search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க செய்ய வேண்டும்- எம்.எல்.ஏ.விடம் ஆசிரியர்கள் கோரிக்கை
    X

    நாகை ஷா நவாஸ் எம்.எல்.ஏ.விடம் ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க செய்ய வேண்டும்- எம்.எல்.ஏ.விடம் ஆசிரியர்கள் கோரிக்கை

    • மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திலும், செஸ் போட்டியை காணவும் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
    • காலை உணவு திட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தவிர்க்கப்பட்டுவிடுமோ.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாட்டில் 54 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும், 29 லட்சம் பேர் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கின்றனர்.

    இரு வகை பள்ளிகளிலும் ஏழை எளிய மாணவர்களே அதிகளவில் படித்து வருகின்றனர்.

    இதுவரை, பாட நூல், பாட குறிப்பேடுகள், சீருடை, சைக்கிள், மடிக்கணினி போன்ற அனைத்து சலுகைகளும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்து வந்தன.

    ஆனால், அண்மைக்காலமாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தவிர்க்க ப்பட்டு வருகின்றனர்.

    மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.

    ஐ.ஐ.டியில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுச் செலவை அரசே ஏற்கும் என்ற சலுகை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

    கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திலும் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காணவும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், தற்போது தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தவிர்க்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

    எனவே இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக் கொண்ட ஷாநவாஸ் எம்.எல்.ஏ, இது தொடர்பாக சட்டமன்றத்தில் அரசிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

    Next Story
    ×