என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்றுக்கரை ஓரங்களில் கட்டப்பட்ட வீடுகள்.
பிரதமரின் திட்டத்தில் தரமற்ற பொருளை கொண்டு வீடுகள் கட்டுவதாக பொதுமக்கள் புகார்
- பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் எட்டு வீடுகளை காண்ட்ராக்ட் எடுத்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
- குப்பை மணலை கொட்டி கட்டுவதால் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கொட்டியும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சியில் 1000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இதில் கீழத்தெரு பகுதி யில் ஆற்றுக்கரை ஓரங்களில் வசித்து வந்த 8 குடும்பங்களுக்கு பாதுகா ப்பற்ற மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் குளம் அருகே பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் எட்டு வீடுகளை காண்ட்ராக்ட் எடுத்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
வீட்டின் உள்ளே நிரப்பபடும் மணல், பழைய துணி, பிளாஸ்டிக் குப்பை உள்ளிட்ட அடங்கிய குப்பை மணலை கொட்டி கட்டுவதால் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கொட்டியும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாகவும் எனவே பணியை நிறுத்தி தரமான வீடுகளை கட்டித் தர வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அருண் தம்புராஜியிடம் மனு அளித்துள்ளனர்.






