search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்
    X

    மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

    • சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
    • மயிலாடுதுறை மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு வன உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.

    நாகப்பட்டினம்:

    நாகூரில் வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நாகூர் தனியார் பள்ளியில் நடந்தது.

    மாணவர்களுக்கு ஓவிய போட்டி, வண்ணம் தீட்டுதல், வினாடி வினா, ஆங்கில பேச்சு போட்டி தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில கட்டுரை போட்டி, தமிழ் கட்டுரை போட்டிகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்டன.

    இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற முதல் இடம் பிடித்த மாணவர்கள் சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டி களில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா ஆலோசனையின் பேரில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மாணவ மாணவிகளுக்கு வன உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.

    வனத்துறை வனச்சரகர் ஆதி லிங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    முன்னதாக நடைபெற்ற விழாவில் நாகை மாவட்டதேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தேசியபசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் உயிரின வார விழா அனுசரிப்பதின் அவசியத்தை எடுத்துக் கூறினர்.

    விழாவில் பள்ளி முதல்வர் பெனெட் மேரி, காரைக்கால் சுந்தரபாண்டியன், மரம் சௌந்தரராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நடுவர்களாக அசோக் மணிவண்ணன் பாஸ்கரன் செங்குட்டுவன், ஐசக் காட்சன், பிரியா ஆகியோர் செயல்பட்டனர்.

    பள்ளி ஆசிரியர்கள் சிவா, ரகு, பாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். அ

    க்டோபர் 2 முதல் அக்டோபர் எட்டு வரை நடைபெற இருக்கின்ற வன உயிரின வாரத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன என்று வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா தெரிவித்தார்.

    Next Story
    ×