search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகில இந்திய ஆடவர் கூடைப்பந்து போட்டி: இந்திய கடற்படை அணி வெற்றி
    X

    வெற்றிப் பெற்ற இந்திய கடற்படை அணி.

    அகில இந்திய ஆடவர் கூடைப்பந்து போட்டி: இந்திய கடற்படை அணி வெற்றி

    • அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடைப் பந்தாட்டப் போட்டிகள் நிறைவு விழா நடந்தது.
    • இந்திய கடற்படை அணி அணி வெற்றி பெற்று கோப்பையையும், முதல்பரிசு தொகையான ரூ.1 லட்சத்தினையும் வென்றது.

    சீர்காழி:

    சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 50வது பொன்விழா ஆண்டையொட்டி அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடை பந்தாட்டப் போட்டிகள் நிறைவு விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் அனிதாராதாகிருஷ்ணன், குட்சமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் இயக்கு னர்கள் பிரவீன்வசந்த், அனுஷா பிரவீன், அலெக்சாண்டர், ரினீஷாஜேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி முதல்வர் ஜாஸ்மின் வரவேற்றார். அகில இந்திய அளவில் 8 அணிகள் பங்கேற்று கடந்த 4 நாட்களாக நடைபெற்ற போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

    இதில் இந்திய கடற்படை அணி அணி வெற்றி பெற்று கோப்பையையும் முதல்பரிசு தொகையான ரூ.1 லட்சத்தினையும் வென்றது.

    இரண்டாமிடத்தை இந்திய ராணுவ அணி (சிவப்பு) பெற்று பரிசு தொகை ரூ.75 ஆயிரத்தை வென்றது.

    மூன்றாமிடத்தை இந்திய ராணுவம் (பச்சை) அணி பெற்று பரிசு தொகை ரூ.50 ஆயிரத்தையும், 4ம் இடத்தை ஜேப்பியார் அணி வென்று பரிசுதொகை ரூ.25 ஆயிரத்தை வென்றது.

    வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை, பரிசு தொகையை தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழக தலைவர் ஆதவாஅர்ஜூன் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் கல்வி நிறுவனங்களின் முதல்வ ர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    நிறைவில் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகரசிங் நன்றி கூறினார்.

    Next Story
    ×