என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
    • 51 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், 96 பேருக்கு பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் லலிதா வழங்கினார்.

    மயிலாடுதுறை:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், சாய் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 51 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், 96 பேருக்கு பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் லலிதா வழங்கினார். இதில் எஸ்.பி. நிஷா மற்றும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் உள்ளனர்.

    • பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் போன்ற 10 விதமான நெல் ரகங்கள் 30 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • புலி, சிங்கம் இருந்தால் தான் மலைவளம் பாதுகாக்கப்பட்டு நல்ல மழையை பெறமுடியும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் 8 ஆம் ஆண்டு நெல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    விழாவிற்கு நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். சீர்காழி கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, பள்ளி தலைமைஆசிரியர் அறிவுடைநம்பி, வழக்குரைஞர் சுந்தரய்யா, சாயிராம் கல்விநிறுவன தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையை சேர்ந்த கரு.முத்து வரவேற்றார். இயற்கை வேளாண் வல்லுனர்கள் சித்த மருத்துவர் தஞ்சை சித்தர் மரபுவகை உணவு வகைகள் குறித்தும், தமிழர் வேளாண்மை குறித்து ஞாணபிரகாசம், தற்சார்பு பற்றி பாலகிருட்டிணன் இயற்கை உணவு குறித்து சிவகாசி மாறன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    தொடர்ந்து மரபு நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்காக சம்பா பட்டத்திற்கு தேவையான பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் போன்ற 10 விதமான நெல் ரகங்கள் 30 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் கதிரேசன் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினார்.

    விழாவில் இயற்கை விவசாயி சிவாஜி பேசுகையில், நம்முடைய பாரம்பரிய நெல் வகைகளை இழந்துவிட்டு தற்போது அயல்நாட்டு ஆங்கிலேய ராசாயன நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கிறோம்.மருத்துவம் வளர்கிறது என்றால் நாடுவளர்கிறது என அர்த்தமில்லை.நோய்கள் வளர்கிறது என்றே அர்த்தம்.நல்ல நீரை பூமியில் நாம் சேமிக்கவேண்டும்.

    தற்போது தண்ணீரை காசுகொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.புலி, சிங்கம் இருந்தால்தான் மலைவளம் பாதுகாக்கப்பட்டு நல்ல மழையை பெறமுடியும். அதனால்தான் புலிகளை காக்க அரசு தற்போது பெரும் முயற்சி செய்கிறது.

    மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும்.நாம் அனுபவிக்கும் நல்லநீர், நல்ல மண்வளத்தை நமது அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுத்துசெல்லவேண்டும். நம் கண்டுபிடிப்புகள் மனித இனத்தை அழிக்ககூடியதாகவே உள்ளது. மண், நீர்வளத்தை காக்கவேண்டியதன் அவசியத்தை இன்றைய தலைமுறைக்கு பாடதிட்டத்தில் சேர்த்து சொல்லித்தரவேண்டும். குழந்தைகளை சூரியஒளி படும்படி மண்ணோடு விளையாட விட வேண்டும் இயற்கையான எதிர்ப்பு சக்தி உருவாகினால்தான் நோய்கள் ஏற்படாது என்றார்.

    விழாவில் இந்தியாவில் உள்ள ஐந்நூறுக்கு மேற்பட்ட மரபு நெல் ரகங்கள் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. நஞ்சில்லா உணவு, பலா பழ அல்வா, பலா பழ ஐஸ் கிரீம், துணி பை, சித்தமருத்துவம், அரிய வகை மூலிகை, பாரம்பரிய தானிய தின்பண்டங்கள், ஆகியவையும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

    இயற்கை விவசாயத்திற்கு தேவையான அனைத்து ஆலோசனை வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு வழங்கினர். நாட்டு காய்கறி விதைகள் விற்பனையும் நடைபெற்றது.விழாவில் பங்கேற்ற வர்களுக்கு பாரம்பரிய அரிசியில் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டது.

    • துண்டு, துண்டாக வெட்டப்பட்ட புளிய மரம் மீண்டும் துளிர் விட்டு மரமானதால் அங்கு முத்து மாரியம்மன் தோன்றியதாக ஐதீகம்.
    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு துண்டு, துண்டாக வெட்டப்பட்ட புளிய மரம் மீண்டும் துளிர் விட்டு மரமானதால் அங்கு முத்து மாரியம்மன் தோன்றியதாக ஐதிகம். முத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த வருடம் கடந்த 3ம்தேதி கொடி ஏற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது.10 ம் நாளான வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திகடனை நிவர்த்தி செய்தனர். அப்பொழுது அங்கு எழுந்தருளிய முத்து மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த தீமிதி திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி டி.எஸ்.பி (பொ) பழனிச்சாமி தலைமையில் கொள்ளிடம், புதுப்பட்டினம், சீர்காழி உள்ளிட்ட காவல் நிலையங்களைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் அறங்காவலர் நடராஜன் செய்திருந்தார்.

