியும், எல்ஐசியை தனியார் மையமாக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை கோட்ட பொருளாளர் திருவாரூர் கருணாநிதி பேசுகையில் எல் ஐ சி முகவர்கள் இல்லாத நிலையை இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையும், மத்திய அரசும் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.
பிஎஸ்என்எல் இந்திய விமான கட்டுப்பாடு உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி வருகி ன்றனர்.இதேபோல் எல்ஐசி தனியார் மையமாக ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.
எல்ஐசி தொடங்கப்பட்ட பொழுது 1956ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகையை தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.
5 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டு தற்பொழுது 50 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் மட்டுமே உள்ளது.
இந்த வளர்ச்சி முகவர்களால் ஏற்படுத்தப்பட்டது. கடந்த காலங்களில் எல்ஐசிஐ தனியார் மையமாக முயற்சித்த போது பல்வேறு போராட்டத்தில் இந்த சங்கம் ஈடுபட்டு எல்ஐசி யும் அதனால் பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகளையும் தக்க வைத்துள்ளோம்.
ஆனால் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப கமிஷன் உயர்த்த வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை.
புதிய பாலிசிகளுக்கு 20% கமிஷன் வழங்க வேண்டும், புதுப்பித்தலுக்கு ஐந்து சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும்.
ஆனால் ஐ ஆர் ஏ டி ஐ சொல்வதைக் கேட்டு எல்ஐசி கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.
குறிப்பாக பொதுமக்களின் உறுதி அளிக்கப்பட்ட உரிமம் தொகை வழங்கக்கூடாது என்பதில் முயற்சி செய்து வருகின்றனர்.
எல்ஐசி முகவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் 5 லட்சம் முகவர்கள் இன்று பணி இழந்து சென்றுள்ளனர்.
அனைத்து முகவர் சங்கங்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றால் எல்ஐசி என்ற ஒரு நிறுவனம் இல்லாத நிலை ஏற்படும் என்றார்.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோட்ட துணைத் தலைவர் முனுசாமி, மாவட்ட செயலாளர் பழனிவேல் பொருளாளர் கார்த்திகேயன், பொறு ப்பாளர்கள் சரவணன் அன்புமணி ஜவகர் சீனிவாசன் ஆறுமுகம் கலாதேவி மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் கபிலன் பரமேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் ராஜேந்திரன் நன்றி உரையாற்றினார்.
- கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
- நானும் எனது குழந்தைகளும் பாதுகாப்பின்றி உள்ளோம்.
நாகப்பட்டினம்:
நாகை திருக்கண்ணப்புரம் அருகே விசலுார் ராராத்திமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ்.
இவரது மனைவி உமா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் உமா மற்றும் அவரின் குழந்தைகளுக்கு எந்தவித பொருளாதார உதவியும் செய்யாமல், அந்த பெண் வீட்டிலேயே ரமேஷ் வசித்து வந்துள்ளார்.
மேலும் அடித்து துன்புறுத்துகிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது உமாவை தாக்கி உள்ளார்.
இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமா புகார் அளித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக உமா தனது பிள்ளைகளுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
நானும் எனது குழந்தைகளும் பாதுகாப்பு இன்றி உள்ளோம்.
எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் தொடர்ந்து வாஸ்து சாந்தி, லஷ்மி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது.
- கும்பாபிஷேக புனிதநீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த காக்கழனியில் பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. கடந்த 10 -ம் தேதி விக்னேஷ்வர பூஜைகளுடன் துவங்கிய நிகழ்ச்சியில் தொடர்ந்து வாஸ்து சாந்தி லஷ்மி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகளுடன் மகா பூர்ணாஹுதி நடைப்பெற்று சிறப்பு தீபாரதனைக்கு பிறகு கடம் புறப்பாடு நடைப்பெற்றது.
மங்கல வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
பின்னர் கும்பாபிஷேக புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை மாரி யம்மன் மற்றும் பெரியாச்சி, கல்லுக்குடியான், காத்தவராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடை ப்பெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- விழாவிற்கு கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
- 50 நபர்களுக்கு 165 மாடுகள் வாங்க ரூ. 23 லட்சத்து பத்தாயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க செயலாளர் வாஞ்சிநாதன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கருப்பம்புலம் ஊராட்சியில் 50 நபர்களுக்கு 165 மாடுகள் வாங்க ரூ. 23 லட்சத்து பத்தாயிரம் வட்டியில்லா கடனாக பால் உற்பத்தியாளர்கள் சங்க பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
- சிபிசிஎல் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளது.
- நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் நாகூர் சிதம்பரனார் சிறு துறைமுகம் வழியாக கொண்டு வரப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற் குழும 55 ஆவது பேரவை கூட்டம் தலைவர் சலிமுதீன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தலைவர் சலிமுதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் செயலாளர் கணேசன் ஆண்டறிக்கை வாசித்தார்.
பொருளாளர் சேகர் 55வது ஆண்டு வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், நாகப்பட்டினம் பனங்குடியில் 36 ஆயிரம் கோடி ரூபாயில் சிபிசிஎல் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளது.
இந்த நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் நாகூர் சிதம்பரனார் சிறு துறைமுகம் வழியாக கொண்டு வரப்படும்.
அந்த ஒப்பந்தத்தின் படியே விரிவாக்க பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
நாகை -தஞ்சை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வந்தாலும் பழைய சாலையை மேம்படுத்துவதற்கு 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.
தொகுதியில் நீண்ட நாள் செயல்படுத்தாமல் உள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டுள்ள தகவல்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசனை செய்து தமிழக அரசிற்கு பட்டியல் அனுப்பிவைக்கப்படும்.
அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பால பணிகளுக்காக நில எடுப்பு பணிகள் நிறைவு பெற்று இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. பாலம் அமைப்பதற்கு 115 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மேம்பால பணிகள் தொடங்க டிசம்பர் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும்.
கடல் உணவு மண்டலம் அமைப்பதற்கான பரிந்துரை அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய இருந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நல மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட திட்டங்களில் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது..
மற்ற துறைகளும் மாநில அளவில் முதல் 10 இடங்களில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக அரசு தொடங்கியுள்ள மாதிரி பள்ளிகளுக்கு வகுப்பறை மேம்பாட்டிற்கு இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் கலெக்ட ரிடம் தலைவர் சலிமுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.
தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் கலெக்டர் வழங்கினார்.
இறுதியில் இணை செயலாளர் முகமது பகுருதீன் நன்றி தெரிவித்தார்.






