என் மலர்
நாகப்பட்டினம்
- மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
- வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி வரதராஜபெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது மஞ்சள் பொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வரதராஜபெருமாள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 11 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
- அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
அமலாக்கத்துறை மற்றும் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் 11 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
இதன் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
அதனை கண்டித்து திட்டச்சேரி, கட்டுமாவடி, புறாக்கிராமம், ப.கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மேற்கண்ட பகுதிகளில் முழு கடை அடைப்பு நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அமைதியான முறையில் கடை அடைப்புகள் நடைபெற்றது.
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பிளாஸ்டிக் தவிர்ப்போம், கடைகளுக்கு மஞ்சள்பை எடுத்துச் செல்வோம்.
- மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து தூய்மை பணியாளரிடம் கொடுக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சயின் சார்பில்ராஜாஜி பூங்காவில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எற்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார் நகராட்சி ஓவர்சியர் குமரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில்நகராட்சி துணைத் தலைவர் மங்களநாயகி, நகர மன்ற உறுப்பினர்கள் உமா, மயில்வாகனன், செல்வம், பொறியாளர் முகமது இப்ராஹிம், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள்கலந்து கொண்டனர்
பின்பு என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ராஜாஜி பூங்காவில் இருந்து பேரணி புறப்பட்டு மேல வீதி வடக்கு வீதி வழியாக நகராட்சி சென்றடைந்தது. பேரணியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் தவிர்ப்போம், கடைகளுக்கு மஞ்சள் பை எடுத்து செல்லவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி கடைகள், வீடுகளுக்கும் பாதசாரிகளுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
நகராட்சி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பச்சை நிற கூடைகளில் மக்கும் குப்பை களையும் நீல நிறக் கூடைகளில் உலர் கழிவுகளையும் மக்காத குப்பைகளை சிவப்பு நிற கூடைகளிலும் கொட்ட வேண்டும்.
மேலும் வீடுகள், கடைகளில் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து தினசரி குப்பை எடுக்க வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும் குப்பைகளை ரோட்டில் கொட்டி வைக்க கூடாது தூய்மையான நகரமாக திகழ பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் நகராட்சி ஆணையர் ஹேமலதா கேட்டு கொண்டார்.
- 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- செருதூர் கடற்கரை–யிலிருந்து- ராமர்மடம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு பனை விதை நடப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சியானது 6 கி.மீ தூரம் கடற்கரை கொண்ட கிராமமாகும். 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மற்றும் 2018ம் ஆண்டு வீசிய கஜாபுயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்த கடலோர கிராமம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது
அதனை தடுக்கும் வகையில் இயற்கை அரணாக விளங்கும் பனை மரத்தை அதிக அளவில் நட வேண்டும் என ஊராட்சி சார்பில் திட்டமிட்டு 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க இலக்கு நிர்ணயிக்க–ப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் தொடங்கி வைத்தார்
செருதூர் கடற்கரை–யிலிருந்து- ராமர்மடம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு பனை விதை நடப்பட்டது இதன் மூலம் கிராமத்தை பெரிய அளவிலான பாதிப்பிலிருந்து காக்க முடியும் என தெரிவித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி வெற்றிச்செல்வன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யா தமிழரசன், ஊராட்சி செயலர் ச.சீதா, வார்டு உறுப்பினர் செல்வம், செல்வி, கலாநிதி மக்கள் நல பணியாளர் செல்வி கலந்து கொண்டனர்.
- 11 ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருந்து வந்த, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பணி பாதுகாப்பு ஆணை வழங்கப்பட்டது.