    • விவசாயத்தை பாழாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணல்குவாரிகளை மூடக்கோரி மருதம்பள்ளத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
    • மண்வளத்தை நாசமாக்கும், நல்ல தண்ணீரில் உப்பு நீர் புகுவதையும் தடுத்திட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மேலம்பெரும்பள்ளம், தலச்சங்காடு, மருதம்பள்ளம், காளியப்பன் நல்லூர், அம்மன் ஆற்றுப்படுகை உள்ளிட்ட கிராமத்தை சுற்றி விவசாயத்தை பாழாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணல்குவாரிகளை மூடக்கோரி மருதம்பள்ளத்தில் காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட தலைவர் சிம்சன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், சி.பி.எம். ஒன்றிய செயலாளர்கள் மார்க்ஸ், ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சரவணன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் சுதாமன், ஒன்றிய துணை தலைவர் ராமலிங்கம், விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

    மண்வளத்தை நாசமாக்கும், நல்ல தண்ணீரில் உப்பு நீர் புகுவதையும் தடுத்திட வேண்டியும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அரசு அறிவித்தும் விவசாயநிலங்களில் மணல் குவாரி அமைப்பதை தடுக்ககோரியும், மணல் குவாரிகளை மூடகோரியும் முழக்கமிட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கோயில் நிகழ்ச்சிக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
    • உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்து–வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருவிழந்தூர் சாந்துகாப்பு தெருவை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தெட்ஷிணாமூர்த்தி என்பவருக்குமிடையே கோயில் நிகழ்ச்சிக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது அசோக்குமாருக்கு ஆதரவாக குருமூர்த்தி மற்றும் இவரது உறவுக்காரரான 18 வயது சிறுவன் ஆகியோர் தகராறை விலக்கி விட முற்பட்டபோது இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த பிரச்சனை தொடர்பாக மயிலாடுதுறை போலீசில் தெட்ஷிணாமூர்த்தி தரப்பினர் புகார் தெரிவித்ததை அடுத்து குருமூர்த்தி, சிறுவன் மற்றும் அசோக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின்னர் மூவரையும் எச்சரிக்கை செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சிறுவனை போலீசார் தாக்கியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை அடுத்து மனம் உடைந்த சிறுவன் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்து–வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். சம்பவம் குறித்து மயிலாடுதுறை டி.எஸ்.பி வசந்தராஜ் நேரில் விசாரணை மேற்கொ–ண்டார். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி–யுள்ளது.

    • சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின்மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.
    • தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து தகுதிவாய்ந்த திட்டமதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்ப தற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பலதிட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காஅமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    தகுதிவாய்ந்த திட்டமதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின்மானியமாக வழங்கப்படுகிறது. தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து தகுதிவாய்ந்த திட்டமதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்ப தற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின்மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.மேலும் அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது முதல்அமைச்சரின் கனவுத் திட்டம் ஆகும்.

    எனவே சிறிய அளவிலானஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை மயிலாடுதுறை மாவட்டத்தில் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம், 30/3 நவலடியான் காம்ப்ளக்ஸ் முதல் தளம்தாந்தோணிமலை கரூர் 639005. கைபேசி எண்: 9444656445ரூபவ் 9092590486.

    • திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி லட்சதீபத்தை துவக்கி வைத்தார்.
    • சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி வெளி பிரகாரம் சுற்றுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் லட்ச தீபங்களை ஏற்றினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் பாடல் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத கடை வெள்ளியை முன்னிட்டு அபயாம்பிகை நற்பணி மன்றம் சார்பில் லட்சதீப திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் 35ம் ஆண்டு லட்சதீப திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி லட்சதீபத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து மகா தீபாரதனை கான்பிக்கப்பட்டது. சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி வெளி பிரகாரம் சுற்றுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் லட்ச தீபங்களை ஏற்றினர்.

