search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய நாகை-தஞ்சை சாலையை சீரமைக்க ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு
    X

    கலெக்டர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர மன்ற தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பழைய நாகை-தஞ்சை சாலையை சீரமைக்க ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு

    • சிபிசிஎல் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளது.
    • நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் நாகூர் சிதம்பரனார் சிறு துறைமுகம் வழியாக கொண்டு வரப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற் குழும 55 ஆவது பேரவை கூட்டம் தலைவர் சலிமுதீன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    தலைவர் சலிமுதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் செயலாளர் கணேசன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    பொருளாளர் சேகர் 55வது ஆண்டு வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், நாகப்பட்டினம் பனங்குடியில் 36 ஆயிரம் கோடி ரூபாயில் சிபிசிஎல் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளது.

    இந்த நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் நாகூர் சிதம்பரனார் சிறு துறைமுகம் வழியாக கொண்டு வரப்படும்.

    அந்த ஒப்பந்தத்தின் படியே விரிவாக்க பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    நாகை -தஞ்சை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வந்தாலும் பழைய சாலையை மேம்படுத்துவதற்கு 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

    தொகுதியில் நீண்ட நாள் செயல்படுத்தாமல் உள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டுள்ள தகவல்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசனை செய்து தமிழக அரசிற்கு பட்டியல் அனுப்பிவைக்கப்படும்.

    அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பால பணிகளுக்காக நில எடுப்பு பணிகள் நிறைவு பெற்று இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. பாலம் அமைப்பதற்கு 115 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    மேம்பால பணிகள் தொடங்க டிசம்பர் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும்.

    கடல் உணவு மண்டலம் அமைப்பதற்கான பரிந்துரை அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய இருந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நல மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட திட்டங்களில் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது..

    மற்ற துறைகளும் மாநில அளவில் முதல் 10 இடங்களில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக அரசு தொடங்கியுள்ள மாதிரி பள்ளிகளுக்கு வகுப்பறை மேம்பாட்டிற்கு இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் கலெக்ட ரிடம் தலைவர் சலிமுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

    தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் கலெக்டர் வழங்கினார்.

    இறுதியில் இணை செயலாளர் முகமது பகுருதீன் நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×