search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pipes"

    • ஏற்கெனவே இணைப்பு உள்ள வீடுகளுக்கு குழாய்கள் மாற்றியமைக்கப்படும். இதற்கு கட்டணம் இல்லை
    • புதிய இணைப்புகளுக்கு ரூ.8 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் நகராட்சியில் அம்ரூத் -2.0 திட்டத்தில் புதிதாக குடிநீா் இணைப்பும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய்களை மாற்றிக்கொள்ளலாம் என ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    வெள்ளக்கோவில் நகராட்சியில் அம்ரூத் - 2.0 திட்டத்தில் ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் 142.17 கிலோ மீட்டா் தொலைவுக்கு மெயின், பகிா்மான குழாய்கள் அமைத்து 10 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் மூலம் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஏற்கெனவே இணைப்பு உள்ள வீடுகளுக்கு குழாய்கள் மாற்றியமைக்கப்படும். இதற்கு கட்டணம் இல்லை. புதிய இணைப்புகளுக்கு ரூ.8 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இதனை நான்கு தவணைகளில் செலுத்தும் வசதியும் உள்ளது.எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு புதிய குடிநீா் இணைப்புகள் பெறவும், ஏற்கெனவே இணைப்பு பெற்றவா்கள் குழாய்களை மாற்றியமைத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 3 வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைகள், அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக போடப்பட்ட குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
    • கரும்பு வெட்டும் எந்திரம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 3 வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைகள், அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக போடப்பட்ட குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் கொட்டகையில் இருந்த 3 டிராக்டர்கள் கரும்பு வெட்டும் எந்திரம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. இதேபோல் வடகரையாத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் பூங்கொடி வைத்தியநாதன், கரைபாளையம் பகுதியில் பூங்கோதை என்பவரது வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பட்டதாரி பெண் நித்யா என்பவர் கொலை சம்பந்தமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட நித்யாவின் உறவினரான விவசாயி குழந்தைவேல் (வயது 52) என்பவருக்கு சொந்தமான தோட்டம், கரைப்பாளையம் பிரிவு சாலை அருகே உள்ளது. நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் டிராக்டருக்கு தீ வைத்தனர். மேலும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த 25-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாயையும் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

    இதனிடையே அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தோட்டத்துக்குள் தீ எரிவதை பார்த்து, அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் வந்து, அங்கு எரிந்து நாசமான பவர் டில்லர் டிராக்டரையும், உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து இதுபோன்று தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இளம்பெண் நித்யா கொலை சம்பந்தமாக அவரது குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்ட உறவினர் குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமான பவர் டில்லர் டிராக்டருக்கு தீ வைத்தும் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களை உடைக்கப்பட்டு இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் கொலை செய்து இறந்து போன நித்தியாவின் உறவினர்கள் அவர்கள் சார்ந்த ஜாதி சங்கத் தலைவர்கள் உட்பட பலரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேளாண் கல்லூரி, மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும், நடமாடும் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
    • விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் மணல் குவாரிகளை மூட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செம்பனார்கோவில் மேல முக்கூட்டில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுக்கூட்டமும், கீழமுக்–கூட்டிலுள்ள வரத ராஜன் நினைவரங்கில் மயிலாடுதுறை மாவட்ட 30-வது மாநாடு தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது.

    2-வது நாள் மாநாட்டில் தலைமைக்குழு தேர்வுக்கு பிறகு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நாகையா கொடியினை ஏற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் மேகநாதன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் டி.சிம்சன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியிமாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நாகை மாலி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

    அரசியல், ஸ்தாபன, வேலையறிக்கையை மாவட்ட செயலாளர் துரைராஜ், வரவு-செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் வைரவன் ஆகியோர் வாசித்தனர். விவாதங்கள், தொகுப்புரை, புதிய கமிட்டி தேர்வு, மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வுக்கு பிறகு மாநாட்டு தீர்மானங்களை மாவட்ட துணை செயலாளர் ராயர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இளங்கோ வன், ராமலிங்கம் ஆகியோர் முன்மொழிந்தனர்.

    வைக்கோலை பயன்படுத்தி காகிதம் தயாரிக்கும் தொழிற்சா லையை மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்க வேண்டும். வேளாண் கல்லூரி, மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும், நடமாடும் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகும் மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களை எடுப்பது, ஓ.என்.ஜி.சி. கெயில் குழாய்கள் பதிப்பது போன்ற திட்டங்களை கைவிட வேண்டும், விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் மணல் குவாரிகளை மூட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவீந்திரன் மாநாட்டை வாழ்த்தி பேசினர். பொருளாளராக செல்லப்பா, துணைத்தலை வர்களாக வைரவன், குணசுந்தரி, துணை செயலா ளர்களாக இளங்கோவன், மேகநாதன் உள்ளிட்டோர் அடங்கிய 23 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் தேர்வு செய்ய ப்பட்ட புதிய நிர்வாகிகளை அறிவித்து மாநில செயலாளர் சாமி நடராஜன் நிறைவுரை யாற்றினார். இறுதியாக வரவேற்புக்குழு செயலாளர் கே.பி.மார்க்ஸ் நன்றி கூறினார்.

    • நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கற்கள் கொண்டு வந்து ஆறுகாட்டுதுறை கடலில் கொட்டபடும் பணிகள் நடந்துவருகிறது.
    • அப்பகுதி மக்கள் ஹைட்ரோகார்பன் அல்லது ஓ.என்.ஜீ.சி பணிக்கு வந்தாக சமூக வளைதளங்களில் பதிவிட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை மீனவ கிராமத்தில் 150 கோடியில் துண்டில் முள்வளைவு அமைக்கும் பணி கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது.இப்பணிக்காக நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கற்கள் கொண்டு வந்து ஆறுகாட்டுதுறை கடலில் கொட்டபட்டு பணிகள் நடந்துவருகிறது இந்த நிலையில் வட மாநில லாரி பதிவு எண் கொண்ட 25 லாரிகளில் ராட்சத குழாய்கள் நேற்று நள்ளிரவு வேதாரண்யம் அடுத்த ஆதனூர் அருகே சாலை ஓரம் வரிசையாக நிறுத்தபட்டு இருந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஹைட்ரோகார்பன், அல்லது ஓ.என்.ஜீ.சி பணிக்கு வந்தாக சமூக வளைதளங்களில் பதிவிட்டனர். இதனால் வேதாரண்யம் பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில விவசாய சங்கத்தினர் குழாய்களை இறக்கவிடமால் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர் இந்நிலையில் உடன் வேதாரண்யம் போலீசார் மற்றும் உளவு துறை போலீசார் லாரி நின்ற இடத்திற்கு சென்று விசாரித்தனர். இந்த குழாய்கள் ஆறுகாட்டுதுறை தூண்டில் முள்வளைவு அமைக்கும் பணிக்கு வந்தது என உறுதிசெய்து சமூக வளைதலங்களில் பதிவிட்டனர்.

    இதனால் ராட்சத குழாய் வந்ததால் இரவு 11 மணிக்கு துவங்கிய பரபரப்பு அதிகாலை 5 மணி வரை நிடித்த பி ன்அமைதி ஏற்பட்டது.

    • சுத்திகரிக்கப்படும் நீர், குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வடவாற்றில் விடப்படுகிறது.
    • சுத்திகரிப்பு நிலையத்தில் மேலும் தண்ணீரை நல்லமுறையில் சுத்திகரித்து, அதனை குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடை கழிவுநீர் தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள 4 நீரேற்று நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சுத்திகரிப்பு நிலையம் சரியாக செயல்படவில்லை.இதனால் கழிவுநீர் அப்படியே ஆற்றில் கலப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மேயர் சண்.ராமநாதன் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்பட நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்நிலையில் நேற்று சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்ற மேயர், அங்குள்ள சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படுகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அங்கு மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனலையும் பார்வையிட்டார். அப்போது செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செய ற்பொறியாளர்கள் ரமேஷ், சுபாஷ்சந்திரபோஸ், தமிழ்நாடு நீர் மேலாண்மை கழக குழு தலைவர் எழிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர், மேயர் சண். ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமுத்திரம் ஏரியில் உள்ள சுத்திகரிப்புநிலையம் முறையாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுத்திகரி க்கப்படும் நீர், குழாய்கள் மூலம் கொண்டு செல்ல ப்பட்டு வடவாற்றில் விடப்படுகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் மேலும் தண்ணீரை நல்லமுறையில் சுத்திகரித்து, அதனை குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்ப டுத்தும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    விஸ்தரிப்பு பகுதியில் பாதாள சாக்கடை குழாய்கள் பொருத்தப்பட்டு வருகிறது. விரைவில் இணைப்புகள் வழங்கப்படும். மாநகராட்சி சார்பில் சுத்திகரிப்பு நிலையத்தின் 4 ஏக்கர் பரப்பளவில் மின் உற்பத்தி க்காக சோலார் பேனல் அமைக்கப்பட்டு தினமும் 3 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் மாதம் ரூ.12 லட்சம் வருவாய் கிடைக்கிறது.

    இந்த மின்சாரம் மின் வாரியத்துக்கு வழங்க ப்பட்டு, அதற்கான கட்ட ணத்தை மாநகராட்சி மின் கட்டணத்தில் கழித்து க்கொள்கிறது. தஞ்சை மாநகரில் குற்றங்க ளை தடுக்கும் வகையில் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகி ன்றன. அனைத்து வார்டு களிலும்இந்த கேமராக்கள் பொருத்த ப்பட்டு வருகி ன்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    ×