என் மலர்
மயிலாடுதுறை
- பரிவார தெய்வங்களான பேச்சி அம்மன், சப்த கன்னிகள் மற்றும் இரட்டை விநாயகர் சன்னதி கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
- மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தொப்படி மாரியம்மன் எனும் சாரடி மாரியம்மன் கோவில் உள்ளது.
பழமையான இக்கோவிலில் நூறு ஆண்டுக்கு முன்ன தாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கோவில் ஸ்தல வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதிலமடைந்த இக்கோ வில் திருப்பணிகள் செய்திட முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நிறைவு பெற்றது.
தொடர்ந்து திங்கட்கிழமை விக்னே ஸ்வர பூஜையுடன் முதல் கால யாக சாலை பூஜை கள் தொடங்கியது.
விழா அன்று நான்கு காலயாக சாலை பூஜை நிறைவடைந்து பூர்ணா ஹூதி மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞாளனசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோவில் விமான கலசத்தில்புனித நீர் ஊற்றப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து பரிவார தெய்வங்களான பேச்சி அம்மன், சப்த கன்னிகள் மற்றும் இரட்டை விநாயகர் சன்னதி கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம்செய்து தீபாராதனை காட்ட ப்பட்டது.
இதில் திருஞானச ம்பந்த தம்பிரான் சுவா மிகள், சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர் தம்பிரான் சாமிகள், திருநாவுக்கரசு தம்பிரான் சாமிகள் மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் கனிவண்ணன் நகர்மன்ற உறுப்பினர் நித்யா தேவி பாலமுருகன், டெம்பிள் டவுன் ரோட்டரி சேர்ந்த வீரபாண்டியன், ரோட்டரி சங்கம் சுசீந்திரன், மகாலிங்கம், திமுகவை சேர்ந்த அண்ணா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- இயற்கையான உரங்களை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றியும் எடுத்து கூறினார்.
- பொது இ-சேவை மையத்திற்கு ஆதார் எண்ணுடன் நேரடியாக சென்று புதுபித்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே, ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு அங்கக சான்று குறித்த ஒரு நாள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது கூறுகையில் இப்பயிற்சி பயன் படுத்தி அங்கக சான்று பற்றியும் விதைகளை எவ்வாறு தேர்வு செய்வது, இயற்க்கையான உரங்களை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றியும் எடுத்து கூறினார்.
மேலும் இப்பகுதியிலுள்ள பிரதம மந்திரியின் கௌரவ நிதி ஆண்டுக்கு ரூ.6000 பெறும் விவசாயிகள் தங்களுடைய பதிவை அருகிலுள்ள பொது இ-சேவை மையத்திற்கு ஆதார் எண்ணுடன் நேரடியாக சென்று புதுபித்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.
துணை வேளாண்மை அலுவலர் பிரபாகரன், அனைவரையும் வரவேற்றார்.
இப்பயிற்சியில் முன்னோடி விவசாயி த.அருணஜெடேசன் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் ரகங்களை எவ்வாறு சாகுபடி செய்யலாம் என்பது பற்றியும் அதன் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
இப்பயிற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலை வகித்தார்.
அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் அட்மா திட்டங்கள் பற்றியும், உழவன் செயலி பற்றியும் இப்பயிற்சியில் விளக்கி கூறினார்.
இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் மற்றும் மதுமினா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நிகழ்ச்சி முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
- வீடுகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைக்கும் முறைகள் குறித்து கொத்தனார்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
- உறிஞ்சிக்குழி அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கையேடுகளையும் கொத்தனார்களுக்கு வழங்கினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் ஊராட்சிகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக அரசு நித்தடிநீர் மட்டத்தை உயர்த்துவதற்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
அதேபோல் வீடுகளில் சமையல் அறை, குளியல் அறைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவுநீரை சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், கழிவுநீரை சுத்திகரித்து உறிஞ்சிக்குழிகள் மூலம் கழிவுநீர் மேலாண்மை செய்யும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றனர்.
இத்திட்டத்திற்கு மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமை தாங்கினார்.
ஒன்றிய ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட இணை இயக்குனர் முருகண்ணன், செயற்பொறியாளர் பிரேம்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு கழிவுநீரை மேலாண்மை செய்வதற்கு உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வீடுகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைக்கும் முறைகள் குறித்து கொத்தனார்களுக்கு நேரடி செயல்விளக்கம் அளித்தனர்.
