என் மலர்
நாகப்பட்டினம்
- பூச்சொரிதலுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
- தங்க நகை, திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள் கொண்டு யாகம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் உள்ள தேவதுர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று மகாசண்டி யாகம் விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கோ பூஜை, சுகாசினி பூஜை, வடுக பூஜை, சப்த கன்னிகா பூஜை, பிரம்மச்சாரியார் பூஜை, யாத்ரா தானம், உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து 7அடி அகலம், 7அடி ஆழத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு யாகத்திற்கு உகந்த தங்க நகை, திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள், கொண்டு யாகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியா ர்கள் சுமந்து கோவிலை வலம் வந்து துர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- கோடியக்கரை- வேதாரண்யம் சாலையில் ஒரு கி.மீட்டர் தூரம் சாலை மேம்படுத்தம் பணி நடைபெற்றது.
- ரூ.4 கோடியே 50 லட்சத்தில் சாலை மேம்படுத்துதல், வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.2 கோடியே 30 லட்சத்தில் சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் சாலை யை பலப்படுத்தும்பணி நடைபெற்றது.
இத்திட்ட த்தின் கீழ் வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் ஆதனூரில் 2 கிலோ மீட்டரும், கோடியக்கரை- வேதாரண்யம் சாலையில் ஒரு கி.மீட்டர் தூரமும் சாலையை மேம்படுத்தம் பணி நடைபெற்றது.
இப்பணியை வேதாரண்யம் உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் மதன், சாலை ஆய்வாளர் கவிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் முதல் கோடியக்கரை வரை சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது.
வேதாரண்யம் உட்கோட்டத்தில் ரூ.4 கோடியே 50 லட்சத்தில் சாலை மேம்படுத்துதல், வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.
முதற்கட்டமாக ரூ. 2 கோடி 30 லட்சத்தில் 3 கி.மீட்டர் தூரத்தில் தார் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்றுள்ளன.
- தோப்புத்துறையில் 15 ஆடுகள் திருடு போனதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
- இருவரிடமிருந்து 9 ஆடுகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தோப்பு தலையில் 15 ஆடுகள் திருட்டு போனதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இதையடுத்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர் பசுபதி, சப் -இன்ஸ்பெக்டர் இங்கர்சால்மற்றும் போலீ சார் தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக வந்த சொகுசு காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 9 ஆடுகள் வாய் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.இது குறித்து நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தவர்கள் சென்னை திருவான்மியூரை சேர்ந்த காசிம் (வயது 33), மோத்திபாபு (43) என்பதும், வேதாரண்யம் பகுதியில் இருந்து ஆடுகளைதிருடி சென்னைக்கு விற்பனை க்காக கடத்தி செல்வதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிம், மோத்திபாபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 9 ஆடுகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் திருமருகல் அருகே கீழசன்னாநல்லூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- காரைக்கால் பகுதியிலிருந்து மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரவி மற்றும் போலீசார் திருமருகல் அருகே கீழசன்னா நல்லூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கீழசன்னா நல்லூர் அருகே திருட்டுத னமாக மதுபானம் விற்ற கீழசன்னாநல்லூர் ஜீவா நகரை சேர்ந்த நாடிமுத்து (வயது 43) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 110 லிட்டர் மதுபானத்தை பறிமுதல் செய்தனர்.
- சம்பவத்தன்று வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
- இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜேஷ் (வயது 32) சமையல் கூலி தொழிலாளி.
இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
அதனை கண்ட ராஜேஷ் மகன் ருத்ரன் தனது தாத்தா சேகர் இடம் கூறியுள்ளான்.
உடன் சேகர் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்த ராஜேஷை மீட்டு திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ராஜேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் ராஜேஷ்ன் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸில் பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
- ஷா நவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டினர்.
நாகப்பட்டினம், அக்.5-
நாகப்பட்டினம் நகராட்சியில் டாடா நகர் மற்றும் சேவா பாரதி பகுதிகளில், தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டுவதற்கு, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
விழாவில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டினர்.
இதில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில் குமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஞானமணி, கமலநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துலிங்கம், நகராட்சி பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- வயல்களில் மழை நீர் நிறைந்து விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி, இறையான்குடி, ஓட்டத்த ட்டை, நீடூர், தண்ணீலபாடி, உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக வயல்களில் மழை நீர் நிறைந்து விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக வயல்களை சீரமைத்தல், நாற்று விடுதல், உழவு பணி, நாற்றுப்பறித்தல். நடவு பணி மற்றும் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய பெண் தொழிலாளர்கள் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி உற்சாகமாக களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் சென்னை சென்றார்.
