என் மலர்
நாகப்பட்டினம்
- சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் சென்னை சென்றார்.
- திரும்பி வந்துபார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலத்தை சேர்ந்தவர் மாதவன்.
சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் சென்னை சென்றார்.
திரும்பி வந்துபார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.20 ஆயிரம் ரொக்கம், 2 தங்க மோதிரம், வெள்ளி பொருட்கள் மாயமாகியது.
மர்ம நபர்கள் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து அவர் வலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- விவசாய தொழிலாளர்கள் நிறைந்த தலைஞாயிறு பேரூராட்சியில் குறும்படம் எடுக்கப்பட்டு வெளியிடபட்டுள்ளது.
- குறும்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேதாரண்யம்:
தமிழ்நாடு அரசு திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை அறிமுகபடுத்தி எனது குப்பை எனது பொறுப்பு என பிரசாரம் செய்து வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு குறும் படம் வெளியிடப்பட்டது. இந்த குறும்படம் தமிழகத்தில் உள்ள 380 பேரூராட்சிகளில் முதன் முதலாக கிராமபுரத்தில் அமைந்துள்ள விவசாயிகள் விவசாயதொழிலாளர்கள் நிறைந்த தலைஞாயிறு பேரூராட்சியில் எடுக்கபட்டு வெளியிடபட்டுள்ளது. இந்த குறும்படத்திற்காக ஒரு டன் குப்பை முன்னூறு குப்பைதொட்டிகள் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்படு த்தப்பட்டு குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று செயல் அலுவலர் குகன் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வெளியிடப்பட்டுள்ள. இந்த குறும்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படு த்தப்பட்டு வருகிறது.
- திட்டச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.
- சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன.
நாகப்பட்டினம் :
நாகை மாவட்டம் கொத்த மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் நேரடியாக கடிதம் எழுதி, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய 10 கோரிக்கைகளை கேட்டுப் பெற்றுள்ளார்.
அந்த வகையில் நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த 10 கோரிக்கைகளில் முக்கியமாக, திருமருகல் ஒன்றியத்தை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.
விரைவில் அது நிறைவேற்றப்படும். மேலும், இந்த ஊருக்கு அருகில் உள்ள திட்டச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது.
இந்த ஊராட்சியிலும் சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. உங்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர் விவேகானந்தன், கிராம சபை மேற்பார்வையாளர் சுப்ரமணியன், திட்டச்சேரி அரசு மேல் நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் ஆசிரியர்கள், அனந்தநல்லூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் சக்திவேல், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- துர்க்கை அம்மனுக்கு பால், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்படும்.
- சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
இக்கோவிலில் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை மிகவும் விஷேசமானதாகும்.
அன்று துர்க்கை அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கல்லூரிக்கு தேவையான இடத்தை குடவாசல் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும்.
- அந்த பகுதியில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப கல்லூரி அமைக்கப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 8 வருடங்களாக அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.
இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அந்த கல்லூரிக்கு நிரந்தர இடத்தை தேர்வு செய்து கல்லூரி கட்டிட பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடந்து.
நன்னிலம் தொகுதியில் உள்ள குடவாசல் கல்லூரிக்கு வேறு ஒரு தொகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த இடத்திற்கு குடவாசலில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.
மேலும் கல்லூரிக்கு தேவையான இடத்தை குடவாசல் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று குடவாசல் பேருந்து நிலையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தரையில் அமர்ந்து தொடர்ந்து 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நன்னிலம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் மாணவ- மாணவிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது நிருபர்க ளிடம் காமராஜ் எம்.எல்.ஏ கூறியதாவது, குடவாசலிலே கல்லூரி அமைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்நிலையிலும் இந்த மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக இருப்பேன்.
சட்டமன்றத்தில் இதைப் பற்றி பேசிய பொழுது, அந்தப் பகுதியில் மக்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்லூரி அமைக்கப்படும் என உயர்க்கல்வி அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.
குடவாசலிலேயே கல்லூரி அமைய வேண்டும் என்று இப்பகுதி மக்களும், கல்லூரி மாணவர்களும் போராடிவரும் நிலையில் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்வின் போது அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், ராஜேந்திரன், நகர செயலாளர் சாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், துணைத் தலைவர் தென்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுகிறது.