- முன்னாள் நிர்வாகிகளுக்கு அரசு பணி நிறைவு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுக்குழு மற்றும் நன்றி அறிவிப்பு பாராட்டு விழா மாநிலத் தலைவர் மு.சி.முருகேசன் தலைமையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது. காலை நடைபெற்ற பொதுக்குழுவில் கோயம்புத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் காமராஜ் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன் வேலை அறிக்கையையும், மாநிலப் பொருளாளர் ஜான்சிம்சன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் விவாதங்களுக்கு ப் பின்னர் இரண்டு அறிக்கைகளும் ஏற்கப்பட்டது. மாநில நிர்வாகிகள் பி.நல்லத்தம்பி, வேலவன், ஸ்டாலின் பிரபு மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். கோயம்புத்தூர் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னாள் நிர்வாகிகள் போஸ் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோருக்கு அரசுப் பணி நிறைவு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிர்வாகிகள் தேர்தலில் மு.சி.முருகேசன் (கோவை) மாநிலத் தலைவராகவும், பி.நல்லத்தம்பி (கடலூர்) மற்றும் ஏ.முத்துராஜா (தென்காசி) மாநில துணைத் தலைவர்களாகவும், அ.தி.அன்பழகன் (நாகப்பட்டினம்) பொதுச் செயலாளராகவும், வி.காமராஜ் (கோவை) மற்றும் ரவிச்சந்திரன் (செங்கல்பட்டு) மாநில இணைச் செயலாளர்களாகவும், ஜான்சிம்சன் (செங்கல்பட்டு) மாநிலப் பொருளாளராகவும், வேலவன் (திருவள்ளூர்) தலைமை நிலையச் செயலாளராகவும் ஸ்டாலின் ராஜரெத்தினம் (விழுப்புரம்), மாநில அமைப்புச் செயலாளராகவும் ஜெயராஜ் (சென்னை) மற்றும் மோகன்தாஸ் (கோவை) மாநிலத் தணிக்கையாளர்களாகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
11 ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருந்து வந்த, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பணிப் பாதுகாப்பு ஆணையை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஆணை பெற்றிட துணை நின்றவர்களுக்கும் நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடைபெற்றது. நாகை மாலி எம்.எல்.ஏ மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன் நன்றி கூறினார்.
- கூட்டத்திற்கு கிராமமக்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண உடனடியாக சம்பந்தபட்ட துறைக்கு அனுப்பி வைக்கபட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் சமூக நல திட்ட தாசில்தார் ரமேஷ், மீன் துறை ஆய்வாளர் நடேசராஜா, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி ஆனந்தராஜ், தோட்ட கலை துறை உதவி அலுவலர் கார்த்திக், கூட்டுறவுத்துறை சார்பாதிவாளர் முத்துராஜா, வறுமை கோட்டு திட்ட அலுவலர் சியாமளா, மகளிர் சுய உதவி குழுவினர், கிராம மக்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் 6 மனுக்கள் மட்டுமே அளித்தனர். அதற்கு தீர்வுகாண உடனடியாக சம்பந்தபட்ட துறைக்கு அனுப்பி வைக்கபட்டது. கூட்டத்தில் மாற்று திறனாளிக்கு சான்றிதழை ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் வழங்கினார். முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் அழகேசன் நன்றி கூறினார்.
- 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும்.
- புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலகளில் இருந்தும் வருகை தந்து தரிசனம் செய்வர்.
இந்நிலையில் புரட்டாசி மாதம் சனிக்கிழமையான நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்ட உடன் கோவிந்தா கோபாலா என கோஷங்கள் எழுப்பியபடியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
- இளைஞர்களுக்கு பேரிடர் மீட்பு உபகரண பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணியில் பேரிடர் கால பயிற்சி வகுப்பில், மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது:
மாவட்ட கலெக்டர் பங்கேற்பு மழை வெள்ளம் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் அதிகம் பாதிக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்த நாட்கள் பயிற்சி வகுப்பு வேளாங்கண்ணியில் நடைபெற்றது.மீட்பு பணியில் ஈடுபட தேர்வு செய்யப்பட்ட 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
இதில் இக்கட்டான சூழலில் சிக்கித் தவிப்போருக்கு எவ்வாறு மருத்துவ உதவி செய்ய வேண்டும், உயிருக்கு போராடும் நபருக்கு முதலுதவி செய்வது மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இதில் பயிற்சி பெற்ற 200 இளைஞர்களுக்கும் தலா 9000 மதிப்பிலான பேரிடர் மீட்பு உபகரண பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பங்கேற்று எதிர்வரும் மழைக்காலத்தில் இளைஞர்கள் தங்களது பணியை சிறப்பாக மேற்கொள்ளவும், சிறப்பாக பணிபுரியருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் கூறினார்.
