என் மலர்
மயிலாடுதுறை
- மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்பியபோது கட்டுமரம் கவிழ்ந்து சண்முகம் கடலில் மூழ்கி மாயமானார்.
- போலீசார், மீனவர்கள் உதவியுடன் 3 படகுகளில் கடலுக்கு சென்று சண்முகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தொடுவாய் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 58). மீனவரான இவர், கட்டுமரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
அங்கு அவர் மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்பியபோது கட்டுமரம் கவிழ்ந்து சண்முகம் கடலில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடல் கரை ஒதுங்கியது அதன் பேரில் போலீசார், மீனவர்கள் உதவியுடன் 3 படகுகளில் கடலுக்கு சென்று சண்முகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை கொட்டாய்மேடு கடற்கரையில் சண்முகம் உடல் கரை ஒதுங்கியது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த திருமுல்லைவாசல் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சண்முகப்பிரியா கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு சென்றனர்.
- படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சீர்காழி:
மணல்மேடு ஆத்தூர் கேசிங்கன் ஜி.என். நகரை சேர்ந்தவர் ராஜராஜன். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 36).இவர் வக்கிர மாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சண்முகப்பிரியா கொள்ளிடத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
வைத்தீஸ்வரன் கோவில் அருகே அட்டகுளம் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சண்முகப்பிரியா கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு சென்றனர்.
அப்போது ஸ்கூட்டரில் இருந்து தடுமாறி சண்முகப்பிரியா கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பாழடைந்த நிலையில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.
- கோவில்பத்து, கிடாரங்கொண்டான் ஊராட்சிகளில் நடைபெறும் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கலெக்டர் லலிதா சத்துணவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
நூலகம் மற்றும் பஞ்சாயத்து கணக்குகள் 100 நாள் திட்டத்தில் வேலை நடைபெறும் கணக்கு பதிவுகளை ஆய்வு செய்தார்.
பின்னர் பாழடைந்த நிலையில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினர்.
பின்னர் மரக்கன்றுகளை நட்டார்,தலையுடையார் கோவில்பத்து, கிடாரங்கொண்டான் ஊராட்சிகளில் நடைபெறும் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தார்.
அப்போது செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ், துணைத்தலைவர் ராஜகோபால், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நாகேந்திரன், உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
- பல்வேறு கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குறுவை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் கடனுக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், புத்தூர், மாதானம், நல்லூர், ஆரப்பள்ளம், வடகால், நல்ல விநாயகபுரம், கடைக்கண் விநாயகர் நல்லூர், பச்சை மாதானம், திருப்பன்கூர், வைத்தீஸ்வரன் கோவில், ஆதமங்கலம், பெருமங்கலம், மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மோட்டார் பாசன மூலம் குறுவை சாகுபடி செய்தனர்.
தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.
இதேபோல் பல்வேறு கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குறுவை அறுவடை செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுவரை குறுவை நெல்லை கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தமிழக அரசு திறக்காததால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விவசாயிகள் அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த நாட்களாக அடுக்கி வைத்து காத்துள்ளனர்.
மேலும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியாமல் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் கடனுக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இ-நாம் திட்டத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறால் 60 விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் வரவு வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் ஏற்காததால் வியாபாரிகள் திரும்பி சென்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவிலில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இ-நாம் என்று அழைக்கப்படும் மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை மூலம் விவசாயிகள் கொண்டு வரும் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இங்கு கடந்த மாதம் 20ம் தேதி 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.2 கோடியே 96 லட்சத்து 66 ஆயிரம் மதிப்புள்ள 3225 குவின்டால் பருத்தியை விற்பனை செய்தனர்.
இதற்கான தொகையை கடந்த 7ம் தேதிக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பெரும்பாலான விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்ட நிலையில் இ-நாம் திட்டத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறால் 60 விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் வரவு வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பருத்தி ஏலம் நடைபெற இருந்தது. இதனை அறிந்த 60 விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்த பருத்திக்கான தொகை ரூ.62 லட்சத்தை கொடுத்த பிறகு ஏலத்தை நடத்தி பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என கூறி தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் ஏற்காததால் வியாபாரிகள் திரும்பி சென்றனர்.
இதனால் பருத்தி ஏலம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் 500 விவசாயிகள் சுமார் 1000 குவிண்டால் பருத்தியை விற்பனை செய்ய முடியாமல் கிடங்கில் பருத்தி மூட்டைகளை வைத்து தவித்து வருகின்றனர்.
