என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு முதல்- அமைச்சரின் காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • இத்திட்டத்தின் மூலம் 1545 பள்ளிகளில் மொத்தம் 14,095 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சி தொடக்க ப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்து மாணவர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட்டார் தமிழகத்தில் 5 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அறிமுக ப்படு த்தப்பட்டுள்ளது.நேற்று முதல் அமைச்சர் தொடங்கி வைத்த நிலையில் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக நாகை அக்கரைப்பேட்டை டாடா சுனாமி குடியிருப்பு நகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலைமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் கலெக்டர் அருண்தம்புராஜ், எம்.எல்.ஏக்கள் நாகை மாலி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி தொடங்கி வைத்தனர். பின்பு மாணவர்களோடு சேர்ந்து சாப்பிட்டனர். இத்திட்டத்தின் மூலம் 1545 பள்ளிகளில் மொத்தம் 14,095 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணா படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அண்ணா பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாள் விழா தி.மு.க கொண்டாடப்பட்டது. முன்ன தாக சந்தைப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் தலைமையில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    அதேபோல் திருமருகல் தெற்கு ஒன்றியம் பூதங்குடியில் அண்ணாவின் படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திட்டச்சேரியில் நகர செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காரையூரில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதேபோல் 39 ஊராட்சிகளிலும் அண்ணாவின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    • உபகரணங்கள் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தும் முறை போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக விவசாய களை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • அனைத்து ஆராய்ச்சியாளர்கள், முன்னவர்கள், அலுவலர்கள், 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் காரையூர் ஊராட்சியில் கோர்டேவா அக்ரி சைன்ஸ் -ன் விவசாய களை பயிற்சி நடைப்பெற்றது.விவசாய புரட்சியில் பல ஆண்டுகளாக சேவை செய்து வரும் கோர்டேவா அக்ரி சைன்ஸ் நிறுவனம் சார்பில் காரையூர் கிராமத்தில், நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய களை மேலாண்மை பற்றியும், நோவ்லக்ட் களைகொல்லி பற்றியும், உபகரணங்கள் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தும் முறை போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக விவசாய களை பயிற்சி விழா நடைப்பெற்றது.

    இதில் கோர்டேவாவின், அனைத்து ஆராய்ச்சியாளர்கள், முன்னவர்கள், அலுவலர்கள், 400 -க்கும் மேற்ற விவசாயிகள் பங்கேற்றனர். இதில் திருவாரூர் சந்தை தொடர்பாளர், வேளாண்மை அலுவலர், துணை வேளண்மை அலுவலர், ஆத்மா திட்ட மேலாளர், விவசாய சங்க தலைவர்கள், கொர்டெவா அமைப்பினர் பங்கேற்றனர். அனைவருக்கும் தென்னை மர கன்றுகள் வழங்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் கோர்டேவா வின் திருவாரூர் அதிகாரிகள் ஶ்ரீதர், வெங்கடேஷ், கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • வீட்டின் எதிரில் தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
    • மணிவாசகத்தை, மருமகன் சுசீந்திரன் கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு அழகு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 65). கோவில்அர்ச்சகர். இவர் நேற்றிரவு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மணிவாசகத்தின் மகள் தமிழ்மாலா, மருமகன் சுசீந்தரன் இருவரும் வீட்டின் எதிரில் தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்பொழுது திடீரென நடந்து சென்று கொண்டிருந்த மணிவாசகத்தை, மருமகன் சுசீந்திரன் கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிவாசகத்தை அருகில் இருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குபதிவு செய்து சுசீந்தரனை கைது செய்தனர்.

    • 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • அறுவடைக்கு தயாரான மற்றும் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திருமருகல், மேலப்பூதனூர், திருப்புகலூர், அம்பல், பொறக்குடி, திருப் பயத்தங்குடி, விற்குடி, வாழ்குடி, போலகம், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதி களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகவும், ஒரு சில பகுதிகளில்அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமா கவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடிக்கடி திடீரென கனமழை பெய்வ தால் அறுவடைக்கு தயாரான மற்றும் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகும் அபாய நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு திருமருகல் ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீனம்பநல்லூர் என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதியது.
    • பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்,:

    நாகை மாவட்டம் கீழையூர் பகுதி மேலப்பிடாகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 37) பெயிண்டர்.இவர் கடந்த 10ந்தேதி வாழக்க ரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியு ள்ளார். அப்போதுதிருக்கு வளையிலிருந்து மேலப்பி டாகை செல்லக்கூ டிய சாலையில் மீனம்பநல்லூர் என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதியது.இதல் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மணிமாறன் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை செய்து வருகின்றனர். இறந்த மணிமாறனுக்கு மாதவி என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    • நிகழ்ச்சியில் அன்பு கோர் அண்ணாச்சி நூல் ஆசிரியர் வீரையன், பதிப்பாளர் குருமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது.
    • அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் உட்பட பிரமுகர்களும் பள்ளி ஆசிரியர்களும்,மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் குருகுலம் அறக்கட்டளை நிறுவனர் மறைந்த அப்பாக்குட்டி பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பள்ளியின் பி.டி.ஏ தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் புகழேந்தி, வர்த்தக சங்க மாநிலத்துணை தலைவர் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ் துறை தலைவர் டாக்டர் சேதுபதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் தருமையாதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த சுவாமிகள், முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன், நாகை எம்பி செல்வராஜ், முன்னாள் எம்பி பிவி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கிரிதரன்,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், நாகை மாவட்ட வர்த்தக சங்க தலைவர் வேதநாயகம், இலக்கிய பெருமன்ற நாகை மாவட்ட தலைவர் புயல் குமார், செங்கல்பட்டு தொழில் உரிமையாளர்தியாகராஜன், வக்கீல்கள் பாலச்சந்தி ரன்,நமசிவாயம், ஓய்வு பெற்ற பிடிஓ ராஜரத்தினம், அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் உட்பட பிரமுகர்களும் பள்ளி ஆசிரியர்களும்,மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அன்பு கோர் அண்ணாச்சி நூல் ஆசிரியர் வீரையன், பதிப்பாளர் குருமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது. கோயமுத்தூர் தியாகு குழுவினரின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், வேதாரண்யம் கோயில் ஆதின வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி் நடந்தது.