- பனைஓலை மற்றும் தார்பாய்களை கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை 9 மாத காலம் உப்பு உற்பத்தி நடைபெறும் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் தமிழகம் முழுவதும் லாரி மூலம் அனுப்பிவைக்கபடுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு உற்பத்தி துவங்கி முதல் செப்டம்பர் மாதம் வரை விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முனபு பெய்த மழைக்கு பின்பு கடந்த ஒரு வாரத்திற்கு பின் உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் துவங்கபட்டது கடந்த சில நாட்களாக பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கபட்டது.
மழைக்காலம் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மீண்டும் உப்பு உற்பத்தி மீண்டும் துவங்க சத்தியமில்லாத நிலையில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சேமித்து வைத்துள்ள உப்பை மழையில் இருந்து பாதுகாக்க பனைஓலை மற்றும் தார்பாய்களைக் கொண்டு மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
குறைந்த அளவே உப்பு கையிருப்பில் உள்ளதால் நல்ல விலை போகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி அளித்தல் பற்றி தத்ரூபமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
- தீயணைப்பு வீரர்கள் மிதக்கும் கருவிகளை கொண்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள பேரிடர் மேலாண்மை குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் நடந்தது.
பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள கோவில் குளத்தில் தத்ரூபமாக நடைபெற்ற மீட்பு ஒத்திகையை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
ஐந்து 108 வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு சைரன் சத்தம் ஒலிக்க பரபரப்பாக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் நீரில் மூழ்கியவர்களை ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணஙகள் மூலம் வெள்ளத்தில் சிக்கிய வர்களை காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி அளித்தல் பற்றி தத்ரூபமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
ரத்த காயங்களுடன் அடிபட்டவர்களை தூக்குதல், மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி அளிப்பது, வெள்ளத்தில் சிக்கிய–வர்களை கண்டுபிடித்து காயத்தின் தன்மைக்கு ஏற்றவாறு கைகளில் வண்ண ரிப்பன்களை கட்டுதல் போன்ற மீட்பு நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
ஸ்கூபா போன்ற அதி நவீன மிதக்கும் கருவிகளை கொண்டு நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தண்ணீரில் தத்தளித்த கால்நடையை காப்பாற்றி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மையின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால பெட்டக உபகரணங்களை ஆய்வு செய்த வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வளர்களை பாராட்டினார்.
ஏராளமான வாகனங்கள் சைரன் ஒளி எழுப்பி நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் முதலுதவி பயிற்சிகள் செய்முறை அளிக்கப்பட்டது.
- சிறப்பு விருந்தினர் மூலமாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றிய அளவில் ஜே.ஆர்.சி ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவர் ரேவதி ஜே.ஆர்.சி கொடியினை ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜீவ் காந்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முகம்மது யாசீன், வவ்வாலடி பள்ளியின் தலைமையாசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.
ஜே.ஆர்.சி யின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ ஆலோசகர் லியாக்கத் அலி திருப்பயத்தங்குடி, ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் ஏசுநாதன் ஆகியோர் சுகாதாரம் தொடர்பான அறிவுரைகளை வழங்கினா்.
திருமருகல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அலுவலர்கள் மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் முதலுதவி பயிற்சிகளை செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டினர்.
திருமருகல் வட்டார கல்வி அலுவலர் ரவி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் மூலமாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கொட்டாரக்குடி கிராமத்தைச் சுற்றிலும் 250 பனை விதைகள் விதைக்கப்பட்டன.
முடிவில் பள்ளியின் ஜே.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார்.
- விழுந்தமாவடி அரசு பள்ளி 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்களை கொண்டதாகும்.
- மாணவர்களின் நலன் கருதி பள்ளியை மறவாமல் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி தம்பிரான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான நாகராஜன்.