- வாகனங்கள் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
- மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் விடுவிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய, பழைய பேருந்து நிலையங்கள், ரயில்வே ரோடு, பிடாரி வடக்குவீதி, காமராஜர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆடு, மாடு உள்ளிட்டவை சுற்றித் திரிவதாகவும், இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும், தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனை அடுத்து சாலைகளில் கால்நடைகளை விடக்கூடாது மீறினால் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும் என சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல்கட்டமாக சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரிராஜசேகர் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் ராஜகோபால், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் அலெக்சாண்டர், டேவிட் உள்ளிட்ட பணியாளர்கள் சாலைகளில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் அடைத்தனர்.
பின்னர் மாடுகளின் உரிமையாளர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து மாடுகளை சாலைகளில் நடமாட விட்டால் அபராதம் விதிப்பதுடன், மாடுகளை பிடித்து உரிமையாளர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.
- முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொத்த தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது31). கூலி தொழிலாளியான இவர் முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளராக இருந்தவர்.
கண்ணனுக்கும், கலைஞர் காலனியை சேர்ந்த கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு இலை எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் சிறையில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுதலை ஆகி வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று நள்ளிரவு கண்ணன் பீடா வாங்குவதற்காக புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளார்.
அப்போது அவரிடம் பேச்சுக் கொடுத்து வந்த சிலர் கலைஞர் காலனி பகுதி வந்தவுடன், அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்து சரமாரியாக கண்ணனை வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த ராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவான பதிவுகளை கைப்பற்றினர். இதில் 12 பேர் கும்பல் கண்ணனை கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் 12 பேர் அடங்கிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.500 மதிப்புள்ள புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய ஸ்கூல்பேக் வழங்கினார்.
- தனியார் பள்ளியில் படித்தாலும் அரசு பள்ளியில் படித்தாலும் முயற்சி செய்து படித்தால் தான் முதலிடத்தில் வரலாம்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள திட்டுகிராமம் ஆகும். இந்த கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து தற்போது வடிந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் இங்கு இயங்கி வந்த அரசு உயர்நிலை பள்ளிக்கு கடந்த 10 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று முதல் பள்ளி திறக்க உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மயிலாடுதுறை எஸ்பி நிஷா முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலை பள்ளிக்கு வந்து பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.500 மதிப்புள்ள புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய ஸ்கூல்பேக் வழங்கினார்.
தொடர்ந்து மாணவருக்கு எஸ் பி நிஷா வினாடி, வினா நடத்தி அதில் முதல் 2 இடத்தில் வெற்றி பெற்ற மாணவருக்கு செஸ்போர்டு பரிசாக வழங்கினார். அவர் மாணவர்களிடம் பேசுகையில் 50 வருடங்களுக்கு முன்பு பெண் அதிகாரிகள் கலெக்டராக எஸ் பி யாக இருக்க முடியுமா என்று நம்மால் யோசித்துக் கூட பார்த்திருக்க முடியாது. இன்று எல்லா இடங்களிலும் பெண் அதிகாரிகள் வந்துள்ளார்கள். நம் மாவட்டத்தில் பெண் கலெக்டர், பெண்எஸ்பி, ஆர்.டி.ஓ.வும் பெண் பெண்ணாக இருக்கிறார்.
மாணவர்கள் எல்லோரும் சொந்தமாக முயற்சி செய்ய வேண்டும். யாரையும் சார்ந்து இருக்க கூடாது நான் வெற்றி பெறுவேன் என்ற முடிவெடுக்க வேண்டும். தனியார் பள்ளியில் படித்தாலும் அரசு பள்ளியில் படித்தாலும் முயற்சி செய்து படித்தால் முதல் இடத்தில் வரலாம்.
அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள திறமையை வளர்த்துக் கொள்ள மாணவர்கள் அனைவரும் தினந்தோறும் செய்தித்தாள் படிக்க வேண்டும் என்றார். சீர்காழி டி.எஸ்.பி பழனிச்சாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூவராகவன், விவசாய சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்ட கணேஷ் லோகநாதன் மற்றும் போலீசார் பெற்றோர் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உலக சாதனைக்கான அங்கீகார சான்றிதழ் பள்ளியின் நிறுவனர் சிவசங்கரிடம் ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்கார்டு நிறுவனத்தினர் வழங்கினர்.
