என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரால் திட்டு கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.
    • அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி. பாரதி சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரால் திட்டு கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையை பாதிக்க ப்பட்ட கிராமங்களுக்கு அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி. பாரதி சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு போர்வை, பிஸ்கட் மற்றும் வயதானவர்களுக்கு வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வழங்கினார்.

    அப்போது கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சிவக்குமார், நகர செயலாளர் வினோத், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், நிர்வாகிகள் சிவ.மனோகரன், நாகரத்தினம், சொக்கலிங்கம், மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் பள்ளி வளாகத்தில் இரும்பிலான செட் அமைத்து அதில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
    • இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பலர் தினக் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையை அடுத்த தலைஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட மன்னிப்பள்ளம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வந்தனர்.

    இந்தப் பள்ளி கட்டப்பட்டு 50 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இதனை சரிவர பராமரிக்காததால் அதன் மேற்கூரை பள்ளியில் மாணவ- மாணவிகள் வகுப்பில் இருக்கும்போதே இடிந்து விழுந்து வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சமடைந்து தங்களது பெற்றோரிடம் சென்று கூறியதால் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.

    இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் பள்ளி வளாகத்தில் இரும்பிலான செட் அமைத்து அதில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து வருவதால் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சேர்த்து விட்டனர்.

    இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பலர் தினக் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்து பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை. அவர்களால் நீண்ட தூரம் சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர். இந்த பள்ளி கட்டிடத்தை புதியதாக கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், கிராம மக்கள் சாலை மறியலிலும் செய்துள்ளனர்.

    ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பள்ளியை ஆய்வு செய்து புதிய கட்டிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் கிராமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பள்ளியில் நூலகம் அமைத்து தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • ஓரத்தில் போடப்பட்டுள்ள பாராங்கற்கள் நன்கு போடப்ப ட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.
    • காட்டூரில் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியையும் தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான நீர் சென்று கொண்டிருப்பதால் அளகுடியில் தண்ணீர் சென்று கரையில் மோதி திரும்பும் இடத்தில் கடந்த 2018ம் ஆண்டு உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்ட பகுதியை மீண்டும் உடைப்பு ஏற்படாமல் இருக்க தற்போது தற்காலிகமாக சரி செய்யும் பணி நடைபெற்று கரை தற்காலிகமாக பலப்படுத்தப்பட்டது.

    இப்பகுதியை பொதுப்ப ணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து காட்டூரில் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியையும் தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

    ஓரத்தில் போடப்பட்டுள்ள பாராங்கற்கள் நன்கு போடப்ப ட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொ றியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜய குமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் ஊழி யர்கள் உடன் இருந்தனர்.

    • மக்களுக்கு மாற்று இடம் வழங்கவும், அந்தந்த பகுதியிலேயே நிரந்தர புயல் பாதுகாப்பு மையம் அமைக்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
    • தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து முழு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டுக் கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல் உள்ளிட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சி.வி. கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்து 700-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு தி.மு.க சார்பில் தலா ரூ.1000 நிதியுதவி வழங்கினர்.

    அப்போது, அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: வெள்ளத்தால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, ஆற்றின் உள்ளே உள்ள மக்களுக்கு மாற்றுஇடம் வழங்கவும், அந்தந்த பகுதியிலேயே நிரந்தர புயல் பாதுகாப்பு மையம் அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து முழு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

    தொடர்ந்து முகாம்களின் பொதுமக்களுக்கு வழங்கு வதற்காக செய்யப்பட்ட உணவுகளை தரமாக சமைக்கப்பட்டுள்ளதா என அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது, மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, எஸ்.பி. நிஷா, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அரசு மருத்துவமனையுடன் இணைந்து தாய்ப்பால் வார விழா நடத்தப்பட்டது.
    • தலைமை மருத்துவர் பானுமதி ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.

    சீர்காழி:

    சீர்காழி ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம், அரசு மருத்துவமனை இனைந்து தாய்ப்பால் வார விழா நடத்தப்பட்டது. சங்க தலைவர் சங்கர் தலைமை வகித்தார். டாக்டர் மருதவாணன் முன்னிலை வகித்தார். மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார், தலைமை மருத்துவர் பானுமதி ஆகியோர் பங்கேற்று கொழு கொழு குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர். விழாவில் டாக்டர் அருண் ராஜ்குமார், டாக்டர் அறிவழகன், டாக்டர் பூபேஷ் தர்மேந்திரா தாய்ப்பால் மகத்துவம் பற்றி பேசினர். ரோட்டரி மாவட்ட மருத்துவ திட்ட தலைவர் பழனியப்பன், முன்னாள் தலைவர்கள் சோலை, கண்ணன், சுசீந்திரன், சாமிசெழியன், கந்தசாமி, கோவிந்தராஜ், கனகராஜ் மற்றும் செவிலியர்கள், தாய்மார்கள் கலந்துகொண்டனர். முடிவில் செயலர் வசந்த்குமார் நன்றி கூறினார்.

    • முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகள் தருமபுர ஆதீன மடாதிபதி முன்பு பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காண்பித்து ஆசி பெற்றனர்.
    • பரதநாட்டியம், கர்நாடக இசைகச்சேரி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பள்ளியில் நடைபெற்ற விழாவில் திருச்சி மண்டல அளவிலான யோகாசன போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகள் தருமபுர ஆதீன மடாதிபதி முன்பு பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காண்பித்து ஆசி பெற்றனர்.

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்ப ந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற தொடக்க விழா பள்ளி நிர்வாக செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு அருளாசி வழங்கினார்.

    தொடர்ந்து பரதநா ட்டியம், கர்நாடக இசை கச்சேரி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். திருச்சி மண்டல அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற திருஞானசம்பந்தர் பள்ளி மாணவமாணவிகள் சக்கராசனம்,அர்த்தபா தாசனம், மயூராசனம் உள்ளிட்ட யோகாச னங்களை செய்துகாட்டினர். அவர்களுக்கு தருமபுர ஆதீனம் பரிசு கோப்பை வழங்கி ஆசி கூறினார்.

    • சாலை பணியாளர்கள் பணிபுரிந்த நாட்களுக்கும் விடுப்பு துய்த்த நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.
    • பேச்சுவார்த்தைக்கு வரமுடியாது என்று மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நெடுஞ்சா லை துறை கோட்ட பொறி யாளர் அலுவலகத்தில் சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜாக்டோ- ஜியோ போராட்ட காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டும் சம்பளம் வழங்க மறுக்கும் சீர்காழி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தை கண்டித்தும், சங்க நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நோக்கில் பணி மாறுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டதை கண்டித்தும், சாலை பணியாளர்கள் பணிபுரிந்த நாட்களுக்கும் விடுப்பு துய்த்த நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.

    சீர்காழி மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ர மணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றி பணி மாறுதல் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் அதே இடத்தில் பணி வழங்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று கூறி வாசலில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களைபேச்சு வார்த்தைக்கு அழைத்த போதும் கோரிக்கைகளை நிறைவே–ற்றாமல் பேச்சுவா ர்த்தைக்கு வரமுடியாது என்று மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட தலைவர் சிவபழனி, செயலாளர் இளவரசன், மாநில பொருளாளர் தமிழ் உள்ளிட்ட சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • வேளாண் கல்லூரி, மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும், நடமாடும் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
    • விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் மணல் குவாரிகளை மூட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செம்பனார்கோவில் மேல முக்கூட்டில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுக்கூட்டமும், கீழமுக்–கூட்டிலுள்ள வரத ராஜன் நினைவரங்கில் மயிலாடுதுறை மாவட்ட 30-வது மாநாடு தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது.

    2-வது நாள் மாநாட்டில் தலைமைக்குழு தேர்வுக்கு பிறகு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நாகையா கொடியினை ஏற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் மேகநாதன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் டி.சிம்சன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியிமாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நாகை மாலி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

    அரசியல், ஸ்தாபன, வேலையறிக்கையை மாவட்ட செயலாளர் துரைராஜ், வரவு-செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் வைரவன் ஆகியோர் வாசித்தனர். விவாதங்கள், தொகுப்புரை, புதிய கமிட்டி தேர்வு, மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வுக்கு பிறகு மாநாட்டு தீர்மானங்களை மாவட்ட துணை செயலாளர் ராயர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இளங்கோ வன், ராமலிங்கம் ஆகியோர் முன்மொழிந்தனர்.

    வைக்கோலை பயன்படுத்தி காகிதம் தயாரிக்கும் தொழிற்சா லையை மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்க வேண்டும். வேளாண் கல்லூரி, மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும், நடமாடும் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகும் மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களை எடுப்பது, ஓ.என்.ஜி.சி. கெயில் குழாய்கள் பதிப்பது போன்ற திட்டங்களை கைவிட வேண்டும், விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் மணல் குவாரிகளை மூட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவீந்திரன் மாநாட்டை வாழ்த்தி பேசினர். பொருளாளராக செல்லப்பா, துணைத்தலை வர்களாக வைரவன், குணசுந்தரி, துணை செயலா ளர்களாக இளங்கோவன், மேகநாதன் உள்ளிட்டோர் அடங்கிய 23 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் தேர்வு செய்ய ப்பட்ட புதிய நிர்வாகிகளை அறிவித்து மாநில செயலாளர் சாமி நடராஜன் நிறைவுரை யாற்றினார். இறுதியாக வரவேற்புக்குழு செயலாளர் கே.பி.மார்க்ஸ் நன்றி கூறினார்.