    ரிஷபக் குஞ்சரம் 75வது சுதந்திர கொடியை விநாயகர் ஏற்றுவது போன்று வரைந்த ஓவியங்கள் மற்றும் பலவிதமான மந்திர எழுத்துக்கள் தீப ஒளியில் பிரகாசித்தது பக்தர்களை கவர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று விளக்குகளை ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், கேசியர் வெங்கடேசன், ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
    • முதலமைச்சர் கொண்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு மாணவர்களாகிய நீங்கள் தான் விழிப்புணர்வை எல்லோருடைய மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    மயிலாடுதுறை :

    மயிலாடுதுறை மாவட்டத்தில் செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட கலெக்டர் லலிதா, முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது. போதைப்பொருள் என்பது வாழ்க்கையை சீரளிக்கும், உடலை அழிக்கக்கூடியது, எதிர்காலத்தை வீணடிக்கும், இந்த போதைப்பழக்கத்தில் உள்ளவர்களை நாம் அனைவரும் ஒன்றிைணந்து திருத்த வேண்டும். குறிப்பாக நீங்கள் முன்னோடியாக இருந்து போதைப் பழக்கத்தில் உள்ளவர்களை அதிலிருந்து விடுபட சொல்லித்தர வேண்டும்.

    அப்படி யாராவது இருந்தால் நல்வழியில் கொண்டு வர முன்வர வேண்டும். உங்களுடைய எதிர்காலத்தை சிறப்பாக கொண்டுவர நீங்கள் பாடுபட வேண்டும். முதலமைச்சர் கொண்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு மாணவர்களாகிய நீங்கள் தான் விழிப்புணர்வை எல்லோருடைய மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதி மொழியை ஒரு நாள், ஒரு வாரம் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

    உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரேணுகா, தலைமை ஆசிரியை லீமா ரோஸ் மற்றும் 1300-க்கும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் 8ம் ஆண்டு நெல் திருவிழா வரும் 14ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற இருக்கிறது.
    • நமது மரபு நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்காக சம்பா பட்டத்திற்கு தேவையான பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் மோன்ற 10 விதமான நெல் ரகங்கள் ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் 8ம் ஆண்டு நெல் திருவிழா வரும் 14 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற இருக்கிறது.

    இது குறித்து நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் இரா.சுதாகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    நமது மரபு நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்காக சம்பா பட்டத்திற்கு தேவையான பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் மோன்ற 10 விதமான நெல் ரகங்கள் ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    தொடர்ந்து நடத்தப்படும் இவ்விழா இந்தாண்டு சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஊழியன்காரன் தோப்பு சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை பள்ளியில் நடக்க இருக்கிறது.

    விவசாயிகளுக்கு மரபு நெல் ரக விதைகள் வழங்கி விழாவை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைக்கிறார்

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் கதிரேசன் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கியும் சிறப்பிக்க உள்ளனர்.

    மேலும் இயற்கை வேளாண்வ ல்லுனர்கள் சித்த மருத்துவர் தஞ்சை சித்தர் தமிழர் வேளாண்மை குறித்தும், ஞானபிரகாசம் தற்சார்பு பற்றியும், பாலகிருட்டிணன் இயற்கை உணவு குறித்தும் பேச உள்ளனர்.

    சிவகாசி மாறன் பங்குபெறும் கருத்தரங்கம், இந்தியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட மரபு நெல் ரகங்கள் கண்காட்சி, நஞ்சில்லா உணவு, பலா பழ ஆல்வா, பலா பழ ஐஸ் கிரீம், துணி பை, சித்தமருத்துவம், ஆகியவையும் காட்சிப் படுத்தப்படுகிறது.

    இயற்கை விவசாயத்திற்கு தேவையான அனைத்து ஆலோசனை வழிமுறைகளையும் வழங்க உள்ளனர். நாட்டு காய்கறி விதைகள் விற்பனையும் நடைபெறும். விழாவில் பங்கேற்பவர்களுக்கு மதியம் பாரம்பரிய அரிசியில் செய்யப்பட்ட உணவுகள் வழங்கvப்படும் என கூறப்பட்டுள்ளது.

    • வேளாண்மை துறை அட்மா திட்டம் மூலம் அறுவடைக்கு பின்சார் உத்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றது.
    • வீட்டுத் தோட்டம், மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பு போன்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுய தொழில் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே செம்மங்குடியில் வேளாண்மை துறை அட்மா திட்டம் மூலம் அறுவடைக்கு பின்சார் உத்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் கா.ராஜராஜன் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோ. பார்கவி வரவேற்றார்.

    வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் சங்கரநாராயணன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் மகேஸ்வரன் மதிப்பு கூட்டுதல் பற்றியும் அறுவடைக்கு பின் சார் தொழில்நுட்பங்கள் பற்றியும் தெளிவாக பயிற்சி அளித்தனர். தொடர்ந்து வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ராஜாராம், விதைச்சான்று அலுவலர் கனகம், உதவி தோட்டக்கலை அலுவலர் சிவாஜி துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர்.