- ஏழை எளிய, நடுத்தர பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
- அழகுக்கலை, வெள்ளாடு வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் 50 மகளிருக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
ஊராட்சியில் உள்ள திருக்கண்ணபுரம், ராமநந்தீஸ்வரம், காக்கமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய நடுத்தர பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த தையல் பயிற்சி வகுப்பு ஒரு மணி நேரத்துக்கு 5 - பேர் வீதம் தினமும் 50- பேருக்கு தையல் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இதில் சாம்பிராணி தயாரித்தல், அழகுக்கலை, வெள்ளாடு வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் பயிற்சியாளர் ஜெயந்தி, வார்டு உறுப்பினர் ஆல்பர்ட் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஆண்டு சந்தா உட்பட அனைத்து செலவையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.
- காப்பீட்டு திட்டத்தின் பயன்பாடுகள் பற்றி பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமத்தில் பணிபுரியும் அனைவருக்கும் நிர்வாகம் சார்பாக மருத்துவ காப்பீட்டு திட்டம்.நாகை இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் பயன்பெறும் வகையில் ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவ காப்பீட்டு பதிவு செய்து, ஆண்டு சந்தா உட்பட அனைத்து செலவையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.
அதற்கான காப்பீட்டு பதிவு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வினை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் பணியாளர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கி துவக்கி வைத்தார்.
கல்லூரியின் செயலர் திரு செந்தில்குமார், இணைச் செயலர் சங்கர் கணேஷ் மற்றும் ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோரும் பணியாளர்களுக்கு காப்பீட்டு பதிவு அட்டையை வழங்கினர்.
மாணவர் சேர்க்கை பிரிவின் தலைவர் முனைவர் மணிகண்ட குமரன் அவர்கள் காப்பீட்டு திட்டத்தின் பயன்பாடுகள் பற்றி பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை அவர்கள் பணியாளர்கள் சார்பாக நிர்வாகத்திற்கு நன்றி கூறினார்.
முதன்மை செயல் அதிகாரி, கல்விசார் இயக்குனர், அனைத்து கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- கூட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
- திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் அதிமுக சார்பில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.
திட்டச்சேரி பேரூர் செயலாளர் அப்துல் பாசித், மாவட்ட துணை செயலாளர் அபுசாலி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் வரவேற்றார்.
நாகை மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளருமான ஓ.எஸ்.மணியன்.எம்எல்ஏ, மாநில கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஆசைமணி, மாவட்ட அவை தலைவர் ஜீவானந்தம், தலைமை கழக பேச்சாளர்கள் அன்பழகன், நல்லுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
முடிவில் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.
- உணவில் வைட்டமின் சி அடங்கிய உணவு சத்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும், கால்களில் காலணி அணிய வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஊட்டச்சத்து மாத விழா வாகன பிரச்சார தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன் தலைமையேற்று குத்துவிளக்கேற்றி கொடிய சைத்து தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, சிவகுரு பாண்டியன், தேவி செந்தில் சரவணன் வீர தங்கம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, வட்டார திட்ட உதவியாளர் சித்ரா, மேற்பார்வையாளர் சரவணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் நேரில் சென்று சுத்தம், சுகாதாரம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனை களையும் விதம், உணவில் வைட்டமின் சி அடங்கிய உணவு சத்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும், கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும், கால்களில் காலணி அணிய வேண்டும் உள்ளிட்டவைளை குறித்து விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.






