என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனி செயலாளர்"

    • எப்ஸ்டீன் சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்படுகின்றன.
    • அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் லட்சக்கணக்கிலான பக்கம் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது.

    பிரடிஸ்லவா:

    அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டது.

    அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூயார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    இதற்கிடையே, சுலோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோவின் தனிச்செயலராகவும், அறிவுரை வழங்குபவராகவும் இருந்தவர் மிரோஸ்லவ் லஜக். 2009ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை அந்நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்கா வெளியிட்ட எப்ஸ்டீன் வழக்கு ஆவணங்களில் லஜக்கின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால் பிரதமரின் தனிச் செயலர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஸ்வநாதன் சென்னையில் நேற்று காலமானார் #PersonalSecretary #Viswanathan #RIP
    சென்னை:

    ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஸ்வநாதன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 77.

    திருச்சி கலெக்டர், சுகாதாரத்துறை செயலாளர், முதல்-அமைச்சரின் செயலாளர், கோ-ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் உள்பட பல உயரிய பதவிகள் வகித்தவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஸ்வநாதன். இவர் சென்னை அண்ணாநகர் பொன்னிகாலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    விஸ்வநாதன் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து காரில் வெளியே கிளம்பினார். காரை பின்புறமாக இயக்கும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மீது பலமாக மோதியது. இதில் அவர் தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் நேற்று மாலை உயிரிழந்தார்.

    அவரது உடல் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் அவரது உடல் நியூ ஆவடி ரோட்டில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

    மறைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஸ்வநாதனுக்கு ஆதிரைசெல்வி என்ற மனைவியும், கவுதமன், அசோக்குமார் என்ற 2 மகன்களும், மித்ரா என்ற மகளும் உள்ளனர்.
    ×