மேலும் உறிஞ்சிக்குழி அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கையேடுகளையும் கொத்தனார்களுக்கு வழங்கினர்.
இதில் பல்வேறு ஊராட்சிகளில் இருந்து கொத்தனார்கள் கலந்துகொண்டு மயிலாடுதுறையில் ஊராட்சிகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர்கள் சிவக்குமார், அர்ஜுனன், மேலாளர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- பரிவார தெய்வங்களுக்கு 30 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு புனித தீர்த்தங்கள் கடங்களில் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.
- கோபுர கலசங்களுக்கு சிறப்பு மந்திர பூஜைகள் செய்யப்பட்டு புனித கடங்களில் உள்ள நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அருகே தலைஞாயிறு என்ற ஊரில் குற்றம் பொறுத்த நாதர், கோல்வளை நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவார பதிகம் பாடல் பெற்றதும் ராஜராஜ சோழன் மூன்றாம் குலோத்துங்க சோழன் உள்ளிட்ட மன்னர் காலத்து 12கல்வெட்டுகள் அமையப்பெற்றதும், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் சூரியன் வழிபட்டு இழந்த வலிமையை பெற்றார்.
சூரியனின் வேறு பெயரான ஞாயிறு என்ற பெயரிலேயே தலைஞாயிறு என்று இந்த ஊருக்கு பெயர் வரகாரணம் என்று புராண வரலாறு கூறுகிறது.
சூரிய தீர்த்தம் உள்ளிட்ட 8 தீர்த்தங்கள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன.
சூரியன், அங்கிரஸ் கௌதமர், வாமதேவர், உள்ளிட்ட 72 முனிவர்கள், ராவணன் அனுமன் விசித்திராங்கன் உள்ளிட்டோர் ஆலயத்தை வழிபட்டு உள்ளதாக தல புராணம் தெரிவிக்கிறது.
இக் கோவிலின் கும்பாபிஷேகம் 1953ம் ஆண்டு கடைசியாக நடைபெற்றது.
அதன் பின்னர் தற்போது ஆன்மீக அன்பர்கள் உதவியுடன் கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்தன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆறு கால யாகசாலை பூஜைகள் கடந்த 20ம் தேதி தொடங்கியது.
சுவாமி அம்பாள் விநாயகர் முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 30 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு அங்கு புனித தீர்த்தங்கள் கடங்களில் வைக்கப்பட்டுயாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.
6ம் கால யாகசாலை பூஜைகள் மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் நிறைவடைந்தது.
தொடர்ந்து புனித கடம் புறப்பாடு மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.
தருமபுர ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் புனித கடம் ஊர்வலம் கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சிறப்பு மந்திர பூஜைகள் செய்யப்பட்டு புனித கடங்களில் உள்ள நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் வேளாக்குறிச்சி ஆதீன மடாதிபதி, ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், மலேசிய தொழிலதிபர்டத் தோ.கலைச்செல்வன், தருமையாதீன பொது மேலாளர் கோதண்டராமன், ஆதீன வேத சிவாகம பாடசாலை நிர்வாக இயக்குனர் குரு சம்பத், கல்லூரி செயலாளர் செல்வநாயகம், தலைஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் சேரன் செங்குட்டுவன், ஒன்றிய கவுன்சிலர் வட.வீரபாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- மக்கும் குப்பை, மக்காத குப்பை இவைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும்.
- நமது கிராமத்தை நாம் நினைத்தால் மட்டுமே அழகாக வைத்துக் கொள்ள முடியும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சார்பாக நம்ம ஊர் சூப்பர் என்ற திட்டம் ஒவ்வொரு கிராமங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜ் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி முன்னிலை வகித்தனர்.
பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பேரணியை தொடங்கி வைத்தார்.
அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை இவைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும் எனவும், நமது கிராமத்தை நாம் நினைத்தால் மட்டுமே அழகாக வைத்துக் கொள்ள முடியும் எனவும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் எனவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், துணைத் தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் தியாக.விஜயேஸ்வரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துகுபேரன் மகளிர் சுய உதவிக் குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிறைவில் ஊராட்சி செயலர் தியாகராஜன் நன்றிக் கூறினார்.
- விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவ- மாணவியர்கள் கல்லூரி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.
- கலந்தாய்வி–ன் போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பல அசல் மற்றும் மூன்று நகல்களுடன் கொண்டு வர வேண்டும்.
