search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகராட்சி பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்து குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். 

    நகராட்சி பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு முதல்- அமைச்சரின் காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • இத்திட்டத்தின் மூலம் 1545 பள்ளிகளில் மொத்தம் 14,095 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சி தொடக்க ப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்து மாணவர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட்டார் தமிழகத்தில் 5 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அறிமுக ப்படு த்தப்பட்டுள்ளது.நேற்று முதல் அமைச்சர் தொடங்கி வைத்த நிலையில் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக நாகை அக்கரைப்பேட்டை டாடா சுனாமி குடியிருப்பு நகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலைமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் கலெக்டர் அருண்தம்புராஜ், எம்.எல்.ஏக்கள் நாகை மாலி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி தொடங்கி வைத்தனர். பின்பு மாணவர்களோடு சேர்ந்து சாப்பிட்டனர். இத்திட்டத்தின் மூலம் 1545 பள்ளிகளில் மொத்தம் 14,095 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×