search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரனிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

    அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்

    • கஜா புயலுக்கு பிறகு பல்வேறு இடங்களில் சரியானபடி தெரு விளக்குகள் எரிவதில்லை.
    • பொதுமக்கள் கட்டும் சிறு வீடுகளுக்கு அருகில் உள்ள மணலை எடுத்து பயன்படுத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து அனைத்து துறைஅதிகாரிகளின் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞான சுந்தரி சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கராசு, ஊராட்சி செயலாளர் கண்ணன், வேளாண்மை உதவி இயக்குனர் வேதாரத்தனம் ,வட்டார கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

    கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளில் நிலவி வரும் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் நேரில் எடுத்துரைத்தும் மனுக்களும் அளித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தர பாண்டியன், ஊராட்சியில் கஜா புயலுக்கு பிறகு பல்வேறு இடங்களில் சரியானபடி தெரு விளக்குகள் எரிவதில்லை .இதற்கு பலமுறை மின்சார அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு புகார் அளித்தும்இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனை உடன் சரி செய்யப்பட வேண்டும்.

    இல்லையென்றால் 15 நாட்களில் மின்சார துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். மேலும் நாலுவேதபதி பகுதியில் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு நிதி உதவி பெற்று கட்டப்படும் வீடுகள் மற்றும் பொதுமக்கள் கட்டும் சிறு வீடுகளுக்கு அருகில் உள்ள மணல் எடுத்து பயன்படுத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இந்த கோரிக்கையை ஊராட்சியில் உள்ள பல்வேறு தரப்பு மக்களும் எடுத்துரைத்தனர் .இதற்குதாசில்தார் ரவிச்சந்திரன் அரசு கட்டிங்களுக்கும் அரசு உதவி பெற்று கட்டப்படும் வீடுகளுக்கும் மற்றும் தனிநபர் விடுகட்டுவதற்கும் அருகில் உள்ள மணலை எடுத்து பயன்படுத்தமுறையான அனுமதிக்கு விண்ணப்பித்தால் பரிசீலித்து அரசு விதிகளுக்கு உட்பட்டுஅனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×