குத்தாலம்:
குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான 3ம் கட்ட கலந்தாய்வு பி.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல், பிகாம்., வணிகவியல், பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய அனைத்து பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை 25-ந்தேதி நடைபெற இருப்பதால் மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு சேர விரும்பும் பிளஸ்2 தேர்ச்சி பெற்று இதுவரை இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் கல்லூரி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.
கலந்தாய்வி–ன் போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 உள்ளி–ட்டவற்றை அசல் மற்றும் மூன்று நகல்களுடன் கொண்டு வர வேண்டும்.
சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அன்றே கல்லூரியில் கட்டணம் ரூ.3350 செலுத்தி கல்லூரியில் சேர்க்கை பெற்றுக் கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் முனைவர் வெ.விஜயேந்திரன் தெரிவித்துள்ளார்.
- புதிதாக ரூ. 68 லட்சம் மதிப்பில் பழமையும், புதுமையும் கலந்த கருங்கல் வேலைப்பாட்டுடன் கூடிய சொக்கநாதர் பூஜை மடம்.
- சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனால் திறந்து வைக்கப்பட்டது.
சீர்காழி:
தருமபுரம் ஆதீனத்தின் அருள் ஆட்சிக்கு உட்பட்ட 28 தேவஸ்தானங்களிலும், ஸ்ரீ சொக்கநாதர் பூஜை மடத்துடன் கூடிய கட்டளை மடங்கள் பழையன புதுப்பித்தும், புதியன கட்டப்பட்டும் திறப்பு விழா செய்யப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஞானசம்பந்தப் பெருமான் ஞானப்பால் அருந்திய சட்டநாதர் கோவில் கிழக்கு சன்னதியில் புதிதாக ரூ 68 லட்சம் மதிப்பில் பழமையும், புதுமையும் கலந்த கருங்கல் வேலைப்பாட்டுடன் கூடிய சொக்கநாதர் பூஜை மடம், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையம் காலை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க திறந்து உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனால் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு தருமபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சொக்கநாதர் பெருமான் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருஞான சம்பந்தத ம்பிரான், சொக்கலி ங்கம்தம்பிரான், மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி, ஆன்மிகபேரவை ஒருங்கி ணைப்பாளர் வழக்குரைஞர் ராம.சேயோன் மற்றும் தருமபுரம் மடத்தினை சேர்ந்த கோதண்டராமன், செந்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை தருமபு ரம் ஆதீன கோவில்களில் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் சீர்காழி சட்டநாதர் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.
- விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
- புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
சீர்காழி:
சீர்காழி மணிக்கூண்டு அருகே தருமபுரம் ஆதீனம் சட்டைநாதர் சாமி தேவஸ்தானத்துடன் இணைந்த சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து
சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது.
விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி மகா தீபாராதணை நடைபெற்றது.
பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், தம்பிராயன் சுவாமிகள், சிவசுப்பிரமணியன் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மன்ற உறுப்பினர்கள் முபாரக், ராஜேஸ், ஜெயந்தி பாபு, டாக்டர்.முத்துகுமார், சுபம் வித்யா மந்திர் பள்ளி செயலர் கியான் சந்த், தாளாளர் சுதேஷ் ரோட்டரி நிர்வாகிகள் சுசீந்திரன், சாமி செழியன், சுடர்.கல்யாணசுந்தரம், முன்னாள் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் உடனிருந்தனர்.
- 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை செலவீனத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
- பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால் பின்வரும் வழிகாட்டுதலின் படி சிகிச்சைகள் வழங்கப்படும்.
மயிலாடுதுறை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18.12.2021 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சாலை விபத்தால் எற்படும் உயிரிழப்பை குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்துக்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மை காக்கும் 48திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள் பிற மாநிலத்தவர் வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும்கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரைகட்டணமின்றி மருத்துவ சிகிச்சைஅளிக்கப்படும்.
