என் மலர்
நாகப்பட்டினம்
- தூர்வாரும் பணிக்காக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியது.
- வாய்கால்கள் தூர்வாரப்படாததால் மழை காலங்களில் தண்ணீர வடிவது சிரமமாக இருந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம்,வேதாரண்யம் நகராட்சியில் ராஜாளி காடு, குமரன்காடு காந்திநகர் மாரியம்மன் கோவில்தெரு, குட்டாச்சிகாடு உள்ளிட்ட 21 வார்டுகளிலும் வாய்கால்கள் தூர்வாரப்படாததால் மழை காலங்களில் தண்ணீர் வடிவது மிகுந்த சிரமாக இருந்தது.
வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்காக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியது.
நகராட்சி பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சியர் குமரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
தூர்வரும் பணி இன்னும் மூன்று வாரத்தில் முடிவடையும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்தார்.
- முள்ளியாறு நீர் நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றப்படாதவை குறித்து பேசினர்.
- வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையிலேயே வெள்ள பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முன்னோடி விவசாயி மணியன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் மற்றும் குழந்தைவேல் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர்.
மாணங்கொண்டான் முள்ளியாறு நீர் நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றப்படாதவை குறித்து பேசினர்.
வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையிலேயே வெள்ள பாதிப்பு வர வாய்ப்புள்ளதால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே, இதை தவிர்க்க ஆறுகளில் உள்ள வெங்காய தாமரை ெசடிகளை அகற்றி சீர் செய்ய வேண்டும் என விவசாயிகள் கேட்டு கொண்டனர்.
கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கை குறித்து அரசுத்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
- மருத்துவ குணம் கொண்ட கலாக்காய் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.
- பட்டதாரி இளைஞர் கலாக்காயை சோதனை முறையில் சாகுபடி செய்து அதிக விளைச்சல் கண்டுள்ளார்.
நாகப்பட்டினம்:
மலைப்பிரதேசங்களில் வளரக்கூடிய கலாக்காயை சோதனை முறையில் விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டும் நாகை விவசாயிமலையடிவார பகுதிகளில் வளரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட கலாக்காய் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.
இவை ஊறுகாய் தயாரிப்ப தற்கும், பேக்கரி களிலும் அதிகமாக பயன்ப டுத்தப்படுகிறது.
தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப்பொய்கை நல்லூரில் சந்திரபோஸ் என்ற பட்டதாரி இளைஞர் கலாக்காயை சோதனை முறையில் சாகுபடி செய்து தற்பொழுது கொத்து கொத்தாக அதிக விளைச்சல் கண்டுள்ளது.
இதை பறித்து பரவை சந்தை நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், மன்னார்குடி பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். தற்போது ஒரு கிலோ கலாக்காய் ரூ.100 முதல் 150 வரை விற்கப்படுகிறது.
இதை பலரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இதனால் அதிக லாபம் தருவதாக விவசாயி சந்திரபோஸ் மகிழ்ச்சி தெரிவிக்கின்றார்.
- போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நாகை அவுரித்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
- நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நாகை அவுரித்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இப்பேரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது.
மேலும் இந்த பேரணியில் நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி நடுநிலை பள்ளியை சேர்ந்த 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிரான கோஷங்கள் மற்றும் கை பதாகைகள் வைத்து மாணவர்கள், மற்றும் காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் தியாகராஜன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏ.டி.அன்பழகன், ஆண்டனி பிரபு, மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கொண்ட குழுவினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் இரண்டு வெவ்வேறு கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை கைப்பற்றி அந்த இரண்டு கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் சீல் வைத்து கடையை மூடினர்.
இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
- நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார்.
- மரக்கன்றுகளை வழங்கி முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கி வைத்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார்.
மேலாண்மை துறை தலைவர் பிரபாகரன் வரவேற்றார்.
சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் கார்த்திகேயன் மாரிமுத்து தாமரைச்செல்வி ராஜா அறிவுசெல்வன்அர்ஜுனன் இளையராஜா உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- 17 வயதுக்குட்பட்ட பிரிவில் இறகு பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவில் தேர்வு பெற்றனர்.
- வெற்றி பெற்ற மாணவிகள் குருகுல நிர்வாகி கயிலைமணி வேதரத்தினம் மற்றும் உடற்கல்வி இயக்குனர் கவிதா தலைமையாசிரியர் செல்வி உட்பட பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கஸ்தூர்பா காந்திகள்யாகுருகுலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நாகை மாவட்ட அளவில் நடந்த வாலிபால் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட பிரிவில் 17 வயதுக்குட்பட்ட பிரிவினும் முதலிடம் பெற்று மாநில அளவில் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விளையாட்டு திடலில் வேதாரண்யம் நாகை கீழையூர் கீவளுர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வேதாரணியம் குருகுலம் பள்ளி மாணவிகள் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மேசை பந்து மற்றும் வாலிபால் போட்டிகள் இரண்டாம் இடமும் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் இறகு பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவில் தேர்வு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகள் குருகுல நிர்வாகிகயிலைமணி வேதரத்தினம் மற்றும் உடற்கல்வி இயக்குனர் கவிதா தலைமையாசிரியர் செல்வி உட்பட பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.
- வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் தலைமை வகித்தார்.
- தி.மு.க ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கபட்டுள்ளனர்.
