என் மலர்
நாகப்பட்டினம்
- வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் தலைமை வகித்தார்.
- தி.மு.க ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கபட்டுள்ளனர்.
வேதாரண்யம்:
அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சண்முகராஜ், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட கவுன்சிலர்கள் இளவரசி, திலீபன், மாவட்ட எ.ம்ஜி.ஆர் மன்ற பொருளாளர் அம்பிகாதாஸ், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பி ரமணியன், சவுரிரா ஜன்,நகர செயலாளர் நமச்சிவாயம், பேருராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட காரணமாக இருந்தவர் அண்ணா.
அவர் காட்டிய வழியில் அ.தி.மு.க. தொட ர்ந்து மக்கள் பணி செய்து வருகிறது.
அண்ணா வழியி ல்நடப்போம் என கூறும் தி.மு.க.வினர் மக்களுக்காக எதையுமே செய்வதில்லை.தேர்தல் வாக்குறுதிகள் என்பது சதவீதத்திற்குமேல் நிறைவேற்றி உள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் பொய் கூறுகிறார்.
தி.மு.க ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கபட்டுள்ளனர் .மின்கட்டணம், வீட்டு வரி உயர்த்தபட்டுள்ளது
.இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் மகளிர் அணி கலைச்செல்வி நன்றி கூறினார்.
- மணல் எடுப்பதால் மழை வெள்ள காலங்களில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
- மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து திருடி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம்-தென்பிடாகை இடையே திருமலைராஜன் ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டி மணல் திருடப்பட்டு வருகிறது.
பின்னர் அந்த மணலை அந்த பகுதியில் கொட்டி வைத்து இரவில் வந்து வாகனங்களில் எடுத்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது போல் மணல் எடுப்பதால் மழை வெள்ள காலங்களில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
மேலும் சுமார் 25 ஆண்டுகள் பழமையான அரசுக்கு சொந்தமான தேக்கு மரங்கள் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் மேற்கொண்டு மணலை திருடி கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்தும் திருடி செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
இருப்பினும் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியாமல் சிலர் ஆற்றங்கரைகளில் பள்ளம் தோண்டி மணலை திருடி செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு செய்து ஆற்றில் தோண்டி மணலை திருடிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேத்தாகுடி தெற்கு கீழவெளியில் முகமது அப்துல்நாசர் என்பவா் சாராயம் விற்றுக்கொண்டிருந்தார்.
- பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி சாராயம் 110 லிட்டரை போலீசார் கொட்டி அழித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேதாரண்யம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இங்கா்சால் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோடியக்காடு மீனாட்சித்தெருவைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 28), கோடியக்கரை காளிதாஸ் (40) ஆகியோர் பூநாரை இல்லம் பகுதியிலும், செம்போடை அன்பரசன் (42) என்பவர் அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திலும், தேத்தாகுடி தெற்கு கீழவெளியில் முகமதுஅப்துல்நாசர் (38) என்பவா் அப்பகுதியிலும் மற்றும் வேதாரண்யம் நகர் பகுதி மோட்டாண்டிதோப்பு பகுதியில் சாராயம் விற்ற ராஜா (32) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி சாராயம் 110 லிட்டரை கொட்டி அழித்தனர்.
- சிறப்பு சொற்பொழிவு மற்றும் புத்தகங்கள் வெளியிடும் விழா நடைபெற்றது.
- ஆங்கிலத்தில் எழுதிய மற்றும் தொகுப்பாக்கம் செய்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஆங்கிலத் துறை சார்பாக தொடர்புத் திறன் மற்றும் புத்தகங்கள் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆங்கிலத் துறையின் சார்பாக "தொடர்புத் திறன்" என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் புத்தகங்கள் வெளியிடும் விழாவானது நடைபெற்றது.
முனைவர் அசாருதீன் வரவேற்றார்.
கல்லூரியின் முதல்வர் நடராஜன் தலைமையுரை வழங்கினார். முனைவர் முகம்மது இஸ்மாயில், முனைவர் கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்வி குழுமத்தின் தலைவர் ஸ்ரீமதி. ஜோதிமணி அம்மா, செயலர் செந்தில் குமார், இணைச் செயலாளர் சங்கர் கணேஷ், மற்றும் ஆலோசகர் செவாலியர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பேராசிரியர் முனைவர் அசாருதீன் ஆங்கிலத்தில் எழுதிய மற்றும் தொகுப்பாக்கம் செய்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது.
பின்னர் அந்த புத்தகங்களை மதிப்பாய்வு செய்து இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினரான கோபிநாத், ஆங்கிலத்துறையின் தலைவர் முத்துகுமார், மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் குணாளன் உரையாற்றினர்கள்.
அதனை தொடர்ந்து ஆங்கில மொழி கற்றலின் சிறப்புகளையும், அதன் முக்கியத்துவம் குறித்தும் சிறப்பு விருந்தினர் கோபிநாத் சிறப்புரையாற்றி, மாணவர்க ளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து மாணவ ர்களுடன் உரையாடினார்.
நிகழ்வின் இறுதியில் முனைவர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் இடிக்கப்பட்டன.
- ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் சேதம் அடைந்ததால் அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.
இதனால் அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க ஷாநவாஸ் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில் திருமருகல் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், சுல்தான் ஆரிப், கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன், ஊராட்சி செயலர் சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 10 முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.
- செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகப்பட்டினம்:
உங்கள் தொகுதியில் முதல-அமைச்சர் திட்டத்தின் கீழ் தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று எம்.எல்.ஏ. கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.
மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்படி, நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. அதில், நாகப்பட்டினம் தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மலைகளை உடைத்து அவைகளை அரைத்து மணல் போல் விற்பனை செய்கின்றனர்.
- கிராமங்களில் கிடைக்கும் மணல்களை எடுத்து வேதாரண்யம் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வண்டுவாஞ்சேரி, தாணிக்கோட்டகம், மணக்காடு, கரியாப்பட்டினம், செட்டிபுலம், செம்போடை, புஷ்பவனம், பெரியகுத்தகை, நெய்விளக்கு ஆகிய கிராம ங்களில் சிமெண்ட்டுடன் கலக்கும் வகையிலான பெருமணல்கள் உள்ளன.
இவைகளையே, அப்பகுதி மக்கள் காலங்காலமாக பயன்படுத்தி வந்தனர். ஒரு டிராக்டர் ரூ.1500-க்கு கிடைத்து வந்தது.
ஆனால் தற்போது இவைகளை பயன்படுத்தக்கூடாது, எடுத்தால் வழக்கு போடப்படுகிறது என அறிவிப்பு வந்தது.
இதனால் பல கிலோ மீட்டர் தூரம் சென்று மலைகளை உடைத்து அவைகளை அரைத்து மணல் போல் விற்பனை செய்கின்றனர்.
அவைகள் விலையும் அதிகமாகும்.எனவே, கிராமங்களில் கிடைக்கும் மணல்களை எடுத்து வேதாரண்யம் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தால் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த நன்மை அளிப்பதாக இருக்கும்.
மேலும், மணல் எடுக்கும் இடங்களில் மழைநீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயருமே தவிர வேறு எந்த பாதிப்பும் இருக்காது.
எனவே, மணல் எடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் இளம்பாரதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- இதுவரை 368 பேருக்கு இன்ப்ளுயன்சா காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 69 பேருக்கு இன்ப்ளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மர்ம காய்ச்சலாலால் அதிகம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 368 பேருக்கு இன்ப்ளுயன்சா காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில், 5 வயதுக்கு கீழ் 42 குழந்தைகளுக்கும், 5 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள் 65 பேருக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 69 பேருக்கும் இன்ப்ளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குடும்பத்தில் கூட சிறுவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே மாணவர்களின் நலனை கருத்தில் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தொடர் விடுமுறை விட ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
- கைது செய்யப்பட்ட மீனவர்களை அந்நாட்டு கடற்படை இலங்கைக்கு கொண்டு சென்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரையும் இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேர் சொந்த ஊர் திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 431 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- 9 வயது முதல் 19 வயதுடையவர்களுக்கு தனித்தனியாக ஆறு சுற்று போட்டிகள் நடைபெற்றது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தகட்டூர் அரசு மேல்நிலைப்ப ள்ளியில் நாகை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் சோழமண்டல செஸ் போட்டி நடைபெற்றது.
போட்டியில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 431 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
9 வயது முதல் 19 வயதுடையவர்களுக்கு தனித்தனியாக ஆறு சுற்று போட்டிகள் நடைபெற்றது. செஸ் போட்டியினை வாய்மேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு செஸ் கமிட்டி இணைச் செயலாளர் பாலகுணசேகரன், நாகை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், நாகை மாவட்ட இணைச்செயலாளர் மணிமொழி, பள்ளி தலைமையாசிரியர் சுவாமிநாதன், சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா, ஆசிரியர்கள் சுப்ரமணியன், வைத்தியநாதன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சை கதிர்வேல் உள்ளிட்ட 11 நடுவர்களை கொண்டு செஸ் போட்டி நட த்தப்பட்டது. போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ், நூல்கள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.
வேதாரண்யத்தில் 7 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட செஸ் போட்டி நடத்தப்படுவது இதுவே முதன்முறை என போட்டியாளர்கள் தெரிவித்தனர்.
- மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திலும், செஸ் போட்டியை காணவும் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
- காலை உணவு திட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தவிர்க்கப்பட்டுவிடுமோ.
நாகப்பட்டினம்:
தமிழ்நாட்டில் 54 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும், 29 லட்சம் பேர் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கின்றனர்.
இரு வகை பள்ளிகளிலும் ஏழை எளிய மாணவர்களே அதிகளவில் படித்து வருகின்றனர்.
இதுவரை, பாட நூல், பாட குறிப்பேடுகள், சீருடை, சைக்கிள், மடிக்கணினி போன்ற அனைத்து சலுகைகளும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்து வந்தன.
ஆனால், அண்மைக்காலமாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தவிர்க்க ப்பட்டு வருகின்றனர்.
மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.
ஐ.ஐ.டியில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுச் செலவை அரசே ஏற்கும் என்ற சலுகை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திலும் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காணவும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தவிர்க்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
எனவே இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட ஷாநவாஸ் எம்.எல்.ஏ, இது தொடர்பாக சட்டமன்றத்தில் அரசிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
- பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- பைரவர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் ஒவ்வொரு தேய் பிறை அஷ்டமியன்று பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் சாமிக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






