search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தான் பயின்று, பணிபுரிந்த அரசு பள்ளிக்கு வர்ணம் பூசிய ஆசிரியர்; மனநிறைவு அளிப்பதாக பெருமிதம்
    X

    வர்ணம் பூசிய ஆசிரியர் நாகராஜன் மற்றும் பிற ஆசிரியர்கள்.

    தான் பயின்று, பணிபுரிந்த அரசு பள்ளிக்கு வர்ணம் பூசிய ஆசிரியர்; மனநிறைவு அளிப்பதாக பெருமிதம்

    • விழுந்தமாவடி அரசு பள்ளி 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்களை கொண்டதாகும்.
    • மாணவர்களின் நலன் கருதி பள்ளியை மறவாமல் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி தம்பிரான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான நாகராஜன்.

    இவர் விழுந்தமாவடியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 35 ஆண்டுகளாக தொழில் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் இதே பள்ளியில் பயின்று தற்பொழுது ஓய்வு பெற உள்ள நிலையில் தான் பயின்ற மற்றும் பணிபுரிந்த பள்ளிக்கு ஏதாவது செய்ய நினைத்த ஆசிரியர் 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகம் உள்ள பள்ளி கட்டிடத்திற்கு சுமார் 1.25 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் நலன் கருதியும் வெள்ளை அடித்து வர்ணம் பூசி வருகிறார்.

    இன்னும் பத்து நாட்களில் பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் இந்தப் பணி தனக்கு மன நிறைவை அளிப்பதாகவும் மன மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதே போல் மாணவர்கள் தங்கள் பயின்று பல்வேறு துறைகளுக்கு சென்றாலும் தன் பயின்ற பள்ளிகளுக்கு மாணவர்களின் நலன் கருதி பள்ளியை மறவாமல் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என ஆசிரியர் வேண்கோள் விடுத்தார்.

    ஆசிரியரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுலை தெரிவித்தனர்.

    Next Story
    ×