    வீட்டுத் தோட்டம், மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பு போன்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுய தொழில் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜசேகரன், சவுந்தரராஜன் மேற்கொண்டனர். இறுதியில் உதவி வேளாண்மை அலுவலர்.ராமன் நன்றி கூறினார்.

    • அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடைப் பந்தாட்டப் போட்டிகள் நிறைவு விழா நடந்தது.
    • இந்திய கடற்படை அணி அணி வெற்றி பெற்று கோப்பையையும், முதல்பரிசு தொகையான ரூ.1 லட்சத்தினையும் வென்றது.

    சீர்காழி:

    சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 50வது பொன்விழா ஆண்டையொட்டி அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடை பந்தாட்டப் போட்டிகள் நிறைவு விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் அனிதாராதாகிருஷ்ணன், குட்சமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் இயக்கு னர்கள் பிரவீன்வசந்த், அனுஷா பிரவீன், அலெக்சாண்டர், ரினீஷாஜேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி முதல்வர் ஜாஸ்மின் வரவேற்றார். அகில இந்திய அளவில் 8 அணிகள் பங்கேற்று கடந்த 4 நாட்களாக நடைபெற்ற போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

    இதில் இந்திய கடற்படை அணி அணி வெற்றி பெற்று கோப்பையையும் முதல்பரிசு தொகையான ரூ.1 லட்சத்தினையும் வென்றது.

    இரண்டாமிடத்தை இந்திய ராணுவ அணி (சிவப்பு) பெற்று பரிசு தொகை ரூ.75 ஆயிரத்தை வென்றது.

    மூன்றாமிடத்தை இந்திய ராணுவம் (பச்சை) அணி பெற்று பரிசு தொகை ரூ.50 ஆயிரத்தையும், 4ம் இடத்தை ஜேப்பியார் அணி வென்று பரிசுதொகை ரூ.25 ஆயிரத்தை வென்றது.

    வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை, பரிசு தொகையை தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழக தலைவர் ஆதவாஅர்ஜூன் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் கல்வி நிறுவனங்களின் முதல்வ ர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    நிறைவில் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகரசிங் நன்றி கூறினார்.

    • சுதந்திரம் பெற்று 75வது பவளவிழா ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் முன்பு 5 நாள் பாத யாத்திரையை தொடங்கினர்.
    • விடுதலைக்காக போராடிய தியாகத் தலைவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களது உருவப்படத்துடன் தொடங்கிய பாதயாத்திரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.

    தரங்கம்பாடி:

    இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 75வது பவளவிழா ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, தில்லையாடி கிராமத்தில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் முன்பு மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ. வுமான ராஜகுமார் தலைமையில் 5 நாள் பாத யாத்திரையை தொடங்கினர்.

    நினைவு மணிமண்டபத்தில் தில்லையாடி வள்ளியம்மைக்கு மாலை அணிவித்து

    எம்.எல்.ஏ. ராஜ்குமார் பாதயாத்திரையை தொடங்கினார்.

    விடுதலைக்காக போராடிய தியாகத் தலைவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களது உருவப்படத்துடன் தொடங்கிய பாதயாத்திரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த பாதயாத்திரை குத்தாலத்தில் முடிவடைகிறது.நாளை 11ம் தேதி குத்தாலத்தில் இருந்து புறப்பட்டு மணல்மேடு சென்றடைகிறது. 12ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு

    13ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு கொள்ளிடத்தை அடைகிறது.

    14ம் தேதி கொள்ளிடத்தில் இருந்து மாதானம் வழியாக பாதையாத்திரை சீர்காழி வந்தடைகிறது.

    சீர்காழியில் ராஜகுமார் எம்.எல்.ஏ தலைவர்கள் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் புதுப்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவரான நேதாஜிசுபாஷ் சந்திரபோஸின் மண்டபத்தை திறந்து வைத்து பவளவிழா நினைவு கொடியினை ஏற்றி வைத்து பாத யாத்திரையை நிறைவு செய்கிறார்.

    இந்த பாதயாத்திரையில் மாவட்ட பொதுச்செயலாளர் கனிவண்ணண், பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன் உள்ளீட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரைக்கு ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சிமன்ற தலைவர்கள் தில்லையாடி ரெங்கராஜ், திருக்கடையூர் ஜெயமாலதி சிவராஜ், ஆக்கூர் சந்திரமோகன், இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில், ஆங்காங்கே வரவேற்பு கொடுத்து மரியாதை செய்தனர்.

    ×