இவர் விழுந்தமாவடியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 35 ஆண்டுகளாக தொழில் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் இதே பள்ளியில் பயின்று தற்பொழுது ஓய்வு பெற உள்ள நிலையில் தான் பயின்ற மற்றும் பணிபுரிந்த பள்ளிக்கு ஏதாவது செய்ய நினைத்த ஆசிரியர் 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகம் உள்ள பள்ளி கட்டிடத்திற்கு சுமார் 1.25 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் நலன் கருதியும் வெள்ளை அடித்து வர்ணம் பூசி வருகிறார்.
இன்னும் பத்து நாட்களில் பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் இந்தப் பணி தனக்கு மன நிறைவை அளிப்பதாகவும் மன மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதே போல் மாணவர்கள் தங்கள் பயின்று பல்வேறு துறைகளுக்கு சென்றாலும் தன் பயின்ற பள்ளிகளுக்கு மாணவர்களின் நலன் கருதி பள்ளியை மறவாமல் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என ஆசிரியர் வேண்கோள் விடுத்தார்.
ஆசிரியரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுலை தெரிவித்தனர்.
- சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
- நெல் ரகங்கள் 100 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றிய பகுதியில் 2 நாள் மழையால் 100 ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமருகல் வட்டாரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது குறுவை அறுவடை பணிகள் துவங்கியது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவில் பெய்த கனமழையால் கீழப்பூதனூர், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ண புரம், திருப்–புகலூர், வடகரை, கோட்டூர், விற்குடி, அம்பல், பொறக்குடி, மருங்கூர், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல் மழைநீர் சூழ்ந்தது.நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கோ.46,1009,பிபிடி நெல் ரகங்கள் 100 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.தற்போது மழை நீர் வடிய தொடங்கி வருகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்
ஏக்கருக்கு 25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் அறுவடை நேரத்தில் இப்படி ஆகி விட்டது என்றும் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை கணக்கிடாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி.
- அப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க குழாய் கொண்டு தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி வளப்பாற்றின் குறுக்கே நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பாலம் வழியாக திருப்பயத்தங்குடி, பில்லாளி, திருச்செங்காட்டங்குடி, தென்னமரக்குடி, கீழப்பூதனூர், நத்தம், வீரபெருமாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் சென்று வர முக்கிய வழியாக உள்ளது.
மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வரவும் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் காவிரி நீர் கடைமடை பகுதியான திருமருகல் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றைக் கடக்க குழாய் கொண்டு தற்காலிக அமைக்கப்பட்டு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.
அதில் அப்பகுதி மக்கள் சென்று வந்தனர்.
இந்த நிலையில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் ஆற்றை கடக்க முடியாமல் அப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி வந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கின்றனர்.
எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
- மயிலாடுதுறை மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு வன உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.
நாகப்பட்டினம்:
நாகூரில் வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நாகூர் தனியார் பள்ளியில் நடந்தது.
மாணவர்களுக்கு ஓவிய போட்டி, வண்ணம் தீட்டுதல், வினாடி வினா, ஆங்கில பேச்சு போட்டி தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில கட்டுரை போட்டி, தமிழ் கட்டுரை போட்டிகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்டன.
இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற முதல் இடம் பிடித்த மாணவர்கள் சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டி களில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா ஆலோசனையின் பேரில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மாணவ மாணவிகளுக்கு வன உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.
வனத்துறை வனச்சரகர் ஆதி லிங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
முன்னதாக நடைபெற்ற விழாவில் நாகை மாவட்டதேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தேசியபசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் உயிரின வார விழா அனுசரிப்பதின் அவசியத்தை எடுத்துக் கூறினர்.
விழாவில் பள்ளி முதல்வர் பெனெட் மேரி, காரைக்கால் சுந்தரபாண்டியன், மரம் சௌந்தரராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடுவர்களாக அசோக் மணிவண்ணன் பாஸ்கரன் செங்குட்டுவன், ஐசக் காட்சன், பிரியா ஆகியோர் செயல்பட்டனர்.
பள்ளி ஆசிரியர்கள் சிவா, ரகு, பாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். அ
க்டோபர் 2 முதல் அக்டோபர் எட்டு வரை நடைபெற இருக்கின்ற வன உயிரின வாரத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன என்று வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா தெரிவித்தார்.