    குருகுலம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கயிலை மணி வேதரத்னம் வரவேற்றார். அலுவலர் ஸ்ரீதர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை குருகுலம் கல்வியியல் கல்லூரி நிர்வாகி கேடிலியப்பன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    • இறுதிப் போட்டிக்கு தேர்வான 4 அணிகளுக்கு நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடியில் ஊராட்சி மற்றும் விழுவை நண்பர்கள் இணைந்து மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தினர். கிரிக்கெட் போட்டியில் புதுக்கோட்டை, பழனி, திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர் மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், இறுதிப் போட்டிக்கு தேர்வா ன 4 அணிகளுக்கு நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியில் தோப்புத்து றை கியூஎம்சிசி கிரிக்கெட் கிளப் அணியினர் முதல் பரிசுத் தொகையான ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2வது பரிசு 40 ஆயிரம் மற்றும் கோப்பையை விழுந்தமாவடி விஎம்டபுள்யுசிசி அணியி னரும்,

    3வது பரிசினை 30 ஆயிரம் மற்றும் கோப்பையை நாகூர் ஆர்கே என் எப்சிசிஅணியினரும் பெற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம், துணைத் தலைவர் அகிலா வெங்கடேஷ், கிராம நாட்டாண்மை பூமாலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை விழுவை கோவிந்த் தொகு த்து வழங்கினார்.

    • பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் எட்டு வீடுகளை காண்ட்ராக்ட் எடுத்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • குப்பை மணலை கொட்டி கட்டுவதால் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கொட்டியும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சியில் 1000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இதில் கீழத்தெரு பகுதி யில் ஆற்றுக்கரை ஓரங்களில் வசித்து வந்த 8 குடும்பங்களுக்கு பாதுகா ப்பற்ற மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் குளம் அருகே பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் எட்டு வீடுகளை காண்ட்ராக்ட் எடுத்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    வீட்டின் உள்ளே நிரப்பபடும் மணல், பழைய துணி, பிளாஸ்டிக் குப்பை உள்ளிட்ட அடங்கிய குப்பை மணலை கொட்டி கட்டுவதால் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கொட்டியும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாகவும் எனவே பணியை நிறுத்தி தரமான வீடுகளை கட்டித் தர வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அருண் தம்புராஜியிடம் மனு அளித்துள்ளனர்.

    • கூட்டத்திற்கு வட்டார தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார்.
    • மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

    கூட்டத்திற்கு வட்டார தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார் . கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்கூட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில்வருகிற 20ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் கலந்து கொள்வது

    நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை. உடன் வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பொருளாளர் வீரசேகரன் நன்றி கூறினார்.

    • வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில், சுமார் 1 1/2 அடி உயரமுள்ள சுருங்கல்லால் ஆன முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது.
    • கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது சிறிது உடைந்திருந்ததால் சிலையை கடலில் விட்டு சென்றர்களா.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு, வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில், சுமார் 1 1/2 அடி உயரமுள்ள சுருங்கல்லால் ஆன முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது.

    இதை பார்த்த வடக்குசல்லிக்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், வேட்டைக்காரனிருப்பு கிராம உதவியாளர்ரவி, முருகன் சிலையை கைப்பற்றி வேட்டைக்காரனிருப்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று வைத்து தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    இந்த சிலையை யாராவது விட்டு சென்றர்களா? இல்லை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது சிறிது உடைந்திருந்ததால் சிலையை கடலில் விட்டு சென்றர்களா? என விசாரித்து வருகின்றனர்.

    • எந்திரங்களை கொண்டு அறுவடை செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
    • விவசாயிகள் மின்கம்பிகளை கடந்து செல்ல கீழே தவழ்ந்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி மேலக்கரையிருப்பு பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 20 ஏக்கர் அளவிற்கு அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 30 ஏக்கர் விளை நிலங்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில்திரும ருகல் துணை மின் நிலைய த்திலிருந்து வயல்வெளி வழியாக கட்டலாடி, கீழப்பூதனூர் பகுதிகளுக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பங்கள் சேதமடைந்து மின்கம்பிகள் நெற்பயிர்களை உரசி செல்கிறது.

    இதனால் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் உள்ள னர்.

    மேலும் விவசாயிகள் மின் கம்பிகளை கடந்து செல்ல கீழே தவழ்ந்த படி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்த ப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பிகளை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×