search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து பயிற்சி
    X

    உறிஞ்சிக்குழிகள் அமைக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. 

    உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து பயிற்சி

    • வீடுகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைக்கும் முறைகள் குறித்து கொத்தனார்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
    • உறிஞ்சிக்குழி அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கையேடுகளையும் கொத்தனார்களுக்கு வழங்கினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஊராட்சிகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    தமிழக அரசு நித்தடிநீர் மட்டத்தை உயர்த்துவதற்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

    அதேபோல் வீடுகளில் சமையல் அறை, குளியல் அறைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவுநீரை சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், கழிவுநீரை சுத்திகரித்து உறிஞ்சிக்குழிகள் மூலம் கழிவுநீர் மேலாண்மை செய்யும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றனர்.

    இத்திட்டத்திற்கு மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமை தாங்கினார்.

    ஒன்றிய ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட இணை இயக்குனர் முருகண்ணன், செயற்பொறியாளர் பிரேம்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு கழிவுநீரை மேலாண்மை செய்வதற்கு உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    வீடுகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைக்கும் முறைகள் குறித்து கொத்தனார்களுக்கு நேரடி செயல்விளக்கம் அளித்தனர்.

    மேலும் உறிஞ்சிக்குழி அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கையேடுகளையும் கொத்தனார்களுக்கு வழங்கினர்.

    இதில் பல்வேறு ஊராட்சிகளில் இருந்து கொத்தனார்கள் கலந்துகொண்டு மயிலாடுதுறையில் ஊராட்சிகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஒன்றிய கவுன்சிலர்கள் சிவக்குமார், அர்ஜுனன், மேலாளர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×