- சாதனையில் பங்கு பெற்ற மாணவ- மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் இயங்கி வரும் முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சி கொண்டாட்டங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, 75வது சுதந்திர தினத்தில், 75 மாணவ, மாணவிகள் 75 தேசியக் கொடிகளை 75 நொடிகளில் வரையும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
இந்த உலக சாதனையை பதிவு செய்யும் ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவன நாகை மாவட்ட பொறுப்பாளர் ஹரி உமா மற்றும் ஹரிஹரன் இருவரும் கண்காணித்து புதிய உலக சாதனையாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து, உலக சாதனைக்கான அங்கீகார சான்றிதழ் பள்ளியின் நிறுவனர் சி.பி.சிவசங்கரிடம் ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்கார்டு நிறுவனத்தினர் வழங்கினர். சாதனையில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பள்ளி முதல்வர் ஜேக்கப்ஞா னசெல்வன், துணை முதல்வர் எஸ்தர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.
- டப்கள், சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
- அரசு பள்ளியில் முதல் முறையாக அபாகஸ் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கீழதென்பாதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்ப ள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு தேவையான சேர்கள், பிளாஸ்டிக் குடம், டப்கள், சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சீர் வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயந்தியிடம் வழங்கினர்.
தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அரசு பள்ளியில் முதல் முறையாக அபாகஸ் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கியதோடு 50 மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் வகுப்பு கட்டணத்தையும் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ரம்யாதனராஜ் வழங்கினார். அப்போது தி.மு.க நிர்வாகி ஒப்பந்ததாரர் தனராஜ் உடன் இருந்தார்.
- ஓதுவாமூர்த்திகள் கோளறு பதிகமும், மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினர்.
- பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் 14-ம் நூற்றாண்டில் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்ட திருவா வடுதுறை ஆதீனம் உள்ளது. ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் கோளறு பதிகம் பாடி, முதல்பிரதமரான நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோலே அடையா ளப்படுத்தியது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு ஓதுவாமூர்த்திகள் கோளறு பதிகமும், மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினர். திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சுதந்திர தின வாழத்துகளை கூறினார்.
திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதற்கான செங்கோலை மவுண்ட் பேட்டன் பிரவுவிடமிருந்து பெற்று நேருவிடம் அளித்தபோது செங்கோல் வைத்துக்கொண்டு நேரு வுடன் கட்டளைத் தம்பிரான் சடைச்சாமி என்கிற குமாரசாமி தம்பிரான் எடுத்துக்கொண்ட புகைப்பட கல்வெட்டை திருவாவடுதுறை ஆதீனம் திறந்து வைத்தார். பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஆதீனம் சார்பில் 1500 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடியை ஆதீனம் முன்னிலையில் பொதுமக்கள், மாணவ மாணவிகள் கைகளில் உயர்த்தி பிடித்து "வந்தே மாதரம்" என வீரமுழக்கமிட்டு ஊர்வலமாக சென்றது காண்போருக்கு சுதந்திரத்தின் பெருமையை அடையாளப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்ச்சியில் ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- முதல்- அமைச்சர் உத்தரவின் பேரில் புதிய கட்டிடம் கட்ட ரூ. 1.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- 4200 சதுரடியில் 2 தளங்களுடன் பல்வேறு வசதியுடன் புதிய மாதிரி நூலக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உலக நூலகத் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்து, வளர்ந்தார். இவர் பிறந்த சீர்காழியில் உள்ள கிளை நூலக கட்டிடம் பல ஆண்டுகளாக குறுகிய இடத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் அவதி அடைந்ததோடு, மழைக்காலங்களில் நூல்கள் நனைந்து சேதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக வாசகர்கள் கோரிக்கை வைத்தனர்.அதனைஏற்று எம்.பன்னீர்செல்வம்எம்.எல்.ஏ சட்டசபையில் இதனை வலியுறுத்தி புதிய நூலகம் கட்டிடம் கட்டித் தர முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். முதல் அமைச்சர் உத்தரவின் பேரில் புதிய கட்டிடம் கட்ட ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து 4200 சதுரஅடியில் 2 தளங்களுடன் பல்வேறு வசதியுடன் புதிய மாதிரி நூலக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
நகர்மன்றதலைவர் துர்காபரமேஸ்வரி தலைமை வகித்தார். பொது–ப்பணித்துறை (கட்டிடம்) உதவி செயற்பொறியாளர் நாகவேல், உதவிபொறியாளர் ஜான்டிரோஸ்ட், நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர் ராமு, வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பன்னீர்செல்வம் எம்எல்ஏ பங்கேற்று புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதில் தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், முத்துக்குமரன், பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேலு, ரோட்டரி சாசன தலைவர் பாலவேலாயுதம், பொறியாளர் சிவகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






