search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "discourse"

    • திருச்சி கல்யாணராமனின் வில்லிபாரத தொடர் சொற்பொழிவு மதுரையில் இன்று தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.

    மதுரை

    காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் 130-வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மதுரை ஆண்டாள்புரம் விஸ்வாஸ் கருத்தரங்க கூடத்தில் கலைமாமணி திருச்சி கல்யாண ராமனின் வில்லி பாரத தொடர் சொற்பொழிவு இன்று தொடங்குகிறது.

    வருகிற 9-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை இந்த சொற்பொழிவு நடக்கிறது இன்று (வியாழன்) அர்ஜுனன் தீர்த்த யாத்திரை என்ற தலைப்பிலும், நாளை (2-ந்தேதி) திரவுபதி மானம் காத்தல், 3-ந்தேதி நளச் சரித்திரம், 4-ந்தேதி அர்ஜுனன் தவம், 5-ந்தேதி நச்சு பொய்கை, 6-ந்தேதி கிருஷ்ணன் தூது, 7-ந்தேதி குந்தியும் கர்ணனும், 8-ந்தேதி கீதையில் கண்ணன் என்ற தலைப்பி லும், 9-ந்தேதி நிறைவு நாள் அன்று கர்ணன் மோட்சம் தர்மர் பட்டாபிஷேகம் என்ற தலைப்பிலும் திருச்சி கல்யாணராமன் உரையாற்று கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.

    • சோழவந்தானில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.
    • முன்னாள் சேர்மன் முருகேசன் தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழாவின் 7-ம் நாள் அர்ஜுன் தபசு விழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா நடந்தது. விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராமகிருஷ்ணன் மகாபாரத சொற்பொழிவாற்றினார். பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் சார்பில் கீதா ஆன்மீக சொற்பொழிவாற்றினார். ஆன்மீக கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு முன்னாள் சேர்மன் முருகேசன் தலைமை தாங்கினார். பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவகர்லால், குப்புசாமி முன்னிலை வகித்தனர். ஆதிபெருமாள் வரவேற்றார். முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணு பிரசாத், முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
    • உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உலகின் பலவேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது.

    நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.

    எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் -நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தோற்றமும் தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், வளர்ச்சியும், கணினித் தமிழ் வளரச்சியும் தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட ஊடகங்களின் சவால்களும், கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    ஆகவே நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும், மேலும், இந்நிகழ்ச்சியில் உங்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது.

    இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன்பெறு வதோடு மட்டுமல்லாமல் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் கவிஞர் யுகபாரதி, கரு .பழனியப்பன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரி முதல்வர் யுஜின் அமலா, முனைவர் ஹேமலதா, முத்துக்குமார், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் கற்கால கருவிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நடந்தது
    • தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் சுமார் 130 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

    திருச்சி:

    திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் மற்றும் புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் கற்கால கருவிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவ–னத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். புத் தூர் கிளை நூலக நூலகர் நாகராஜன் வரவேற்றார்.வரலாற்றுத்துறை மாண–வர் அரிஸ்டோ, கற்கால கருவிகள் குறித்து பேசு–கையில், தமிழகத்தில் கற் காலம் என்பது சுமார் கி.மு. 1,000 வரை நீடித்த காலமாகும். தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் சுமார் 130 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.இதுவரை செய்யப்பட்ட அகழ்வாய்வுகள், மேற்பரப் பாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றின் காலங்கள் நிர்ணயிக்கப்பட் டுள்ளன.தமிழகத்தில் கல்லாயுதங் கள் செய்யும் தொழிற்பட்ட–றைகளும், வாழ்விடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கற்காலத்தில் கைக்கோட–ரிகள், உளிகள், கத்தி–கள் மற்றும் சிறிய கற்கருவி–களை அதிகம் பயன்படுத்தி–யுள்ளனர். கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ள கல் லால் ஆன கருவிகளோடு மரத்தாலான ஈட்டிகளையும் தண்டுகளையும் அக்கால மக்கள் கையாண்டதும் தெரிய வருகிறது.மேலும் பண்டைய மக் களின் கல்திட்டைகள், கல் வட்டங்கள் முதலியனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள் ளன. இத்தகைய கண்டு–பிடிப்புகளால், தமிழ்நாட் டில் பழைய கற்கால மக்கள் பரவி வாழ்ந்தனர் என்பது தெளிவாகிறது. பழைய கற்கால மக்கள் உணவைத்தேடி அலையும் நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்டுள் ள–னர். கற்கால கருவிகள் மூலம் கால நிலை மாறுபாட் டினையும் மனித வளர்ச்சி நிலையினையும் உணரலாம்.பழைய கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம் குறித்து பல்வேறு நூல்கள் மூலம் அனைவரும் படித்து அறியலாம் என்றார். நாண–யங்கள், பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள் ரமேஷ், லட்சுமி நாராயணன், சந் திரசேகரன், முகமது சுபேர் உட்பட பலர் கலந்து கொண் டனர். இதல் செயலர் குண–சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடி–வில் பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.

    • ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் சிறப்புச்சொற்பொழிவு நடந்தது.
    • இதில் சினிமா டைரக்டர் கஸ்தூரி ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

    சிவகாசி

    சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர்ஓர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் திரைப்பட விமர்சன அமைப்பு ஆங்கிலத்துறை (சுயநிதிப்பிரிவு) மற்றும் முதுகலை தமிழாய்வுத்துறை இணைத்து ''புழதிக்காட்டு வேலிகள்'' என்ற தலைப்பில் சிறப்புச்சொற்பொழிவை நடத்தியது.

    முதல்வர் பழனீசுவரி தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறைத்தலைவரும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான சோபனாதேவி வரவேற்றார். திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். தமிழின் மேல் கொண்ட அதீத அன்பினால் நான் ''பாமர இலக்கியம்'' என்ற புத்தகத்தை படைத்ததாகப் குறிப்பிட்டார்.

    பெண் உயிரூட்டி, உணர்வூட்டி அரவணைத்துச் செல்லும் பெருங்கொடையானவள். பெண்கள் ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்திராகாந்தி, நிர்மலா சீத்தாராமன் போன்றவர்களை போல் திறமையாக செயல்பட்டு பெண் இனத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    மாணவிகளின் வினாக்களுக்கு விளக்கம் அளித்தார். தமிழ்த்துறை தலைவரும், மற்றொரு ஒருங்கிணைப்பாளருமான பொன்னி நன்றி கூறினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை சினிமா விமர்சன குழு உறுப்பினர்களும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களும், தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இலக்கிய மன்ற சொற்பொழிவு நடந்தது.
    • உதவிப்பேராசிரியர் சாந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத் துறையின் நியூ ஐடோலா, இலக்கியமன்றத்தின் சார்பில் தொடர் சொற்பொழிவு "இலக்கிய விமர்சனம் மற்றும் கோட்பாடு" என்ற தலைப்பில் நடந்தது.

    சிறப்பு விருந்தினராக மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் துறைத்தலைவர் ஜான் சேகர் கலந்து கொண்டார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். உதவிப்பேராசிரியர் சாந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினர் பேசுகையில், இலக்கிய விமர்சனம் மற்றும் கோட்பாடுகள் என்பது இன்றைய காலகட்டத்தில் முக்கியமான அறிவுசார் இயக்கமாக இருக்கிறது.

    ஆங்கில இலக்கிய விமர்சனம் கிரேக்க, ரோமானிய தத்துவவா திகளான பிளட்டோ, அரிஸ்டாட்டில்,ஹோரேஸ் மற்றும் லஜ்ஜானியஸ் போன்ற வர்களின் கருத்துகளால் கட்டமைக்க ப்பட்டது. ஆங்கில இலக்கிய விமர்சனம் சிட்னி, ட்ரைடன், ஜான்சன், வோட்ஸ்வொர்த் மற்றும் கீட்ஸ் போன்ற எழுத்தாளர்களின் பங்களிப்பால் வளர்ந்தது.

    ஆங்கில இலக்கிய விமர்சன தந்தையாக கொண்டாடப்படும் மேத்யூ அர்னால்டு "தொடுகல் முறை" என்ற புதிய விமர்சன முறையை அறிமுகம் செய்தார். 20-ம் நூற்றாண்டின் புதிய விமர்சன கொள்கைகள் மேற்கு உலகில் பிரபலமானது. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பலவித விமர்சன கோட்பாடுகளான மனிதம் சார்ந்த இலக்கிய கோட்பாடுகள், கட்டமைப்பு வாதம் மற்றும் பின் கட்டமைப்புவாதம் போன்ற கோட்பாடுகள் இலக்கிய உலகில் ஆளுமை செய்வதாக கூறினார்.

    ஆங்கிலத் துறைத்த லைவர் பெமினா வரவேற்றார். உதவிப்பேராசிரியர் ஸ்வப்னா நன்றி கூறினார்.

    • சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
    • இதில் அகவல் பாராயணம் ஓதப்பட்டது.

    சேலம்:

    சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஜோதிகண்ணன் மற்றும் குழுவினரால் அகவல் பாராயணம் ஓதப்பட்டது. சன்மார்க்க கொடியை கோல்டன் பி.தங்கவேல் ஏற்றி வைத்தார்.

    சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சேலம் சிட்டிபாபு தலைமை தாங்கினார். கலை, மதியழகன் ஆகியோர் வரவேற்றனர். தாரை குமரவேலு, ஹரிகிருஷ்ணன் ராமலிங்கம், ஓம்சக்தி கணபதி, குணசேகரன், சீனிவாசன், சவுந்திரராஜன், மகா பாண்டியன், மாரிமுத்து ஆகியோர் வள்ளலார் கொள்கைகள் குறித்து பேசினர். சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மாவட்ட சன்மார்க்க தலைவர் அங்கப்பன், ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    சேலம் ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபம் தலைவர் ஸ்ரீராமன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். லோகநாதன் நன்றி கூறினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். 

    • சிறப்பு சொற்பொழிவு மற்றும் புத்தகங்கள் வெளியிடும் விழா நடைபெற்றது.
    • ஆங்கிலத்தில் எழுதிய மற்றும் தொகுப்பாக்கம் செய்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஆங்கிலத் துறை சார்பாக தொடர்புத் திறன் மற்றும் புத்தகங்கள் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆங்கிலத் துறையின் சார்பாக "தொடர்புத் திறன்" என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் புத்தகங்கள் வெளியிடும் விழாவானது நடைபெற்றது.

    முனைவர் அசாருதீன் வரவேற்றார்.

    கல்லூரியின் முதல்வர் நடராஜன் தலைமையுரை வழங்கினார். முனைவர் முகம்மது இஸ்மாயில், முனைவர் கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கல்வி குழுமத்தின் தலைவர் ஸ்ரீமதி. ஜோதிமணி அம்மா, செயலர் செந்தில் குமார், இணைச் செயலாளர் சங்கர் கணேஷ், மற்றும் ஆலோசகர் செவாலியர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பேராசிரியர் முனைவர் அசாருதீன் ஆங்கிலத்தில் எழுதிய மற்றும் தொகுப்பாக்கம் செய்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

    பின்னர் அந்த புத்தகங்களை மதிப்பாய்வு செய்து இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினரான கோபிநாத், ஆங்கிலத்துறையின் தலைவர் முத்துகுமார், மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் குணாளன் உரையாற்றினர்கள்.

    அதனை தொடர்ந்து ஆங்கில மொழி கற்றலின் சிறப்புகளையும், அதன் முக்கியத்துவம் குறித்தும் சிறப்பு விருந்தினர் கோபிநாத் சிறப்புரையாற்றி, மாணவர்க ளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து மாணவ ர்களுடன் உரையாடினார்.

    நிகழ்வின் இறுதியில் முனைவர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
    • முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    துறைத் தலைவர்குமரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் செந்தில்குமார் கலந்து கொண்டு ''ஸ்பின்ட்ரோனிக்ஸ் பயன்பாடுகளுக்கான காந்த நானோ துகள்களின் தொகுப்பு'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசுகையில், நானோ தொழில்நுட்பம். நானோ காந்தப் பொருட்களின் பண்புகள் மற்றும் தற்காலத்தில் ஸ்பின்ட்ரோனிக்ஸ், பயன்பாடுகள் பற்றி விளக்கினார். மேலும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சி படிப்புக்கான வாய்ப்புகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்வில் இயற்பியல் துறையைச் சேர்ந்த 20 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இயற்பியல் துறை 3-ம் ஆண்டு மாணவி ரிஸ்வானா வரவேற்றார். 2-ம் ஆண்டு மாணவி கார்த்திகா நன்றி கூறினார்.

    உத்தரப்பிரதேசத்தில் நடக்கவுள்ள பக்தி சொற்பொழிவில் கலந்து கொள்ள விலை மாதர்களுக்கு அழைப்பு விடுத்த ஆன்மிகவாதிக்கு அயோத்தி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். #MorariBapu #Ayodhya
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி வருபவர் மொராரி பாபு. இவர் அயோத்தி நகரில் நடைபெறவுள்ள தனது பக்தி சொற்பொழிவை கேட்க வருமாறு மும்பை காமாத்திபுரா பகுதியில் வசிக்கும் விலை மாதர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  

    மொராரி பாபுவின் இந்த அழைப்புக்கு அயோத்தி மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

    இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், புனிதமான அயோத்தி நகரில் விலை மாதர்களை அழைப்பதன் மூலம் மொராரி பாபு குழப்பம் விளைவிக்க முயல்கிறாரா? வேண்டுமானால், நக்சலைட்கள் மற்றும் விலை மாதர்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று அவர் சொற்பொழிவு ஆற்றலாமே என கண்டனம் தெரிவித்தனர்.

    உள்ளூர் இந்து அமைப்பின் தலைவரான பிரவீன் சர்மா, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு மொராரி பாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். #MorariBapu #Ayodhya
    ×