தேர்தெடுக்கப்பட்ட81 மருத்துவ சிகிச்சை முறைகளு க்கு நபர் ஒருவருக்கு ரூ. ஒரு லட்சம்வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
மேலும் இத்திட்டத்தில் சாலை விபத்தில்பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாகஅனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம்வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் (81) சிகிச்சை அளிக்கப்படும் 48 மணி நேரத்திற்குமேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சைநடைமுறைகள் தேவைப்பட்டால் பின்வரும் வழிகாட்டுதலின் படி சிகிச்சைகள் வழங்கப்படும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளிமேற்கொள்ளும் சிகிச்சை திட்டத்தில் அங்கீகரிக்கப்ப ட்டிருத்தல் நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவ மனையிலேயே மேல் சிகிச்சை தொடரலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால் அரசு மருத்துவ மனைக்கு செல்ல தயாராக இல்லை என்றாலோ (அல்லது) தனியார்காப்பீட்டிலோ (அல்லது) பணம் செலுத்தியோ சிகிச்சை பெற விரும்பினால், நோயாளியைநிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையை தனி நபரோசெ லுத்தி சிகிச்சை தொடரலாம்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது, மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 2327 நபர்களுக்கு இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இத்திட்டத்தில் பயன டைந்த மயிலாடுதுறை மாவட்டம்சின்னக்குடியை சேர்ந்த ஜனகன் என்பவர் தெரிவித்தாவது நான் எனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழந்து பலத்த காயமடைந்து மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
நம்மைகாக்கும் 48 திட்டத்தால் தற்போது மூச்சு குழாயில் குழாய் பொருத்தப்பட்டு குணமடைந்து வருகிறேன் முதலமைச்சருக்கு நன்றி.அராயபுரத்தை சேர்ந்த அன்புமணி தெரிவித்தாவது நான் இருசக்கர வாகனத்தில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் நேருக்குநேர் மோதியதில் பலத்த காயம டைந்து அரசு பெரியார் மருத்துவமனையில் இத்திட்ட த்தில் சிகிச்சை பெற்று முதல் அமைச்சருக்கு நன்றி என்று கூறினார்.
- திடீரென ஒருவருக்கொருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
- புனிதனை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே கங்கனபுத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய தெருவில் வசித்து வருபவர் புனிதன் (வயது35).
கூலி தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
புனிதன் நேற்று பணிகளை முடித்துவிட்டு இரவு சக நண்பர்களுடன் தெருவில் மது அருந்தி உள்ளார்.
அப்போது திடீரென ஒருவருக்கொருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
அப்போது அவரின் நண்பர்களான மது போதையில் இருந்த தர்மேந்திரன், ரஞ்சித், பிரசாத் ஆகியோர் புனிதனை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே கீழே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மற்றும் டி.எஸ்.பி. வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து புனிதனின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் புனிதனின் நண்பர்களான துரை மகன் தர்மேந்திரன் (27), பாண்டியன் மகன் ரஞ்சித் (25) மற்றும் பிரசாத் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
புனிதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தென்திசை நோக்கி அருள்பாலிக்கும் பைரவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாரா தனைக் காண்பிக்கப்பட்டது.
ஜம்புகேஸ்வர் கோவிலில் கிருத்திகை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத பால முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு தென்திசை நோக்கி அருள்பாலிக்கும் பைரவர்க்கும் அபிஷேகம் நடைப்பெற்றது,
- காவல்துறை அதிகாரிகளை கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
- பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடுத்தால் மனு ரசீது கொடுப்பதில்லை.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலையத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அப்போது பாதிக்கப்பட்ட மக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளுக்கு துணை போகும்பெரம்பூர் காவல்துறை அதிகாரிகளை கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்தி ரன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சீனிவாசன்மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ், சிங்காரவேலன், சிம்சன், விஜயகாந்த், வெண்ணிலா, மாவட்டக்குழு உறுப்பினர் மார்க்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.
சட்டம் ஒழுங்கு சீர்குலை யாமல் தேசத்தின்பாதுகாவலனாக இருக்கவேண்டிய காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடு த்தால் மனு ரசீது கொடுப்பதில்லை.
நேரடி விசாரனை கூட இருப்பதில்லைமாறாக குற்றவாளிகள் தப்பிக்க அனைத்து வழி வகைக ளையும் பெரம்பூர் காவல்துறை செய்து வருகின்றனர்.
சில புகார்கள் மீது கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்துள்ளது.
வழக்கு பதிவு செய்ய நேரிட்டால் புகார்மனு மீது உரிய வழக்கு பதிவு செய்வதில்லை.
மேலும் காவல்நிலைய ஜாமீனிலே குற்றவாளிகள் தப்பித்து செல்கிறார்கள் என குற்றஞ்சாட்டி முழக்கங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






