search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cultivators"

    • பல்வேறு கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குறுவை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் கடனுக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், புத்தூர், மாதானம், நல்லூர், ஆரப்பள்ளம், வடகால், நல்ல விநாயகபுரம், கடைக்கண் விநாயகர் நல்லூர், பச்சை மாதானம், திருப்பன்கூர், வைத்தீஸ்வரன் கோவில், ஆதமங்கலம், பெருமங்கலம், மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மோட்டார் பாசன மூலம் குறுவை சாகுபடி செய்தனர்.

    தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.

    இதேபோல் பல்வேறு கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குறுவை அறுவடை செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இதுவரை குறுவை நெல்லை கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தமிழக அரசு திறக்காததால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விவசாயிகள் அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த நாட்களாக அடுக்கி வைத்து காத்துள்ளனர்.

    மேலும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியாமல் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் கடனுக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,

    இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×