search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்பிடி சீசன் தொடக்கம்; கோடியக்கரையில் படகுகளுடன் குவிந்த வெளிமாவட்ட மீனவர்கள்
    X

    வெளியூரிலிருந்து வந்துள்ள பைபர் படகுகள்.

    மீன்பிடி சீசன் தொடக்கம்; கோடியக்கரையில் படகுகளுடன் குவிந்த வெளிமாவட்ட மீனவர்கள்

    • நாளொன்றுக்கு 5 முதல் 20 டன் வரையில் மீன்கள் பிடிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு தங்குமிடம், குடிதண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்,வேதாரண்யம் தாலுகா கோடியக்க ரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

    இக்காலத்தில் நாகை, காரைக்கால், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடித்து அண்டைய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவுக்கு மினி வேன்களில் விற்பனைக்காக அனுப்பி வைப்பார்கள்.

    நாளொன்றுக்கு 5 முதல் 20 டன் வரையில் மீன்கள் பிடிக்கப்பட்டு இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும்.

    இந்த ஆண்டு முன்கூ ட்டியே மீன்பிடி சீசன் காலம் தொடங்கியதால் வானகிரி, சின்ன மேடு, பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, சாமாத்தான்பேட்டை, காரை க்கால், மடவாய்மேடு, அக்கம்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட படகுகள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர்.

    மீனவர்கள் வருகையால் களை இழந்து காணப்பட்ட கோடியக்கரை மீன் பிடிதளம் தற்போது சுறுசுறுப்பாக காணப்படுகிறது.

    வெளியூ ரிலிருந்து வந்து தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு தங்குமிடம், குடிதண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கோடி யக்கரை மீனவர்நல சங்க முன்னாள் செயலா ளர் சித்திரவேல் கூறியதாவது:-

    நடப்பாண்டு முன் கூட்டியே மீன்பிடி சீசன் தொடங்கியதால் அதிகளவில் வெளியூர் படகுகள் வந்துள்ளன.

    வெளியூரிலிருந்து வரும் மீனவ குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளும் கிராமத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    இந்தாண்டு மீன்பிடி சீசன் நன்றாக இருக்கும் என்றும் சுமார் ரூ. 200 கோடிக்கு மீன் வர்த்தகம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×