வேதாரண்யம்:
அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சண்முகராஜ், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட கவுன்சிலர்கள் இளவரசி, திலீபன், மாவட்ட எ.ம்ஜி.ஆர் மன்ற பொருளாளர் அம்பிகாதாஸ், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பி ரமணியன், சவுரிரா ஜன்,நகர செயலாளர் நமச்சிவாயம், பேருராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட காரணமாக இருந்தவர் அண்ணா.
அவர் காட்டிய வழியில் அ.தி.மு.க. தொட ர்ந்து மக்கள் பணி செய்து வருகிறது.
அண்ணா வழியி ல்நடப்போம் என கூறும் தி.மு.க.வினர் மக்களுக்காக எதையுமே செய்வதில்லை.தேர்தல் வாக்குறுதிகள் என்பது சதவீதத்திற்குமேல் நிறைவேற்றி உள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் பொய் கூறுகிறார்.
தி.மு.க ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கபட்டுள்ளனர் .மின்கட்டணம், வீட்டு வரி உயர்த்தபட்டுள்ளது
.இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் மகளிர் அணி கலைச்செல்வி நன்றி கூறினார்.
- மணல் எடுப்பதால் மழை வெள்ள காலங்களில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
- மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து திருடி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம்-தென்பிடாகை இடையே திருமலைராஜன் ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டி மணல் திருடப்பட்டு வருகிறது.
பின்னர் அந்த மணலை அந்த பகுதியில் கொட்டி வைத்து இரவில் வந்து வாகனங்களில் எடுத்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது போல் மணல் எடுப்பதால் மழை வெள்ள காலங்களில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
மேலும் சுமார் 25 ஆண்டுகள் பழமையான அரசுக்கு சொந்தமான தேக்கு மரங்கள் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் மேற்கொண்டு மணலை திருடி கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்தும் திருடி செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
இருப்பினும் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியாமல் சிலர் ஆற்றங்கரைகளில் பள்ளம் தோண்டி மணலை திருடி செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு செய்து ஆற்றில் தோண்டி மணலை திருடிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேத்தாகுடி தெற்கு கீழவெளியில் முகமது அப்துல்நாசர் என்பவா் சாராயம் விற்றுக்கொண்டிருந்தார்.
- பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி சாராயம் 110 லிட்டரை போலீசார் கொட்டி அழித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேதாரண்யம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இங்கா்சால் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோடியக்காடு மீனாட்சித்தெருவைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 28), கோடியக்கரை காளிதாஸ் (40) ஆகியோர் பூநாரை இல்லம் பகுதியிலும், செம்போடை அன்பரசன் (42) என்பவர் அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திலும், தேத்தாகுடி தெற்கு கீழவெளியில் முகமதுஅப்துல்நாசர் (38) என்பவா் அப்பகுதியிலும் மற்றும் வேதாரண்யம் நகர் பகுதி மோட்டாண்டிதோப்பு பகுதியில் சாராயம் விற்ற ராஜா (32) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி சாராயம் 110 லிட்டரை கொட்டி அழித்தனர்.
- சிறப்பு சொற்பொழிவு மற்றும் புத்தகங்கள் வெளியிடும் விழா நடைபெற்றது.
- ஆங்கிலத்தில் எழுதிய மற்றும் தொகுப்பாக்கம் செய்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஆங்கிலத் துறை சார்பாக தொடர்புத் திறன் மற்றும் புத்தகங்கள் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆங்கிலத் துறையின் சார்பாக "தொடர்புத் திறன்" என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் புத்தகங்கள் வெளியிடும் விழாவானது நடைபெற்றது.
முனைவர் அசாருதீன் வரவேற்றார்.
கல்லூரியின் முதல்வர் நடராஜன் தலைமையுரை வழங்கினார். முனைவர் முகம்மது இஸ்மாயில், முனைவர் கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்வி குழுமத்தின் தலைவர் ஸ்ரீமதி. ஜோதிமணி அம்மா, செயலர் செந்தில் குமார், இணைச் செயலாளர் சங்கர் கணேஷ், மற்றும் ஆலோசகர் செவாலியர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பேராசிரியர் முனைவர் அசாருதீன் ஆங்கிலத்தில் எழுதிய மற்றும் தொகுப்பாக்கம் செய்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது.
பின்னர் அந்த புத்தகங்களை மதிப்பாய்வு செய்து இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினரான கோபிநாத், ஆங்கிலத்துறையின் தலைவர் முத்துகுமார், மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் குணாளன் உரையாற்றினர்கள்.
அதனை தொடர்ந்து ஆங்கில மொழி கற்றலின் சிறப்புகளையும், அதன் முக்கியத்துவம் குறித்தும் சிறப்பு விருந்தினர் கோபிநாத் சிறப்புரையாற்றி, மாணவர்க ளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து மாணவ ர்களுடன் உரையாடினார்.
நிகழ்வின் இறுதியில் முனைவர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் இடிக்கப்பட்டன.
- ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் சேதம் அடைந்ததால் அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.
இதனால் அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க ஷாநவாஸ் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில் திருமருகல் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், சுல்தான் ஆரிப், கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன், ஊராட்சி செயலர் சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 10 முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.
- செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகப்பட்டினம்:
உங்கள் தொகுதியில் முதல-அமைச்சர் திட்டத்தின் கீழ் தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று எம்.எல்.ஏ. கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.
மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்படி, நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. அதில், நாகப்பட்டினம் தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






