வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

பாபு ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து திருப்பயத்தங்குடி வடிகால் வாய்க்காலில் விழுந்தார்.நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் சுரேஷ் பாபு (வயது 43) விவசாய கூலித்தொழிலாளி.

இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருப்பயத்தங்குடியில் இருந்து சோழங்கநல்லூர் சென்றுள்ளார்.

அப்போது சுரேஷ் பாபு ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் திருப்பயத்தங்குடி வடிகால் வாய்க்காலில் விழுந்தார்.

அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சுரேஷ்பாபுவை மீட்டு திருப்பயத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.

அங்கு சுரேஷ்பாபுவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் சுரேஷ் பாபுவின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சுரேஷ்பாபுவின் மனைவி மீனா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com