- திரும்பி வந்துபார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலத்தை சேர்ந்தவர் மாதவன்.
சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் சென்னை சென்றார்.
திரும்பி வந்துபார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.20 ஆயிரம் ரொக்கம், 2 தங்க மோதிரம், வெள்ளி பொருட்கள் மாயமாகியது.
மர்ம நபர்கள் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து அவர் வலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- விவசாய தொழிலாளர்கள் நிறைந்த தலைஞாயிறு பேரூராட்சியில் குறும்படம் எடுக்கப்பட்டு வெளியிடபட்டுள்ளது.
- குறும்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேதாரண்யம்:
தமிழ்நாடு அரசு திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை அறிமுகபடுத்தி எனது குப்பை எனது பொறுப்பு என பிரசாரம் செய்து வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு குறும் படம் வெளியிடப்பட்டது. இந்த குறும்படம் தமிழகத்தில் உள்ள 380 பேரூராட்சிகளில் முதன் முதலாக கிராமபுரத்தில் அமைந்துள்ள விவசாயிகள் விவசாயதொழிலாளர்கள் நிறைந்த தலைஞாயிறு பேரூராட்சியில் எடுக்கபட்டு வெளியிடபட்டுள்ளது. இந்த குறும்படத்திற்காக ஒரு டன் குப்பை முன்னூறு குப்பைதொட்டிகள் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்படு த்தப்பட்டு குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று செயல் அலுவலர் குகன் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வெளியிடப்பட்டுள்ள. இந்த குறும்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படு த்தப்பட்டு வருகிறது.
- திட்டச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.
- சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன.
நாகப்பட்டினம் :
நாகை மாவட்டம் கொத்த மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் நேரடியாக கடிதம் எழுதி, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய 10 கோரிக்கைகளை கேட்டுப் பெற்றுள்ளார்.
அந்த வகையில் நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த 10 கோரிக்கைகளில் முக்கியமாக, திருமருகல் ஒன்றியத்தை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.
விரைவில் அது நிறைவேற்றப்படும். மேலும், இந்த ஊருக்கு அருகில் உள்ள திட்டச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது.
இந்த ஊராட்சியிலும் சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. உங்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர் விவேகானந்தன், கிராம சபை மேற்பார்வையாளர் சுப்ரமணியன், திட்டச்சேரி அரசு மேல் நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் ஆசிரியர்கள், அனந்தநல்லூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் சக்திவேல், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- துர்க்கை அம்மனுக்கு பால், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்படும்.
- சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
இக்கோவிலில் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை மிகவும் விஷேசமானதாகும்.
அன்று துர்க்கை அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கல்லூரிக்கு தேவையான இடத்தை குடவாசல் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும்.
- அந்த பகுதியில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப கல்லூரி அமைக்கப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 8 வருடங்களாக அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.
இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அந்த கல்லூரிக்கு நிரந்தர இடத்தை தேர்வு செய்து கல்லூரி கட்டிட பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடந்து.
நன்னிலம் தொகுதியில் உள்ள குடவாசல் கல்லூரிக்கு வேறு ஒரு தொகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த இடத்திற்கு குடவாசலில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.
மேலும் கல்லூரிக்கு தேவையான இடத்தை குடவாசல் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று குடவாசல் பேருந்து நிலையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தரையில் அமர்ந்து தொடர்ந்து 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நன்னிலம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் மாணவ- மாணவிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது நிருபர்க ளிடம் காமராஜ் எம்.எல்.ஏ கூறியதாவது, குடவாசலிலே கல்லூரி அமைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்நிலையிலும் இந்த மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக இருப்பேன்.
சட்டமன்றத்தில் இதைப் பற்றி பேசிய பொழுது, அந்தப் பகுதியில் மக்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்லூரி அமைக்கப்படும் என உயர்க்கல்வி அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.
குடவாசலிலேயே கல்லூரி அமைய வேண்டும் என்று இப்பகுதி மக்களும், கல்லூரி மாணவர்களும் போராடிவரும் நிலையில் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்வின் போது அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், ராஜேந்திரன், நகர செயலாளர் சாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், துணைத் தலைவர் தென்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