    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு உணவுகள் வருவாய்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
    • அளக்குடி பகுதியில் தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்களை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கப்படும் பணிகளை பார்வையிட்டார்.

    சீர்காழி:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்று பழையாறு கடலில் கலந்து வருகிறது.

    இந்த வெள்ளத்தால் திட்டு கிராமங்களான வெள்ளை மணல், நாதல்படுகை, முதலைமேடு திட்டு ஆகிய கிராமங்களை முழுமையாக தண்ணீர் சூழ்ந்து கிராமத்தின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பலர் தங்கள் கால்நடைகள் மற்றும் உடமைகளுடன் கரைப்பகுதியில் தங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு உணவுகள் வருவாய்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    இதனிடைய கொள்ளிடம் ஆறு அளக்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வீட்டு வசதி நகர் வளர்ச்சி அரசு முதன்மை செயலர் கித்தேஸ்குமார் மக்வானா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காட்டூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்று நீர் கரையை அரித்து உள்ளே புகும் அபாய நிலை உள்ளதை நேரில் பார்வையிட்ட கித்தேஷ்குமார் அப்பகு தியில் கருங்கல் கொட்டி கரையை பலப்படுத்திட கூறினார். தொடர்ந்து அளக்குடி பகுதியில் தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்களை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கப்படும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் முகாமில் தங்கி உள்ள மக்களை சந்தித்து உணவுகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்கப்படுகிறதாஎன அரசு முதன்மை செயலாளர் கேட்டறிந்தார். ஆய்வின் போது மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் உடன் இருந்தனர்.

    • கால்நடைகளுடன் வெளியேறிய நிலையில் பெரும்பாலானோர் வீடுகளிலே தங்கி இருப்பதால் அவர்களை வருவாய் துறையினர் மீட்டு வருகின்றனர்.
    • கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் தங்கள் பகுதியிலேயே நிரந்தரமாக புயல் பாதுகாப்பு மையம் அமைத்து தர வேண்டும்.

    சீர்காழி:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வரும் உபரி நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    இந்தஉபரி நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நீரின் அளவும் வேகமும் குறையவில்லை. கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    திட்டு கிராமங்களில் தங்கள் கால்நடைகளுடன் வெளியேறிய நிலையில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளிலே தங்கி இருப்பதால் அவர்களை படகின் மூலம் மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மீட்டு வருகின்றனர். மேலும் படகுகள் செல்ல முடியாத இடத்தில் உள்ள மக்கள் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி தங்கள் உடமைகள் மற்றும் குழந்தைகள் சுமந்து கொண்டு கிராமத்தை விட்டு கரையேறி வருகின்றனர்

    பாதிக்கப்பட்ட மக்களு க்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை விட்டு நிவாரண முகங்களுக்குச் செல்ல மறுத்து மக்கள் கரையிலேயே பந்தலமைத்து காத்துள்ளனர் இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உணவு குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படும் பொழுது தங்கள் கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் தங்கள் பகுதியிலேயே நிரந்தரமாக புயல் பாதுகாப்பு மையம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரட்டை காளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • பச்சைக்காளி, பவளக்காளி வேடம் அணிந்து வீதியுலாவும், தொடர்ந்து கோவிலில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் இரட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 3-வது வெள்ளி அன்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு சீர்காழி சட்டைநாதர் கோவிலில் இருந்து பால்குடம், அலகு காவடி, பறவை காவடி உடன் கரகம் புறப்பட்டு தேர் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக கோவிலை வந்து அடைந்தது. பின்னர் இரட்டை காளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு பச்சைக்காளி, பவளக்காளி வேடம் அணிந்து வீதியுலாவும், தொடர்ந்து கோவிலில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

    • அணைக்கு வரும் நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • வெள்ள நீர் வீடுகளில் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு கிராம மக்கள் கால்நடைகளுடன் ஆற்றின் கரையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    சீர்காழி:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கரையோர கிராமமான நாதல்படுகை, முதலை மேடுத்திட்டு பகுதியில் வெள்ள நீர் வீடுகளில் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு கிராம மக்கள் கால்நடைகளுடன் ஆற்றின் கரையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களை அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர நடவடிக்கை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் ஆறுதல் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நற்குணன், மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், சீர்காழி ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே. சந்திரசேகரன், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மகளிர் அணி மாவட்ட செயலாளருமான ம.சக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    ×