search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "adviser"

    • கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், கவர்னர் ஆகியோர் இடையே இணக்கமான சூழல் இருந்தது.
    • கடந்த 5 ஆண்டில் பெரும்பாலும் மோதலில்தான் காலம் கடந்தது.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு என்பது கவர்னரையே குறிக்கும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சரவை கவர்னருக்கு ஆலோசனை கூறும் அவையாகத்தான் கருதப்படுகிறது.

    இதனால் எந்த புதிய திட்டங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் அதிகாரிகள் வழியாக கவர்னர் ஒப்புதல் பெற்றால்தான் நிறைவேற்ற முடியும். கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், கவர்னர் ஆகியோர் இடையே இணக்கமான சூழல் இருந்தது.

    திட்டங்களில் சில சந்தேகங்களை கேட்டாலும், அதற்கு விளக்கம் அளிக்கும் பட்சத்தில் கவர்னர் ஒப்புதல் அளிப்பார்.

    2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு ஆட்சியாளர்கள், கவர்னர் இடையே பெரும் மோதல் உருவெடுத்தது.

    ஆட்சியாளர்கள் ஒரு தரப்பாகவும், கவர்னர் தலைமையில் அதிகாரிகள் ஒரு தரப்பாகவும் இரண்டாக பிரிந்தனர். இதனால் கடந்த 5 ஆண்டில் பெரும்பாலும் மோதலில்தான் காலம் கடந்தது.

    இதன்பிறகு மத்திய அரசின் கூட்டணி அரசே புதுச்சேரியில் அமைந்தது. இதனால் இந்த மோதல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதிகாரிகளுடனான மோதல் நீடித்தது.

    தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது சட்டசபையிலும் எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலருக்கு எதிராக போர்க்கொடியும் தூக்கினர்.

    எந்த திட்டத்துக்கான கோப்பை அனுப்பினாலும், அத்திட்டத்துக்கு பல்வேறு கேள்விகளை கேட்டு கோப்பை திருப்பி அனுப்பு வதாக ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர்.

    இதனிடையே அதிகாரிகள் மாற்றத்தில் முதல்-அமைச்சரோடு கலந்து பேசாமல் தன்னிச்சையாக தலைமை செயலாளர் செயல்பட்டதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து தலைமை செயலர் முதல்-அமைச்சரிடம் நேரில் விளக்கமளித்தார். இதனால் தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தலைமை செயலாளரை மாற்றித்தர வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படு கிறது. இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா சண்டிகர் மாநில அரசுக்கு ஆலோசகராக மாற்றப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக அருணாச்சல பிரதேசத்தில் பணியில் உள்ள சரத் சவுகான் புதுவை தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல புதுச்சேரி ஐ.ஏ.எஸ். அதிகாரி சவுத்ரிஅபிஜித் விஜய் சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அந்தமான் தீவில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் புதுச்சேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி கலெக்டர் வல்லவன் கோவாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அருணாச்சல பிரதேச அதிகாரி தால்வ்டே புதுச்சேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை யாரை கலெக்டராக நியமிப்பது என்பது அரசின் முடிவாகும். எனவே புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தால்வ்டே கலெக்டராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்த அதிகாரிகள் மாற்றம் புதுச்சேரியில் ஆட்சியாளர்கள்-அதிகாரிகளிடையே நிலவிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    • கூட்டத்துக்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார்.
    • புதிய மாவட்டங்களை உருவாக்குதல், ஏற்கனவே இருக்கும் மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள பகுதிகளை சீரமைத்தல் பற்றி விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழக காங்கிரசுக்கு தற்போது 76 மாவட்டங்கள் உள்ளன. இதில் தென் சென்னை மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் இறந்துவிட்டார். இது தவிர தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட தலைவர் பதவிகளும் காலியாக உள்ளன.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் நிர்வாகத்துக்கும், பிரசாரத்துக்கும் வசதியாகவும் மேலும் சிலருக்கு பதவிகள் வழங்கும் வகையிலும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற ரீதியில் கூடுதலாக மாவட்டங்களை உருவாக்க மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே திட்டமிட்டு ஒரு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவிடம் வழங்கி உள்ளார்கள்.

    கோஷ்டி தலைவர்கள் சிலர் இந்த திட்டத்தை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. இதனால் புதிய மாவட்டங்களை உருவாக்குவதில் கால தாமதம் ஆகி வருகிறது.

    இந்நிலையில் இன்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்குதல், ஏற்கனவே இருக்கும் மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள பகுதிகளை சீரமைத்தல் பற்றி விவாதிக்கப்பட்டது.

    மேலும் தேர்தல் பணிக்காக பூத்கமிட்டிகளை உடனடியாக அமைக்க வேண்டும்.

    மத்திய அரசு கொண்டு வரும் பொதுசிவில் சட்டத்தை கடுமையாக எதிர்ப்பது, பா.ஜனதாவின் மக்கள் விரோத கொள்கைகளை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வது, வாக்குச் சாவடி குழுவுக்கும், மாநில தலைமைக்கும் இடையே தகவல் தொடர்புகளை உறுதிபடுத்துதல் பற்றியும் விவாதித்தனர்.

    • ஆண்டு சந்தா உட்பட அனைத்து செலவையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.
    • காப்பீட்டு திட்டத்தின் பயன்பாடுகள் பற்றி பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமத்தில் பணிபுரியும் அனைவருக்கும் நிர்வாகம் சார்பாக மருத்துவ காப்பீட்டு திட்டம்.நாகை இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் பயன்பெறும் வகையில் ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவ காப்பீட்டு பதிவு செய்து, ஆண்டு சந்தா உட்பட அனைத்து செலவையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.

    அதற்கான காப்பீட்டு பதிவு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்நிகழ்வினை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் பணியாளர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கி துவக்கி வைத்தார்.

    கல்லூரியின் செயலர் திரு செந்தில்குமார், இணைச் செயலர் சங்கர் கணேஷ் மற்றும் ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோரும் பணியாளர்களுக்கு காப்பீட்டு பதிவு அட்டையை வழங்கினர்.

    மாணவர் சேர்க்கை பிரிவின் தலைவர் முனைவர் மணிகண்ட குமரன் அவர்கள் காப்பீட்டு திட்டத்தின் பயன்பாடுகள் பற்றி பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை அவர்கள் பணியாளர்கள் சார்பாக நிர்வாகத்திற்கு நன்றி கூறினார்.

    முதன்மை செயல் அதிகாரி, கல்விசார் இயக்குனர், அனைத்து கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஆந்திர மாநில அரசின் தகவல் தொடர்பு ஆலோசகர் பதவியில் இருந்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கணவர் பரகல பிரபாகர் இன்று ராஜினாமா செய்தார். #APgovermentadviser #resigns
    ஐதராபாத்:

    ஆந்திர மாநில அரசின் தகவல் தொடர்பு ஆலோசகராக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் கடந்த 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்ட இவரது பதவி மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

    இதையடுத்து, பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஆந்திர மாநில அரசு ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். இதையடுத்து சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதால் சமீபத்தில் பாஜகவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் கட்சி முறித்துக்கொண்டது.

    இதைத்தொடர்ந்து, அம்மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, பாஜகவை முழு மூச்சாக எதிர்த்து வந்தார். இந்நிலையில், ஆந்திர அரசின் தகவல் தொடர்பு அதிகாரியாக இருந்த பரகல பிரபாகரன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ சிறப்பு அந்தஸ்து கோரி வரும் மாநில அரசின் போராட்டத்துக்கு தாம் தடையாக இருக்க விரும்பவில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் எழுப்பும் கேள்விகள் வேதனை அளிக்கின்றன. உங்களின் விருப்பத்துக்கு மாறாக நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    4 ஆண்டுகள் பதவி வகித்த பரகல பிரபாகரின் பதவிக்காலம் ஜூலை 4-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தற்போது அவர் ராஜினாமா செய்திருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. #APgovermentadviser #resignsa
    ×